Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0
Showing posts with label Brihat Jataka 41-50. Show all posts
Showing posts with label Brihat Jataka 41-50. Show all posts

Tuesday, August 18, 2015

பிருகத் ஜாதகா – 50 – கருவில் உள்ளது ஆணா? பெண்ணா? இரட்டையரா?


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்



பிருகத் ஜாதகா

பகுதி   -  நான்கு

கரு தரிக்கும் காலம் அல்லது நிஷேக காலம்

குறிப்பு: (நிமித்திகன்)

கருவில் உள்ளது ஆணா? பெண்ணா? என்று கண்டறிந்து கூறுவது தண்டனைக்குரிய குற்றம். இது மூல நூலின் மொழிபெயர்ப்பு. இங்கு மொழிபெயர்த்த கருத்தினைக் கொண்டு யாரும் பலன் அறியவோ அல்லது பலன் உரைக்கவோ வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.


9.         (கருவுற்ற நேரத்தில்) செவ்வாய் இலக்கினத்திலும், சூரியன் ஏழாவது வீட்டிலும் இருந்தால், கருவுற்ற பெண் ஆயுதத்தால் மரணம் அடைவாள். ஒரு குறிப்பிட்ட மாதத்தின் அதிபதி(1)  பாதிக்கப்பட்டிருந்தால்(2), அந்தக் கருவானது அந்த மாதத்தில் கலைந்து விடும்.

குறிப்பு: (திருசிதம்பரம்)

(1)    பத்தி 16-ல் குறிப்பிடப்பட்டவாறு கருவுற்ற அந்தந்த மாதங்களுக்கு உரிய அதிபதிகள்
(2)    கருவுற்ற நேரத்தில் கோள்களின் யுத்தத்தில் தோல்வி அல்லது மறைவு


10.        சுபக் கோள்கள்(1) சந்திரனுடனோ அல்லது இலக்கினத்திலோ(2), அல்லது அவை சந்திரன் அல்லது இலக்கினத்திற்கு இரண்டு, நான்கு, ஐந்து, ஏழு, ஒன்பது மற்றும் பத்தாவது வீட்டில் இருந்தால், அது சுகப் பிரசவமாக இருக்கும், இருப்பினும், அசுபக் கோள்கள் சந்திரன் அல்லது இலக்கினத்திற்கு மூன்றாவது அல்லது பதினொன்றாவது வீட்டிலும், அதே நேரத்தில் சந்திரன் அல்லது இலக்கினமானது சூரியனுடன் தொடர்பில் இருக்க வேண்டும்(3).


குறிப்பு: (திருசிதம்பரம்)

(1)    அவைகள் முறையே புதன், வியாழன், வெள்ளியாகும்
(2)    அல்லது அதே நேரத்தில் அவை இரண்டும்
(3)    வேறு சில உரைகளின்படி, வியாழனுடன்.
ஆனால் இது சாரவளிக்கு முரனானது.


11.    (1)உதய இராசி, சூரியன், வியாழன், சந்திரன் பலமிகுந்தும் அவை இராசியிலும் நவாம்சத்திலும் ஒற்றைப்படை (ஆண்) இராசியிலும் இருந்தால், அந்த பிறப்பு ஆண் குழந்தையாக இருக்கும்(2); அவை இரட்டைப்படை (பெண்) இராசி அல்லது நவாம்சத்தில் இருந்தால் அந்த பிறப்பு பெண் குழந்தையாக இருக்கும்(3); சூரியனும் வியாழனும்(4) ஒற்றைப்படை இராசியில் இருந்தால், அந்த பிறப்பு ஆண் குழந்தையாக இருக்கும், சந்திரன், வெள்ளி, செவ்வாய்(5) ஆகியவை இரட்டைப்படை இராசியில் இருந்தால் அந்த பிறப்பு பெண் குழந்தையாக இருக்கும். மேலும், சூரியனும் வியாழனும் இரு ஆண் இரட்டைஉடல் நவாம்சத்தில்(6) இருந்து அவை புதனுடன் தொடர்பில் இருந்தால், அந்த பிறப்பு இரட்டை ஆண் குழந்தையாக இருக்கும்; வெள்ளியும் செவ்வாயும் இரு பெண் இரட்டைஉடல் நவாம்சத்தில்(7) இருந்து, புதனுடன் தொடர்பில் இருந்தால் அந்த பிறப்பு இரட்டை பெண் குழந்தையாக இருக்கும்(8).

