Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0
Showing posts with label சாதகம் இல்லாதவர்கள். Show all posts
Showing posts with label சாதகம் இல்லாதவர்கள். Show all posts

Wednesday, November 22, 2017

சாதகம் இல்லாதவர்களின் நட்சத்திரம் அறிதல் - வேறுமுறை - பிருகத் ஜாதகா – 205


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்



பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  இருபத்து ஆறு

சாதகம் இல்லாத  நிலை  …தொடர்கிறது


15. ஒருவரின் பெயரில் உள்ள மாத்திரையை இரண்டால் பெருக்கவும்; நிழலின் நீளத்தினைக் கூட்டவும்; அவ்வாறு கிடைத்ததை 27-ஆல் வகுக்கவும்; கிடைக்கும் மீதியானதை அவிட்டத்திலிருந்து எண்ணி வர பிறந்த போது உள்ள நட்சத்திரம் கிடைக்கும்.


குறிப்பு: 

பெயர் என்பது ஒருவருக்கு பிறந்தபோது சூட்டப்பட்ட பெயராகும். குற்றெழுத்து ஒலி ஒரு மாத்திரை, நெட்டெழுத்து ஒலி இரண்டு மாத்திரை, மெய்யெழுத்துக்கள் அரை மாத்திரை. நிழலின் நீளம் என்பது சங்கு எனும் 12 அங்குல அளவுள்ள சங்கின் நிழலாகும்.

[நிமித்திகன்: மாத்திரை – கைநொடிக்கும் பொழுது அல்லது கண் இமைக்கும் பொழுது என்பது ஒரு மாத்திரை அளவாகும்]


16. திக்கு எண்கள் என்பன, கிழக்கு-2; தென்கிழக்கு-3; தெற்கு-14; தென்மேற்கு-10; மேற்கு-15; வடமேற்கு-21; வடக்கு-9; வடகிழக்கு-8 ஆகும். கேள்வி கேட்பவர் பார்த்திருக்கும் திசைக்கு உரிய எண்ணை 15-ஆல் பெருக்கவும்; அவ்வாறு பெருக்கி வந்த எண்ணுடன், அதே திசையை பார்க்கும் உடன் வந்தவர்களின் எண்ணிக்கையையும் கூட்டவும், அதனை 27-ஆல் வகுக்கவும். கிடைக்கும் மீதியானது அவிட்டத்திலிருந்து எண்ணிவர, பிறந்தபோது உள்ள நட்சத்திரம் ஆகும்.

குறிப்பு:
இந்த பத்தி மற்றொரு முறையில் பிறந்தபோது உள்ள நட்சத்திரத்தினை அறியும் முறையினைக் கூறுகிறது.



17.    இவ்வாறு பல்வேறு கணித முறைகளைக் கொண்டு சாதகம் இல்லாதவர்களுக்கும் உரிய சாதகத்தினைப் படைக்க முடியும். அறிவார்ந்தவர்கள் இவைகளைக் கவனமுடன் படித்து பயன்படுத்தவும்.


சாதகம் இல்லாத நிலை – முற்றும்.



அடுத்து – பகுதி – 27 - திரேக்காணத்தின் பலன்கள்.


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17



Tuesday, November 21, 2017

சாதகம் இல்லாதவர்கள் – பகல்-இரவு-ஓரை- அறிதல் - பிருகத் ஜாதகா – 204


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்



பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  இருபத்து ஆறு

சாதகம் இல்லாத  நிலை  …தொடர்கிறது



13.    அவ்வாறு பெருக்கி வந்த(1) எண்ணை 7-ஆல் பெருக்க வரும் எண்ணைக் கொண்டு, பிறப்பானது பகலில் அல்லது இரவில் நடந்ததா என்பதையும் நட்சத்திரத்தினையும் அறிய முடியும்.


குறிப்பு:

1.   இது 11-வது பத்தியில் கூறப்பட்ட 4 பெருக்கல் தொகைகளில் மூன்றாவது ஆகும், அதுனுடன் தேவையெனில் 9-ஐக் கூட்ட வேண்டும் அல்லது கழிக்க வேண்டும். வரும் எண்ணை 2-ஆல் வகுக்க, மீதம் ஒன்று வந்தால் பகல் எனவும் என்றுக்கு மேல் வந்தால் இரவு எனவும் கொள்ள வேண்டும். அதேபோல் அந்த எண்ணை 27-ஆல் வகுக்க வரும் மீதியை அசுவனி முதல் கணக்கிட்டு நட்சத்திரத்தினைக் கண்டு பிடிக்க முடியும்.



14.    அவ்வாறு பெருக்கிவந்த(1) எண்ணை 5-ஆல் பெருக்க வரும் எண்ணைக் கொண்டு, கதி, உதய இராசி, ஓரை, உதய நவாம்சம் ஆகியவற்றை அறிய தீர்மானிக்கலாம்.


