Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0
Showing posts with label Brihat Jataka 151-160. Show all posts
Showing posts with label Brihat Jataka 151-160. Show all posts

Friday, July 7, 2017

உச்ச-நீச்ச வீடுகளில் கோள்களின் பலன்கள் - பிருகத் ஜாதகா – 160


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்


பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  இருபத்தொன்று


வர்க்கங்களில் கோள்களின் பலன்கள்


2.     ஒருவர் பிறக்கும் நேரத்தில், ஒரே ஒரு கோள் மட்டும் அதன் உச்ச வீட்டில் இருந்து அது தனது நட்புக் கோள்களால் பார்க்கப்பட்டால், அந்த மனிதர் அரசராவார்; பிறக்கும் நேரத்தில் ஏதேனும் ஒரு கோள் அதன் உச்ச வீட்டில் இருப்பதுடன், அதனுடன் அந்த வீட்டில் அதன் நட்புக்கோள்களும் இருந்தால் அந்த மனிதர் பெரும் செல்வந்தராகவும், உலகம் போற்றுபவராகவும் இருப்பார்; பிறக்கும் நேரத்தில், ஏதேனும் ஒரு கோள் அதன் பகை வீட்டில் அல்லது நீச்ச வீட்டில் இருந்தால், அந்த மனிதர் ஏழையாக இருப்பார்; இரண்டு கோள்கள் அவைகளின் பகைவீட்டில் அல்லது நீச்ச வீட்டில் இருந்தால், அந்த மனிதர் துயரங்களால் பாதிக்கப்படுவார்; மூன்று கோள்கள் அவைகளின் பகைவீட்டில் அல்லது நீச்ச வீட்டில் இருந்தால், அந்த மனிதர் முட்டாளாக இருப்பார்; நான்கு கோள்கள் அவ்வாறு இருந்தால், அந்த மனிதர் நோயால் பாதிக்கப்படுவார்; ஐந்து கோள்கள் அவ்வாறு இருந்தால், அந்த மனிதர் சிறை தண்டனை அனுபவிப்பார்; ஆறு கோள்கள் அவ்வாறு இருந்தால், அந்த மனிதர் துன்பத்தின் அடையாளமாக வாழ்வார்; ஏழு கோள்கள் அவ்வாறு இருந்தால், அந்த மனிதர் சித்திரவதை செய்பவர்களால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவார்.


குறிப்பு:

புதனும் சூரியனும் ஒரே நேரத்தில் நீச்ச வீட்டில் இருக்க முடியாது, அதாவது மீனம் மற்றும் துலாத்தில் இருக்க முடியாது. எனவே ஏழு கோள்கள் ஒரே நேரத்தில் அவைகளின் நீச்ச வீட்டில் இருக்க முடியாது. மற்ற நிலைகளை,  இங்கே ஆசிரியர் தமக்கு முந்தைய ஆசிரியர்களின் கருத்தினைப் பதிவு செய்கிறார்.  

வர்க்கங்களில் கோள்களின் பலன்கள்..தொடரும்




முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17


Thursday, July 6, 2017

சொந்த வீட்டில் கோள்களின் பலன்கள் -பிருகத் ஜாதகா – 159


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்




பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  இருபத்தொன்று

வர்க்கங்களில் கோள்களின் பலன்கள்


1.     ஒருவர் பிறக்கும் நேரத்தில் ஒரு கோள் அதன் சொந்த வீட்டில் இருந்தால், அந்த மனிதர் அவரது குடும்பத்தில் சராசரியான மதிப்பினைப் பெற்றிருப்பார்; இரண்டு கோள்கள் அவைகளின் சொந்த வீட்டில் இருந்தால், அவர் தமது குடும்பத்தில் மிக முக்கிய மனிதராக இருப்பார்; மூன்று கோள்கள் சொந்த வீடுகளில் இருந்தால், அந்த மனிதர் உறவினர்களால் மதிக்கப்படுவார்; நான்கு கோள்கள் சொந்த வீட்டில் இருந்தால் அந்த மனிதர் செல்வந்தராக இருப்பார்; ஐந்து கோள்கள் சொந்த வீட்டில் இருந்தால், அவர் வசதியான வாழ்க்கை அமையப் பெறுவார்; ஆறு கோள்கள் சொந்த வீட்டில் இருந்தால் அவர் ஆடம்பரமான வாழ்க்கையினையும் அரசனைப் போல் மகிழ்ச்சியுடனும் வாழ்வார்; ஏழு கோள்கள் சொந்த வீட்டில் இருந்தால், அந்த மனிதர் அரசராக ஆவார்.


