Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0
Showing posts with label வாக்கியம் (எதிர்) திருக்கணிதம். Show all posts
Showing posts with label வாக்கியம் (எதிர்) திருக்கணிதம். Show all posts

Wednesday, April 12, 2017

வாக்கியம் (எதிர்) திருக்கணிதம் (6)








பஞ்சாங்கம் - நண்பரின் கருத்தும் விளக்கமும்


வாக்கியம் (எதிர்) திருக்கணிதம் கட்டுரைத் தொடர்பாக திரு ஓம்பிரகாஷ் அவர்கள் இன்று மின்னஞ்சலில் ஒரு கடிதம் எழுதியிருக்கின்றார். அதனை, மீள்பதிவு செய்திருக்கின்றேன். நிமித்திகனில் வெளிவந்த வாக்கியம்(எ)திருக்கணிதம் கட்டுரையைப் படித்து, அதற்கு கொஞ்சம் ஏற்பாகவும் நிறைய மறுப்பாகவும், நல்லதொரு பதில் பதிவினை வழங்கிய நண்பர் திரு ஓம்பிரகாஷ் அவர்களுக்கு மிக்க நன்றி.


            .திரு.நிமித்திகன்அவர்களுக்குவணக்கம்.

02.04.2017 தேதியிட்டுதாங்கள்எழுதியுள்ளவாக்கியம்எதிர்திருக்கணிதம் (5) என்றகட்டுரையில்அயனாம்சக்கணக்கீடுஇல்லாமல்இருப்பதுவாக்கியம். அயனாம்சக்கணக்கீட்டுடன்இருப்பதுதிருக்கணிதம்என்றுஎழுதியிருக்கின்றீர்கள். இதுதவறாகும்

அயனாம்சக்கணக்கீடுஇல்லாமல்இருப்பதுமேலைநாட்டினர்பின்பற்றும்சாயனமுறைக்கணிதம்தான்

இந்தியாவில்யாவரும்பயன்படுத்தும்நிரயனமுறைக்கணிதத்தில்அயனாம்சம்கணக்கிடப்பட்டுசாயனஸ்புடத்திலிருந்துஅதைக்கழித்துக்கிரகஸ்புடங்களைக்குறிப்பிடுகின்றார்கள்.

எப்படிதிருக்கணிதமுறைப்படியானபஞ்சாங்கங்களில்ஒவ்வொன்றும்வேறுவேறுஅயனாம்சத்தைப்பின்பற்றுகின்றதோஅதேபோல்வாக்கியப்பஞ்சாங்கம்தயாரிப்பவர்களுக்கிடையேயும்அயனாம்சவித்தியாசம்இருக்கின்றது.

ஆனால்அவர்கள்அயனாம்சத்தைத்தங்களதுபஞ்சாங்கங்களில்குறிப்பிடுவதில்லை.
            திருக்பஞ்சாங்கங்கள்எல்லாமேமிகநவீனவானியல்கணிதஅடிப்படையில்தான்தயாரிக்கப்படுகின்றன. அதில்எள்ளளவும்சந்தேகமில்லை

திரிகோணமிதிச்சூத்திரங்களின்படியேஎல்லாத்திருக்கணிதபஞ்சாங்கங்களும்தயாரிக்கப்படுகின்றன. உலகம்முழுமைக்கும்சாயனகிரகஸ்புடங்கள்ஒன்றுதான். நிரயனஸ்புடம்தான்வேறுவேறு

இதற்குக்காரணம்ஒவ்வொருவரும்பின்பற்றும்அயனாம்சமே.
BV.ராமன்வெளியிடும்கிரகஸ்புடங்களுடன்அவரதுஅயனாம்சத்தைச்சேர்த்தால்வரும்சாயனஸ்புடமும்N.C.லாஹிரிவெளியிடும்கிரகஸ்புடங்களுடன்அவரதுஅயனாம்சத்தைச்சேர்த்தால்வரும்சாயனஸ்புடமும்K.P. வெளியிடும்கிரகஸ்புடங்களுடன்கிருஷ்ணமூர்த்திஅயனாம்சத்தைச்சேர்த்தால்வரும்சாயனஸ்புடமும்ஒன்றாகத்தான்இருக்கும். ஆனால்வாக்கியப்பஞ்சாங்கங்களைக்கணிப்பவர்கள்அவர்கள்பயன்படுத்தும்அயனாம்சத்தையும்கிரகஸ்புடங்களையும்கொடுப்பார்களானால்அவைஇரண்டையும்சேர்த்துவரும்சாயனஸ்புடம்வெவ்வேறாகவேஇருக்கும்.