குறிப்பு: (திருசிதம்பரம்)

(1)  கரு உருவான நேரம் அல்லது பிறப்பு அல்லது அதுபற்றிய கேள்வி பிறரால் கேட்கப்படும் நேரம் – உரையாசிரியரின் கருத்துப்படி.
(2)  &(3) சில கோள்கள் ஆண் இராசியிலும் சில கோள்கள் பெண் இராசியிலும் அல்லது நவாம்சத்திலும் இருந்தால், பாலினமானது வலிமை வாய்ந்த கோளைப் பொருத்து அமையும்.
(4) & (5) கோள்களும் பலமிகுந்து இருக்க வேண்டும்.
(6) மிதுனம் மற்றும் தனுசு ஆகியவற்றின் நவாம்சம்.
(7) கன்னி மற்றும் மீனம் ஆகியவற்றின் நவாம்சம்
(8) நான்கு இரட்டைஉருவ நவாம்சத்துடனும் தொடர்பில் இருந்தால் அந்த பிறப்பு ஆண் இரட்டையர்களாகவும் பெண் இரட்டையர்களாகவும் இருக்கும்.





பகுதி நான்குதொடரும்



முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 - 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-15

Tuesday, August 11, 2015

பிருகத் ஜாதகா – 49 – கரு உண்டாகும் சூழலில் பெற்றோரின் உடல் நிலை


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்



பிருகத் ஜாதகா

பகுதி   -  நான்கு

கரு தரிக்கும் காலம் அல்லது நிஷேக காலம்


4.         கரு உருவாகும் நேரத்தில், செவ்வாயோ அல்லது சனியோ சூரியனிடமிருந்து அல்லது சந்திரனிடமிருந்து 7வது வீட்டில் இருந்தால் கணவனும் மனைவியும் நோயில் விழுவார்கள்(1); ஆனால் செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய இரு கோள்களில் ஏதேனும் ஒன்று 12வது வீட்டிலும், மற்றொன்று  சூரியன் சந்திரனுக்கு இரண்டாம் வீட்டிலும் இருந்தால் அல்லது இரண்டில் ஒரு கோள் சூரியனுடன் அல்லது சந்திரனுடன் இணைந்திருக்க மற்றொன்று சூரியன் அல்லது சந்திரனுடன் தொடர்பில் இருந்தால், அந்த மனிதரும் அவருடைய மனைவியும் மரணத்தை சந்திக்க நேரும்(2).


குறிப்பு (திரு. சிதம்பரம்)

(1) செவ்வாய் அல்லது சனிக்கு உரிய மாதத்தில் (பத்தி 16-ல் விவரிக்கப்பட்டவாறு)

 (2) சனி அல்லது செவ்வாய் ஆகிய இருவரில் எது பலமிகுந்து இருக்கிறதோ அந்த மாதத்தில்.

உரையாசிரியரின் கருத்துப்படி இந்த பத்தியில் கூறப்பட்ட இரண்டு விளைவுகள் குழந்தை பிறப்பதற்கு முன்புதான் ஏற்படும், பிறந்த பிறகு அல்ல.


குறிப்பு: (நிமித்திகன்)

பத்தி 16-ல் கரு உருவாகியதிலிருந்து அதன் வளர்ச்சி ஒவ்வொரு மாதமும் ஒரு கோள் தொடர்புடையது என்று விளக்கப்பட்டிருக்கிறது.