மேலும், ஒரு கோள் நட்பு வீட்டில் இருந்தால், அந்த மனிதர் சார்பு வாழ்க்கையினை வாழ்வார்; இரு கோள்கள் நட்பு வீட்டில் இருந்தால், அவரது நண்பர்களால் அவர் பாதுகாக்கப்படுவார்; மூன்று கோள்கள் எனில், உறவினர்களாலும், நான்கு கோள்கள் எனில் சகோதரர்களாலும் ஒன்றுவிட்ட சகோதரர்களாலும் ஆதரிக்கப்படுவதுடன் ஐந்து கோள்கள் எனில், பலருக்கு ஆசானாகவும், ஆறு எனில் படைத் தளபதியாகவும், ஏழு எனில் அரசராகவும் இருப்பார்,

வர்க்கங்களில் கோள்களின் பலன்கள்..தொடரும்




முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17


Wednesday, July 5, 2017

பாவக பலன்களை தீர்மானித்தல் - பிருகத் ஜாதகா – 158



வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்



பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  இருபது

பாவங்களில் கோள்களின் பலன்கள்.. தொடர்ச்சி


10.    இலக்கினத்திலிருந்து, பல்வேறு வீடுகளில் கோள்கள் இருக்கும் பலனுக்கு அந்த வீடுகளின் இயற்கை குணங்களையும் கணக்கில் கொள்ள வேண்டும், அதாவது, அத்தகைய வீடுகளில் பல்வேறு கோள்கள் இருக்கும் நிலையில் அந்த வீடுகள் நட்பு வீடுகளா அல்லது எதிரி வீடுகளா அல்லது சொந்த வீடுகளா அல்லது உச்ச வீடுகளா போன்றவைகளையும் கணக்கில் கொள்ள வேண்டும். மேலும், சத்யாச்சாரியாரின் கருத்துப்படி, சுபக் கோள்கள் பாவத்தில் பலனை அதிகரிக்கச் செய்யும், அசுபக் கோள்கள் குறைக்கச் செய்யும், ஆனால் 6வது 8வது 12வது வீடுகளில் இது எதிர்மறையாக இருக்கும்(2).

குறிப்பு: (1) காரகரின் கருத்துப்படி, உச்சம், மூலத்திரிகோணம், சொந்தம், அல்லது நட்பு வீடுகளில் இருக்கும் கோள்கள் அந்த வீட்டின் பலனை உயர்த்தும். பகை வீடு, நீச்ச வீடு ஆகியவற்றில் இருக்கும் கோள்கள், அந்த பாவத்தின் பலனை குறைக்கும். சம வீடுகளில் இருக்கும் கோள்கள் அந்த பாவத்தின் பலனை உயர்த்தவும் செய்யாது குறைக்கவும் செய்யாது.

(2) அதாவது, ஒரு சுபக் கோளானது 6வது வீட்டில் இருந்தால், எதிரிகளை அழிக்கும், அசுபக் கோள் இருந்தால், எதிரிகள் அதிகமாக இருப்பார்கள். மேலும், சுபக்கோளானது 8வது வீட்டில் இருந்தால், அந்த மனிதர் ஆபத்திலிருந்து தப்பித்துக் கொள்வார், அசுபக் கோள் இருந்தால், அவரது வாழ்வில் ஆபத்துக்கள் அதிகரிக்கும். மேலும், ஒரு சுபக்கோள் 12வது வீட்டில் இருந்தால், அந்த மனிதருக்கு எவ்வித நட்டமும் ஏற்படாது, அசுபக்கோள் இருந்தால், நட்டங்கள் அதிகரிக்கும். இந்தக் கருத்தானது ஸ்வல்ப ஜாதகத்தில் குறிக்கப்பட்டிருப்பதாகும்.


11.    உச்ச வீட்டில் கோள்கள் இருந்தால் கொடுக்கக் கூடிய பலன்கள் அந்த வீட்டில் அவை இருந்தால் முழுமையாகக் கிடைக்கும். அவை மூலத்திரிகோண(1) வீட்டில் இருந்தால், அவை முக்கால் பாக பலனை வழங்கும், அவை சொந்த வீட்டில் இருந்தால், அவை பாதி பலனைக் கொடுக்கும், நட்பு வீட்டில் அவை இருந்தால் கால் பாக பலனைக் கொடுக்கும், பகை வீட்டில் இருந்தால், கால் பாகத்திற்கும் குறைவான பலனைக் கொடுக்கும், நீச்ச வீட்டில் இருந்தால் அல்லது அஸ்தங்கம் ஆகி இருந்தால்(2), அவைகள் கொடுக்கக் கூடிய நல்ல பலன்கள் முழுமையாக இழக்க நேரிடும்.