எனவேதிருக்கணிதபஞ்சாங்கங்களிடையேஅயனாம்சம்வித்தியாசம்உள்ளதுவாக்கியப்பஞ்சாங்கங்களிடையேஎந்தவிதவித்தியாசமும்இல்லைஎன்றதொனிஉங்கள்கட்டுரையில்வருவதுதவறாகும்.

திருக்கணிதமுறையைப்பின்பற்றுபவர்களிடையேஅயனாம்சஅளவுவித்தியாசம்இருப்பதைத்தவிர்க்கஇயலாது. ஏனெனில்vernal equinox -ம்இந்தியவானசாஸ்திரிகளால்மேஷம்எனஅழைக்கப்படும்ராசியின்ஆரம்பப்புள்ளியும்எப்போதுஒன்றாகஇருந்தனஎன்பதில்அவர்களுக்கிடையேகருத்துவேறுபாடுஉள்ளது. இரண்டாயிரம்வருடங்களுக்குமுந்திவாழ்ந்தஇந்தியவானசாஸ்திரிகள்அப்போதையகிரேக்கஎகிப்தியவானசாஸ்திரிகள்போலபடம்எதையும்வரைந்துநமக்குவிட்டுச்செல்லவில்லை

மேலும்vernalequinoxமேற்குநோக்கிநகரும்வேகமும்பல்வேறுவானசாஸ்திரிகளால்பல்வேறுவிதமாகக்கூறப்பட்டுள்ளது. அதன்வேகம்ஒவ்வொருநூற்றாண்டுக்கும்வித்தியாசப்படுவதாகத்தற்போதுகணக்கிட்டுள்ளார்கள். எனவேசரியாகஎப்போதுசாயனஸ்புடமும்இநிரயனஸ்புடமும்ஒன்றாகஇருந்ததுஎன்பதுதெரியாதவரைக்கும்அயனாம்சவித்தியாசங்களைத்தவிர்க்கஇயலாது.
மேலும்இந்தச்சிறுவித்தியாசங்கள்கூடச்சோதிடப்பலன்களைப்பெரிதும்மாற்றிவிடும்என்பதையும்ஒப்புக்கொள்வதற்குஇல்லை

நவாம்சம்திரேக்காணம்த்வாதசாம்சம்திரிம்சாம்சம்ஹோராஎன்றபிரிவுகளைத்தவிரவேறுஎதையும்வராகமிகிரர்சொல்லவில்லை. ஒருராசியை 60 பங்குஅளவுக்குப்பிரித்துச்சொல்லும்முந்தையசோதிடஆசிரியர்கள்அல்லது 150 பங்குஅளவுக்குப்பிரித்துச்சொல்லும்நாடிசோதிடர்கள்அதற்கானகாலஅளவைக்கணக்கிடும்கருவியைவைத்திருந்தால்அல்லவோநாம்அந்தப்பிரிவுகளைஒப்புக்கொள்ளவேண்டும்

தங்களதுதிறமையில்நம்பிக்கைஇல்லாததொழில்முறைச்சோதிடர்கள்தாம்இந்தப்பிரிவுகளைக்கொண்டுவந்துபுகுத்திக்கொஞ்சம்நேரம்வித்யாசம்வந்தாலும்பலன்மாறிப்போகும்என்றநம்பிக்கையைவளர்த்திருக்கின்றார்கள்என்றுதான்நான்நம்புகின்றேன்.
பலநூற்றாண்டுகளாகஇந்தியச்சோதிடர்கள்ஜாதகம்எழுதும்போதுராசிநவாம்சம்என்றஇரண்டுகட்டங்களைத்தானேஎழுதுகின்றார்கள்