குறிப்பு:

1.   இது 11-வது பத்தியில் கூறப்பட்ட 4 பெருக்கல் தொகைகளில் கடைசி ஆகும், அதுனுடன் தேவையெனில் 9-ஐக் கூட்ட வேண்டும் அல்லது கழிக்க வேண்டும். அதனை பிறந்த பொழுதான் பகலின் கதியின் எண்ணிக்கை அல்லது இரவின் கதியின் எண்ணிக்கையால் வகுக்க வேண்டும்; அவ்வாறனதில் வரும் மீதியானது பிறந்தபோது உள்ள சூரிய உதயத்தின் கதிகை அல்லது மறைவின் கதியைக் குறிக்கும். அதே எண்ணை 12-ஆல் வகுக்க, வரும் மீதியானதை மேசத்திலிருந்து கணக்கில் கொண்டால், உதய இராசி கிடைக்கும். அதே எணை 2-ஆக் வகுக்க, கிடைக்கும் மீதியானது 1 எனில் முதல் ஓரையாகவும் ஒன்றிற்கு மேல் எனில் 2வது ஓரையாகவும் பிறந்த பொழுது உள்ளது என்பதை அறியலாம். அந்த எண்னை 9-ஆல் வகுக்க வரும் மீதியானது பிறந்தபோது உள்ள உதய இராசியிலிருந்து எண்ணிவர, நவாம்சத்தின் உதய நவாம்சம் கிடைக்கும்.
இதுபோலவே, அதனை 12-ஆல் வகுக்க வரும் மீதியானது உதய துவதசாம்சத்தினைக் கொடுக்கும்; 3-ஆல் வகுக்க, கிடைக்கும் மீதியானது உதய திரேக்காணத்தைக் கொடுக்கும்.

பின்குறிப்பு: மேற்சொன்ன எல்லா வழிகளிலும், மீதி என்பது இராசி, பாகை, நொடி ஆகியவற்றின் வடிவத்திலேயே உள்ளது. இராசியைக் குறிப்பிடும் எண்ணே, பிறக்கும்போது உள்ள குறிப்பிட்ட நட்சத்திரம், வருடம், பட்சம், திதி, கதி போன்ற எண்களைக் குறிக்கிறது – பாகையும் நொடியும் மட்டுமே எண்களை ஒட்டுமொத்தமாக அதிகப்படுத்திகிறது.


சாதகம் இல்லாத நிலை … தொடரும்



முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17

Monday, November 20, 2017

சாதகம் இல்லாதவர்கள் – ஆண்டு - நாள் அறிதல் - பிருகத் ஜாதகா – 203



வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்



பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  இருபத்து ஆறு

சாதகம் இல்லாத  நிலை  …தொடர்கிறது


11.    மேற்படி முறையில் கணித்த எண்ணை(1), தேவை எனில் மேற்சொன்னவாறு 10, 8, 7, 5 ஆகியவற்றால் பெருக்கவும்; அதனுடன் 9-ஐக் கூட்டவும் அல்லது கழிக்கவும்; அவைகளுக்குரிய எண்ணால் வகுக்கவும்(2), அதன்படி பிறந்த பொழுதின் ஆண்டு, ரிது, மாதம், சந்திர நாள், பகல் அல்லது இரவு, நட்சத்திரம், கதி, உதய இராசி, உதய நவாம்சம் ஆகியவற்றை நீங்கள் கண்டுபிடிக்க முடியும்.


குறிப்பு:

இந்த பத்தியிலும், இதனைத் தொடர்ந்து வரும் மூன்று பத்திகளிலும், ஆசிரியர் மற்றொரு கணக்கீட்டு முறையில், ஒருவரின் பிறந்த ஆண்டு, மாதம் போன்றவற்றைக் கண்டறியும் வகையினைக் குறிப்பிடுகிறார்.

(1)  பத்தி 9-ன் இறுதியில் கண்டுபிடித்த எண்.

(2)  பின்வரும் மூன்று பத்திகளில் இத்தகைய மற்றும் வகுக்கும் முறைகள் பற்றி விளக்கப்படுகிறது.




12.    10-ஆல் பெருக்கிவந்த எண்ணைக் கொண்டு ஆண்டினையும்(வயது), ரிது மற்றும் பிறந்த மாதத்தினையும்(1) கணிக்க முடியும்; 8-ஆல் பெருக்கிவந்த எண்ணைக் கொண்டு பட்சத்தினையும் (15 நாட்கள்) திதியையும் (சந்திர நாள்) கணிக்க முடியும்(2).


