Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0
Showing posts with label Brihat Jataka 191-200. Show all posts
Showing posts with label Brihat Jataka 191-200. Show all posts

Thursday, November 16, 2017

சாதகம் இல்லாதவர்கள் – இலக்கினம் இருக்கும் இராசி - பிருகத் ஜாதகா – 200


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்




பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  இருபத்து ஆறு

சாதகம் இல்லாத  நிலை  …தொடர்கிறது


6. ஒருவர் பிறக்கும்போது சந்திரன் இருக்கும் வீடானது, கேள்வி கேட்கும்போது சந்திரன் இருக்கும் இராசியினால் நீக்கப்படும் இராசிகளாக இருக்கலாம், அதாவது கேள்வி கேட்கும்போது சந்திரனானது உதய இராசியால் விலக்கப்படும்(1). ஆனால் உதய இராசியானது மீனமாக இருந்தால், மீன இராசியே, அவர் பிறக்கும்போது சந்திரன் உள்ள இராசியாக இருக்கும். (சந்தேகம் எழும் எனில்) இராசியினை, அவர் கொண்டுவந்துள்ள ஏதேனும் உணவு பொருட்கள், வேறேதேனும் வடிவங்களின் தோற்றம் அல்லது அந்த நேரத்தில் உணரப்படும் ஒலிகள் ஆகியவற்றைக் கொண்டு தீர்மானிக்க வேண்டும்(2).


குறிப்புகள்:

(1)  எடுத்துக்காட்டாக, கேள்வி கேட்கும் நேரத்தில் விருச்சிகம் உதயமாகவும் மீனம் சந்திரன் இருக்கும் இராசியாகவும் இருப்பதாகக் கொள்வோம். விருச்சிகத்திலிருந்து மீனமானது 5வது வீடு; மீனத்திலிருந்து 5வது வீடு கடகம். எனவே, கடகமானது அந்த மனிதர் பிறந்தபோது சந்திரன் இருந்த இராசியாகும்.

(2)  பொருட்களின் வடிவம் அல்லது இராசியோடு தொடர்புடைய உயிரினங்கள் மற்றும் உயிரினங்கள் எழுப்பும் ஒலி இவற்றைக் கொண்டு சந்திரன் இருக்கும் இராசியினைத் தீர்மானிக்க வேண்டும். இத்தகைய எல்ல நிலைகளிலும், சோதிடரின் பரந்த அறிவானது பல்வேறு குறியீடுகளின் மூலம் அறிந்துகொள்ள பயன்படவேண்டும்.


7.     கேள்வி கேட்கும் நேரத்தில் உதய நவாம்சத்தின் அதிபதி இருக்கும் வீடே பிறந்தபோது  உள்ள உதய இராசியாகும்.(1). அல்லது பிறக்கும்போது உள்ள உதய இராசி என்பது பிரசன்ன இலக்கினத்திலிருந்து விலக்கப்படும் இராசிகள், அதாவது கேள்வி கேட்கும் நேரத்தில் உள்ள உதய திரேக்கானத்திலிருந்து விலக்கப்பட்ட சூரியன் இருக்கும் திரேக்கானமாகும்(2).


குறிப்புகள்:
(1)  கேள்வி கேட்கும் நேரத்தில் உதய திரேக்கானமானது தனுசுவாக இருந்தால், பிறக்கும்போது உள்ள உதய இராசியானது தனுசுவாகும்.

(2)  அதாவது, கேள்வி கேட்கும் நேரத்தில் உதய திரேக்கானமானது, மிதுனத்தின் இரண்டாவது திரேக்கானமாக இருந்து, அதே நேரத்தில் சூரியன் தனுசுவின் 3வது திரேக்கானத்தில் இருப்பது. ஒன்றிலிருந்து மற்றதற்கு இடையே உள்ள திரேக்கானம் மொத்தம் 20. எனவே, பிறக்கும்போது உள்ள உதய இராசி என்பது மிதுனத்திலிருந்து 20வது வீடாகும்.; 20-லிருந்து 12-ஐக் கழிக்க, மிதுனத்திலிருந்து 8வது வீடு, அதாவது மகரத்தின் வீடு.