இந்தஇரண்டும்பொதுவானபலன்கள்சொல்லப்போதுமானவைஎன்றகருத்தின்அடிப்படையில்தானேஅவ்வாறுஎழுதியிருக்கக்கூடும்? அப்படியிருக்கும்போதுசஷ்டியாம்சம்அளவுக்குக்கிரகநிலைகளைக்கணிக்கும்ஒருபொதுவானகணக்கீட்டுமுறைவேண்டும்என்றுநீங்கள்சொல்வதைஒப்புக்கொள்ளஇயலாது. சாயனஸ்புடங்கள்தாம்உலகம்முழுமைக்கும்பொதுவானவை

நிரயனஸ்புடங்கள்பொதுவானஒன்றாகஇருக்கஇயலாது. ஒரேமாதிரியானகணக்குஇருந்தால்மட்டுமேபலனைச்சரியாகச்சொல்லஇயலும்என்றுநீங்கள்சொல்வதும்தவறுதான். ஏனெனில்சாயனமுறையைப்பின்பற்றும்மேலைநாட்டுச்சோதிடர்கள்எல்லோரும்ஒரேமாதிரியாபலனைச்சொல்லுகின்றார்கள்? இல்லையே! பலன்களைச்சரியாகச்சொல்வதுசோதிடரின்தனிப்பட்டதிறமையேதவிரசோதிடர்பின்பற்றும்கணிதமுறைஅல்ல

மேலும்சோதிடத்தால்வாழ்க்கையின்அத்தனைநிகழ்ச்சிகளையும்மிகத்துல்லியமாகச்சொல்லமுடியும்என்றுநம்புவதேதவறுதான். பொதுவானசிலநிகழ்ச்சிகள்சிலகுறிப்பிட்டகாலங்களில்நடைபெறக்கூடும்என்றஅளவுக்குத்தான்பலன்சொல்லமுடியும்

எனவேநீங்கள்வாக்கியம்எதிர்திருக்கணிதம்என்றதலைப்புக்காகஇவ்வளவுநேரம்செலவழிக்கவேண்டாம்என்பதுஎனதுதாழ்மையானஅபிப்ராயம்.


            வாக்கியம்எதிர்திருக்கணிதம்என்பதுநூற்றாண்டுச்சண்டை

திருக்கணிதம்அவ்வப்போதுவரும்திருத்தங்களைச்செய்துதன்னைப்புதுப்பித்துக்கொள்கிறதுஎன்பதையும்வாக்கியம்ஆயிரம்ஆண்டுப்பழமைக்குள்சுகமாகதூங்கிக்கொண்டிருக்கின்றதுஎன்றஉண்மையையும்புரிந்தவர்கள்இந்தசண்டைகளுக்குள்சிக்கிக்கொள்வதில்லை.

அன்புடன்
.ஓம்பிரகாஷ்

திரு ஓம்பிரகாஷ் அவர்களின் வலைதள முகவரி:  www.kanyasasi.com.



ஐயா, தங்களின் பதில் உரையில் குறிப்பிடப்பட்டுள்ள சில தகவல்களுக்கு நான் நிறைய விளக்கங்கள் அளிக்க வேண்டியுள்ளது. அது நீண்டதொரு மறுப்புக் கடிதமாக ஆகிவிடக் கூடாது என்று அஞ்சுகிறேன். அதனால் தவிர்த்து விடுகிறேன். இருப்பினும் ஒரு சில தகவல்களை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

·         என்னைப் பொருத்தவரையில், சோதிடம் என்பது ஒரு கணித அறிவியல்.
·         அதன் அடிப்படை என்பது, Probability, Permutation and Combination கணிதமாகும்.