குறிப்பு:

(1)  பெருக்கிவந்த தொகை என்பது கடைசி பத்தியில் குறிப்பிட்ட நான்கு பெருக்கல் தொகைகளுடன், தேவையெனில் 9-ஐக் கூட்டியது அல்லது கழித்தது. அவ்வாறான எண்ணிக்கையினை 120-ஆல் வகுக்க, வரும் மீதியைக் கொண்டு அந்த மனிதரின் வயதினைக் கண்டுபிடிக்க முடியும். அதே எண்ணிக்கையினை 6-ஆல் வகுத்தால் வரும் மீதியைக் கொண்டு அந்த மனிதரின் சிசிர ரிதுவைக் கண்டு பிடிக்க முடியும். அதே எண்ணிக்கையினை 2-ஆல் வகுக்க, வரும் மீதியைக் கொண்டு, முதல் அல்லது இரண்டாவது மாதத்தின் ரிதுவைக் கண்டுபிடிக்க முடியும்.

(2)  இந்த பெருக்கம் என்பது சென்ற பத்தியில் குறிப்பிட்ட நான்கு பெருக்கத்தின் இரண்டாவது பகுதியாகும், அது தேவைக்கேற்ப 9-ஐக் கூட்டியது அல்லது கழித்ததாகும். இந்த எண்ணிக்கையினை 2-ஆல் வகுக்க கிடைக்கும் மீதியானது பிறந்த பொழுதின் 15 நாட்களைக் கொடுக்கும். அதே எண்ணை 15ஆல் வகுக்க, கிடைக்கும் மீதியானது சந்திர நாளைக் கொடுக்கும்.


சாதகம் இல்லாத நிலை … தொடரும்


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17


Sunday, November 19, 2017

சாதகம் இல்லாதவர்கள் – நட்சத்திரம் அறிதல் - பிருகத் ஜாதகா – 202


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்



பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  இருபத்து ஆறு

சாதகம் இல்லாத  நிலை  …தொடர்கிறது


10.  அவ்வாறு கிடைத்த எண்ணை 7-ஆல் பெருக்கி, உதய இராசி சரம் (நகர்வு) எனில் அதனுடன் 9-ஐக் கூட்டவும், அல்லது உதய இராசி உபயம்(சமம்) எனில் 9-ஐக் கழிக்கவும், அல்லது உதய இராசி ஸ்திரம்(நிலை) எனில் அப்படியே எடுத்துக் கொள்ளவும்(1), அவ்வாறு கிடைத்த எண் அல்லது வித்தியாச எண் அல்லது பெருக்கலின் எண், அவைகளுக்கேற்ப 27-ஆல் வகுக்கவேண்டும்.  மீதம் வருவது, கேள்வி கேட்பவரின் பிறந்தபோது உள்ள நட்சத்திரத்தின் வரிசை எண் ஆகும். இதே போன்ற கணிதத்தினை, 3வது, 5வது, 6வது 7வது வீடுகளின் ஸ்புடத்திற்கும் செய்யவும்(2), அதன்படி, கேள்வி கேட்டவரின் சகோதரர், மகன், எதிரி, மனைவி ஆகியோரின் நட்சத்திரத்தினை அறியமுடியும்.


குறிப்பு:

(1)  பட்ட-உத்பலரின் கருத்துப்படி, உதய திரேக்கானமானது வீட்டின் முதல் திரேக்கானம் எனில், பெருக்கிவந்த எண்ணுடன் 9-ஐக் கூட்டவேண்டும்; 2வது எனில், 9-ஐக் கூட்டவும் வேண்டாம் கழிக்கவும் வேண்டாம்; 3வது திரேக்கானம் எனில் 9-ஐக் கழிக்கவும்.

(2)  இலக்கின ஸ்புடத்துடன் 2 வீடுகளைக் கூட்டினால், 3வது வீட்டின் ஸ்புடம் கிடைக்கும் அது அவரின் சகோதரரைக் குறிக்கும்; 4 வீடுகளைக் கூட்டினால், 5வது வீட்டின் ஸ்புடம் கிடைக்கும் அது அவரின் மகனைக் குறிக்கும்; இலக்கின ஸ்புடத்துடன் 5 வீடுகளைக் கூட்டினால், 6வது வீட்டின் ஸ்புடம் கிடைக்கும், அது அவரின் எதிரியைக் குறிக்கும்; இலக்கின ஸ்புடத்துடன் 6 வீடுகளைக் கூட்டினால், 7வது வீட்டின் ஸ்புடம் கிடைக்கும், அது அவரின் மனைவியைக் குறிக்கும். இராசி மண்டலத்தின் வீடுகளின் பல்வேறு ஸ்புடத்தினை அத்தகைய வீடுகளில் உள்ள கோள்களின் காரணிகளால் பெருக்கி, அதனைக் கூட்டி, அவ்வாறு வருவதை 7-ஆல் பெருக்கி, தேவைக்கேற்ப அதனுடன் 9-ஐ கூட்டி அல்லது கழித்து, அல்லது 27-ஆல் வகுத்து வரும் மீதியினைக் கொண்டு பல்வேறு மனிதர்களின் நட்சத்திரத்தினை உங்களால் கண்டுபிடித்து கூறமுடியும்.


சாதகம் இல்லாத நிலை … தொடரும்


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17