சாதகம் இல்லாத நிலை … தொடரும்



முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17

Tuesday, November 14, 2017

சாதகம் இல்லாதவர்கள் – சந்திரன் இருக்கும் இராசி - பிருகத் ஜாதகா – 199


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்




பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  இருபத்து ஆறு

சாதகம் இல்லாத  நிலை  …தொடர்கிறது


5. வேறு சிலரின் கருத்துப்படி, பிறந்த பொழுதின் சந்திர மாதத்தினை, கேள்வி கேட்கும்போது சந்திரன் நவாம்சத்தில் இருப்பதைக் கொண்டு தீர்மானிக்க வேண்டும்(1). மேலும், பிறக்கும்போது சந்திரன் இருக்கும் இராசியானது, பிரசன்ன இலக்கினம் அல்லது அதிலிருந்து 5வது வீடு அல்லது 9வது வீடு இவற்றில் அதிக வலிமை மிக்கதாகும். மூன்று வீடுகளில் பலமிக்கதை அறிவது கடினமாக இருப்பின், காலபுருசர் தத்துவத்தின்படி, கேள்வி கேட்பவர் தொட்டுக்கொண்டிருக்கும் உடலின் பாகத்திற்கு உரிய வீடு சந்திரன் இருக்கும் வீடாகும் அல்லது கேள்வி கேட்கும்போது அதுபோன்ற குறிப்பினை உணர்த்துவதைக் கருத்தில் கொண்டு வீட்டினைத் தீர்மானிக்க வேண்டும்(2).

குறிப்பு:

(1)  இதில் உள்ள விதியானது அவ்வளவாக தெளிவில்லாமல் இருக்கிறது. இது பற்றி ஆசிரியர் கூறுவதை உரையாசிரியர் விளக்கமாகக் கூறியிருக்கிறார். ஒவ்வொரு நவாம்சத்தினையும் 9 பாகங்களாகப் பிரித்து அதன்படி தீர்மானிக்கும் முறையினை விளக்கியிருக்கிறார்.


நவாம்ச பாகத்திற்கு பிறகு
நவாம்சம் பாகம்வரை
சந்திர மாதம்
1
மேசத்தின் – 8
துலாத்தின் -7
கார்த்திகை
2
துலாத்தின் – 7
மிதுனத்தின் – 6
மிருகசீரிசம்
3
மிதுனத்தின்-6
கடகத்தின்-5
பூசம்
4
கடகத்தின் – 5
சிம்மத்தின் – 4
மகம்
5
சிம்மத்தின் – 5
கன்னியின் – 7
பூரம்
6
கன்னியின் – 7
துலாத்தின் -6
சித்திரை
7
துலாத்தின் – 6
விருச்சிகத்தின் – 5
விசாகம்
8
விருச்சிகத்தின் -5
தனுசுவின் – 4
கேட்டை
9
தனுசுவின் – 4
மகரத்தின் – 3
பூராடம்
10
மகரத்தின் – 3
கும்பத்தின் -2
திருவோணம்
11
கும்பத்தின் -2
மீனத்தின் – 5
பூரட்டாதி
12
மீனத்தின் -5
மேசத்தின் – 8
அசுவணி

(2)  எடுத்துக்காட்டாக, அந்த நேரத்தில் உயிரினங்கள் உணர்த்தும் அல்லது கேட்கக் கூடிய ஒலி இவற்றைக் கொண்டு இராசியினைத் தீர்மானிக்க வேண்டும்.


சாதகம் இல்லாத நிலை … தொடரும்

Saturday, November 11, 2017

சாதகம் இல்லாதவர்கள் பிறந்த நாள்-நேரம் அறிதல் - பிருகத் ஜாதகா – 198

வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்



பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  இருபத்து ஆறு

சாதகம் இல்லாத  நிலை  …தொடர்கிறது


4.     சோதிட அறிவியலின் அறிஞர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், ஒரு குறிப்பிட்ட இராசியில் சூரியன் கடக்கும் பாகையானது ஒருவரின் பிறந்த நாளின் சந்திர நாளாகும்(1). பிரசன்ன இலக்கினம் பகல் இராசியாக இருந்தால், பிறப்பு இரவில் நிகழ்ந்திருக்கும், இரவு இராசியாக இருந்தால், பிறப்பானது பகலில் நிகழ்ந்திருக்கும். உதய நேரம் கடந்த  உதய இராசியின் பகுதியைக் கொண்டு பிறந்த பொழுதின் கதியைத் தீர்மானிக்க முடியும்(2).