·         ஆனால் தொன்றுதொட்டே பலன் வரையறை செய்தல் என்பதில், மிகப்பெரும் சோதிட மேதைகளுக்கு இடையேக் கூட, மாறுபட்டக் கருத்து இருந்து வருகிறது.
·         காரகர், வராகமிகிரர், பரசாரர், காளிதாசர், மந்திரேஸ்வரர் போன்ற மாமேதைகளுக்கு இடையே கூட பலன் வரையறை செய்வதில் வேறுபாடு இருப்பதைக் காணமுடிகிறது.

·         ஒரு சாதகத்தினை ஆராய்ந்து பலன் உரைப்பதில், உங்களுக்கும் எனக்கும் கூட நிச்சயம் வேறுபாடு இருக்கக்கூடும்.

·         அவ்வாறு வேறுபாடு இருப்பதற்கு பல்வேறு காரணிகள் இருக்கின்றன.

·         அதில் பஞ்சாங்கங்களும் மிக முக்கியக் காரணியாக இருக்கின்றது என்பது மறுக்கமுடியாத உண்மை.

·         நிமித்திகனில் வெளிவரும் பதிவு ஆய்வு நோக்கில் எழுதுவதால், பஞ்சாங்கத்தினையும் தொட்டு செல்ல வேண்டும் என்பதால், அக்கட்டுரையை எழுதினேன்.

·         அயனாம்சக் கணிதம் என்பது சற்று சிக்கலான, குழப்பமானக் கணிதம் என்பதால், எளிதில் புரிவதற்காக ” அயனாம்சக் கணக்கீடு இல்லாமல் இருப்பது வாக்கியம். அயனாம்ச கணக்கீட்டுடன் இருப்பது திருக்கணிதம்.” என்று எழுதினேன். “அயனாம்ச கணக்கீடு முறையாக இல்லாமல்” என்று எழுதியிருந்தால் சரியாக இருந்திருக்கும் என்று எண்ணுகிறேன். இருப்பினும் தாங்கள் விளக்கமாகச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.

·         தற்போதைய வானியல் கணித அடிப்படையில் திருத்தம் செய்யப்பட்டு, உலகம் முழுமைக்கும் ஒரே பஞ்சாங்கம் கொண்டுவரப்பட வேண்டும் என்பதே சரியான முடிவாக இருக்கும்.  இதைத்தான் இங்கே வலியுறுத்த விரும்புகிறேன்.

·         சோதிடம் என்பது அறிவியல் கணிதம் என்பது உண்மையானால், பலன் உரைத்தல் என்பதில் வேறுபாடு இருக்கக்கூடாது என்பதில் உங்களுக்கு மாறுபட்டக் கருத்து இருக்காது என்று நினைக்கிறேன்.

·         கணக்கீடுகள் என்பது காலந்தோரும் update செய்யப்படவேண்டும்.

·         பிருகத் சாதகத்தில் இராகு-கேது ஆகியவற்றின் முக்கியத்துவம் அறவே இல்லை. ஆனால் இன்று இராகு-கேது இவற்றைத் தவிர்த்துவிட்டு சோதிட பலன் உரைக்க முடியாது. இது கால மாற்றத்தில் வந்தது அல்லவா?

·         எனது உறவினர் ஒருவருக்கு சென்ற மாதம் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. வெறும் 7 நிமிட வித்தியாசம்தான். இராசி மற்றும் நவாம்சத்தில் இரண்டு குழந்தைகளுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லை. கண்டிப்பாக இரண்டு குழந்தைகளும் ஒரே வாழ்க்கை நிலையினை அடையப்போவதில்லை. இந்த சூழலில், ஒரு சாதகத்தினை இன்னும் நுணுக்கமாக எவ்வளவு பிரித்து அறியமுடியுமோ (சஷ்டியாம்சம் அளவிற்கு) அவ்வளவு பிரித்து அறிவதில் தவறில்லை என்றே நினைக்கிறேன்.

·         பலன் உரைத்தல் என்பது சோதிடரின் தனித்துவமான திறமையின் காரணமாகத்தான் அமைகிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அப்படி பலன் உரைப்பதற்கு ஏன் ஒரு தெளிவான கணக்கீட்டினை உருவாக்கக் கூடாது என்பதுதான் என் கேள்வி.