குறிப்பு:
(1)  பத்தி-14, பகுதி-1 பார்க்கவும்
(2)  பத்தி-2, பகுதி-7-ல் குறிப்பு – பார்க்கவும்
பலன் தீயதாக இருந்தால், அந்தக் கோள்கள் நீச்ச நிலையிலோ அல்லது அஸ்தங்கத்திலோ இருந்தால், தீய பலன்கள் முழுமையாக நேரிடும். அவை எதிரி வீட்டில் இருந்தால், முக்கால் பாகமாகவும், நட்பு வீட்டில் இருந்தால் அரை பாகமாகவும், சொந்த வீட்டில் இருந்தால் கால் பாகமாகவும், மூலத்திரிகோண வீட்டில் இருந்தால் கால் பாகத்திற்கும் குறைவாகவும் தீய பலன்கள் ஏற்படும். ஆனால் அவை உச்ச வீட்டில் இருந்தால், தீய பலன்கள் எதுவும் ஏற்படாது.


பாவங்களில் கோள்களின் பலன்கள் – முற்றும்



அடுத்து – பகுதி – 21 – பல்வேறு வர்க்கங்களில் கோள்களின் பலன்கள்




முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17



Tuesday, July 4, 2017

சனியின் பாவக பலன்கள் - பிருகத் ஜாதகா – 157



வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்


பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  இருபது

பாவங்களில் கோள்களின் பலன்கள்.. தொடர்ச்சி


9.         ஒருவர் பிறக்கும்போது, சனி இலக்கினத்தில் இருந்தால், அந்த மனிதர் ஏழையாகவும், நோய்வாய்பட்டவராகவும், காம இச்சை கொண்டவராகவும், தூய்மை இல்லாதவராகவும், இளவயதில் நோயாளியாகவும், தெளிவில்லாத பேச்சினைக் கொண்டவராகவும் இருப்பார். ஆனால், இலக்கினமானது துலாம், தனுசு, மகரம், கும்பம் அல்லது மீனமாக இருந்தால், அந்த மனிதர், அரசருக்கு உரிய மகிழ்ச்சியுடனும், ஒரு கிராமத்தையோ அல்லது ஒரு நகரத்தினையோ ஆளக்கூடியவராகவும், படித்தவராகவும், நல்ல உடலமைப்பு கொண்டவராகவும் இருப்பார். ஆனால், சனியானது மற்ற இடங்களில் இருந்தால் (2 முதல் 12 வரை), அதன் பலனானது அத்தகைய இடங்களில் சூரியன் இருந்தால் கிடைக்கும் பலனாக இருக்கும்.


பாவங்களில் கோள்கள்.. தொடரும்


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17


Monday, July 3, 2017

வியாழன்-வெள்ளி பாவக பலன்கள் -பிருகத் ஜாதகா – 156



வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்




பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  இருபது

பாவங்களில் கோள்களின் பலன்கள்.. தொடர்ச்சி


7.         ஒருவர் பிறக்கும்போது, வியாழனானது இலக்கினம் முதல் 12வீடுகளில் இருந்தால், அந்த மனிதர் முறையே, கற்றறிந்தவர், நல்ல பேச்சாளர், கருமி, வசதியான வாழ்க்கை, புத்திக் கூர்மையாளர், எதிரிகள் அற்ற நிலை, அவரின் தந்தையைக் காட்டிலும் புகழ்மிக்கவர், அவரது தகுதிக்கு குறைவான வேலைகளை செய்தல், பக்தர், சொத்துக்களை உடையவர், மிகுந்த இலாபம் அடைபவர், தீய குணங்கள் கொண்டவர்.


8.         ஒருவர் பிறக்கும்போது,  வெள்ளியானது இலக்கினத்தில் இருந்தால், காதல் செய்வதில் திறமை மிக்கவராக இருப்பதுடன் வசதியான வாழ்க்கையும் கொண்டிருப்பார்; வெள்ளியானது 7வது வீட்டில் இருந்தால், சச்சரவுகளில் ஈடுபடுபவராகவும் காம இச்சைக் கொண்டவராகவும் இருப்பார்; வெள்ளியானது 5வது வீட்டில் இருந்தால், அவர் வசதியான வாழ்க்கை வாழ்வார், இதர வீடுகளில் இருந்தால்(1) அத்தகைய வீடுகளில் வியாழன் இருந்தால் என்ன பலன் கிடைக்குமோ அதே பலன்கள் கிடைக்கும்; ஆனால் வெள்ளியானது பிறக்கும் நேரத்தில் மீனத்தில் இருந்தால், அந்த மனிதர் செல்வந்தராக இருப்பார்.


குறிப்பு: (1) அதாவது, 2வது, 3வது, 4வது, 6வது, 8வது, 9வது, 10வது, 11வது, 12வது வீடுகள்.


பாவங்களில் கோள்கள்.. தொடரும்


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17