குறிப்பு:

(1)  வளர்பிறைச் சந்திரனின் முதல் சந்திர நாளிலிருன்து கணக்கிட வேண்டும், ஒருவேளை, பிறக்கும் நேரத்தில் தனுசுவின் 24வது பாகையில் சூரியன் இருந்தால், பிறந்த பொழுதான சந்திர நாள் அல்லது திதி என்பது, வளர்பிறை சந்திர நாளில் தொடங்கி கணக்கிட 24 வது நாள் அல்லது  24 – 15 அல்லது தேய்பிறயின் 9வது நாள் என்பதாகும்.

(2)  பகல் பொழுதின் நேரம் அல்லது இரவின் நேரம் என்பது உதய இராசியினைக் கொண்டும் இராசியில் உதயம் கடந்த பொழுதின் ஸ்புடத்தினைக் கொண்டும் அறியவேண்டும். விதி மூன்றின்படி, சரியான பிறந்த நேரத்தினை சூரிய உதயம் அல்லது சூரிய மறவினைக் கொண்டு அறிய முடியும். அவ்வாறு அதனை அறிய முடியுமானால், வான்கணித அட்டவனை அல்லது பஞ்சாங்கத்தினைக் கொண்டு, பிறந்த சாதகக் கட்டம் தயாரிக்க முடியும். இதன்படி, முதல் நான்கு பத்திகள், பிரசன்ன இலக்கினத்தின் மூலம் ஒருவரின் பிறந்த நேரத்தினை அறியும் வகையினைக் கூறுகிறது.

சாதகம் இல்லாத நிலை … தொடரும்


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17


Friday, November 10, 2017

சாதகம் இல்லாதவர்களின் பிறந்த மாதம் - பிருகத் ஜாதகா – 197

  
வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்



பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  இருபத்து ஆறு

சாதகம் இல்லாத  நிலை  …தொடர்கிறது


3. ரிதுவானது அயணத்தோடு ஒத்துவரவில்லை எனில், அடுத்த மாற்று கோளினின் ரிதுவினைக் கணக்கில் கொண்டு ஒருவரின் பிறந்த ரிதுவை(1) தீர்மானிக்க வேண்டும். சந்திரனும் சுக்கிரனும் ஒன்றிற்கு ஒன்று மாற்று கோள்கள். அதுபோல் புதனும் செவ்வாயும்(2), வியாழனும் சனியும். கேள்வி கேட்கும் நேரத்தில் உதய திரேக்கானம் முதல் பாதியாக இருந்தால், பிறந்த மாதம் என்பது ரிதுவின் இரண்டு மாதங்களின் முதல் மாதமாகும்; இரண்டாவது பாதியாக இருந்தால், பிறந்த மாதம் என்பது ரிதுவின் இரண்டாவது மாதமாகும். பிறந்த நாள் என்பது பாதி திரேக்கானத்தின் பகுதியில் உதயமாகி உள்ளதைக் கொண்டு தீர்மானிக்க வேண்டும்(3).


குறிப்பு:

1.   இது பற்றி சென்ற பத்தியில் ஏற்கனவே விளக்கப்பட்டுள்ளது.
2.   உரையாசிரியரின் கருத்துப்படி, புதன், செவ்வாய், சூரியன் ஆகியவை மாற்றுக் கோள்கள்.
3.   கேள்வி கேட்கும் நேரத்தில் உள்ள உதயத்தின் பாதி திரேக்கானமானது  ஒரு மாதத்தின் 30 நாட்களைக் குறிக்கும் என்பதால், உதயத்தின் பாதிக்கு மேல் இருந்தால் அந்த மாதத்தின் 15 நாட்களுக்குள் நிகழ்ந்திருக்க வேண்டும். அதாவது, பிறந்த தேதி என்பதை உதயத்தின் பாதிக்கு மேல் உள்ள பகுதியின் விகிதாச்சாரத்தின் அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும். ஒரு திரேக்கானம் என்பது 10 பாகைகள் கொண்டது; ஒரு திரேக்கானத்தின் பாதி என்பது 5 பாகைகளாகவும், முப்பாதாவது பகுதி என்பது 10 நொடியாக இருக்கும், எனவே உதய திரேக்கானத்தின் ஒவ்வொரு 10 நொடியும் ஒரு நாளைக் குறிக்கும்.

சாதகம் இல்லாத நிலை … தொடரும்


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17