5.         கரு உண்டாவது(1) பகல் என்றால், சூரியனும் சுக்கிரனும் முறையே தந்தை மற்றும் தாயைக் குறிக்கும்; அதுவே இரவு என்றால் சனியும் சந்திரனும் முறையே தந்தை மற்றும் தாயைக் குறிக்கும்முதலில் குறிப்பிடப்பட்டதற்கு, சனியும் சந்திரனும் முறையே தந்தை வழி மாமனையும், தாய் வழி அத்தையையும் குறிக்கும்; இரண்டாவதாகக் குறிப்பிடப்பட்டதற்கு சூரியனும் சுக்கிரனும் முறையே தந்தை வழி மாமனையும், தாய் வழி அத்தையையும் குறிக்கும்தந்தையையும் தந்தைவழி மாமனையும் குறிக்கும் கோள்கள் ஒற்றைப்படை இராசியில் இருந்தால், அல்லது தாயையும் தாய்வழி அத்தையையும் குறிக்கும் கோள்கள் இரட்டைப்படை இராசியிலும் அப்போது இருந்தால், தந்தை மற்றும் தந்தைவழி மாமனும் அல்லது தாய் மற்றும் தாய்வழி அத்தையும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.


குறிப்பு (திரு. சிதம்பரம்)

(1)    அல்லது பிறப்பது - உரையாசிரியரின் கருத்துப்படி.
           


6.          கரு உண்டாகும் நேரத்தில், அசுபக் கோள்கள் பன்னிரெண்டாவது வீட்டில் இருந்தால்(1) மேலும் உதய இராசியானது சுபக் கோள்களுடன் தொடர்பில்லாமல் இருந்தால், அல்லது சனியானது உதய இராசியில் இருந்து கொண்டு தேய்பிறை சந்திரனுடனும், செவ்வாயுடனும் (ஏதேனும் ஒரு வகையில்) தொடர்பில் இருந்தால், கருவுற்ற பெண் மரணமடைவாள்(2).


குறிப்பு (திரு. சிதம்பரம்)

 (1) இரண்டாவது வீடுசில உரையாசிரியர்களின் கருத்துப்படி
 (2) பிரசவத்திற்கு முன்புஉரையாசிரியர் கருத்துப்படி.



7.         அந்த நேரத்தில் உதய இராசி அல்லது சந்திரன் அல்லது இரண்டும் அசுபக் கோள்களுக்கிடையே இருந்தால்(1) மேலும் அதே நேரத்தில் சுபக் கோள்களுடன் தொடர்பு இல்லாமல் இருந்தால், கருவுற்ற பெண் மரணமடைவாள்(2)


குறிப்பு (திரு. சிதம்பரம்)

 (1) இந்த குறிப்பிட்ட நிலையினைப் பொருத்தவரையில், அசுபக் கோள்கள் மூன்று மட்டுமே, முறையே, சூரியன், செவ்வாய் மற்றும் சனிஅதே நேரத்தில் இவைகளுக்கிடையே உதயஇராசியும்(இலக்கினம்) சந்திரனும் இருக்க வேண்டும்அதாவது அவை இரண்டும் ஒன்றினைந்தோ அல்லது அடுத்தடுத்த வீடுகளிலோ இருக்க வேண்டும். உரையாசிரியரின் கருத்துப்படி இலக்கினத்திலிருந்து அல்லது சந்திரனிலிருந்து அல்லது இரண்டிலிருந்தும் அல்லது அவை இருக்கும் நவாம்சத்தின் இரு பக்கங்களில் இருந்து,  அசுபக் கோள்கள் 12வது அல்லது 2வது வீட்டில் இருக்க வேண்டும்.

(2) பிரசவத்திற்கு முன்பும் மற்றும் அசுபக் கோள் பலமிகுந்து இருக்கும் மாதத்திலும்.



8.         (அந்த நேரத்தில்) அசுபக் கோள்கள் இலக்கினத்திலிருந்து அல்லது சந்திரனிலிருந்து 4வது வீட்டிலும் செவ்வாய் எட்டாவது வீட்டிலும் அல்லது இலக்கினத்திலிருந்து செவ்வாய் 4வது வீட்டிலும் சூரியன் 12வது வீட்டிலும் இருக்கும் போது அது தேய்பிறை சந்திரனாக இருக்கும்போது, கருவுற்ற பெண் மரணமடைவாள்.



பகுதி நான்குதொடரும்


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 - 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-15