·         என்னைப் பொருத்தவரையில் சோதிடம் என்பது அறிவியற்கணிதம். அது அறிவியற்கணிதம் என்றால் மதங்களுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும். அகஸ்டினும் ஏற்றுக் கொள்ள வேண்டும், அப்துல்லாவும் ஏற்றுக் கொள்ள வேண்டும், அறிவு நம்பியும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

·         எல்லா கணித ஆசிரியரும் சிறப்பாக கணிதம் போடுவதில்லை. ஆனால் எல்லோருக்கும் கணித விதிமுறைகள் ஒன்றுதான். அதுபோலத்தான் சோதிடமும் இருக்க வேண்டும். எல்லா சோதிடர்களும் சிறப்பாக பலன் உரைப்பதில்லை என்றாலும், அடிப்படைக் சோதிடக் கணித விதிமுறைகள் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும். அப்போதுதான், சோதிடத்தின் நம்பகத்தன்மை வலிமை பெறும்.

·         சோதிடம் பொய்யாய் போவதற்கு காரணிகள் நிறைய இருக்கின்றன. அவைகளை சரிசெய்யாமல், சோதிடம் அறிவியல் என்று கூறுவது முறையல்ல என்பதே எனது கருத்து.

அன்புடன்
நிமித்திகன்.

Sunday, April 2, 2017

வாக்கியம் (எதிர்) திருக்கணிதம் (5)




உலகம் முழுமைக்கும் ஒரே பஞ்சாங்கம்



நாம் சென்ற பதிவுகளில், வாக்கியத்திற்கும், திருக்கணிதத்திற்கும் உள்ள மிக முக்கியமான, அடிப்படையான வேறுபாட்டினைக் கண்டோம். அதாவது, அயனாம்சம் எனப்படும் நகர்வின் அளவீடு. அயனாம்சக் கணக்கீடு இல்லாமல் இருப்பது வாக்கியம். அயனாம்ச கணக்கீட்டுடன் இருப்பது திருக்கணிதம்.


திருக்கணித முறையானது மிகச்சரியானக் கணிதமுறை என்றால், அனைத்து திருக்கணித பஞ்சாங்கங்களும் ஒரே அளவீட்டில் தயாரிக்கப்படுகின்றனவா எனும் கேள்வி எழுகிறது. அவ்வாறு இல்லை என்பதே உண்மை. திருக்கணித பஞ்சாங்கமானது லகிரி அயனாம்சம், இராமன் அயனாம்சம், கிருஷ்ணமூர்த்தி அயனாம்சம், சபேரியல் அயனாம்சம், . . .  என்று எது அவர்களுக்கு ஏற்புடையதாக இருக்கின்றதோ அந்த அடிப்படையில் தயாரிக்கப்படுகிறது.


ஆக, திருக்கணித முறையிலேயே பஞ்சாங்கங்களில் வித்தியாசம் இருக்கிறது. அந்த வித்தியாசத்தின் அளவு என்பது, மீச்சிறு அளவு என்றாலும், வித்தியாசம் என்பது வித்தியாசம் தானே. அந்த வித்தியாசத்தின் அளவீட்டினால், சாதகக் கணிப்பு என்பது துள்ளியமற்று போய்விடும் என்பது உண்மைதானே.


வாக்கியத்திற்கும், திருக்கணிதத்திற்கு உள்ள வித்தியாசம் என்பது அயனாம்ச கணக்கீடுதான் எனும் நிலையில், திருக்கணித முறையினிலேயே வித்தியாசம் இருப்பது, வாக்கிய நிலைப்பாட்டில் இருப்பவர்களுக்கு ஆதரவான கருத்தாக இருக்கிறது. அதாவது, முதலில் உங்களிடையே அயனாம்ச அளவு பற்றி ஒத்தக் கருத்தினை உருவாக்கிக் கொண்டு, பின்னர் எங்களிடம் (வாக்கியம்) வாருங்கள் என்பதாக இருக்கிறது.


ஆனால் வாக்கியக்காரர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். திருக்கணித பஞ்சாங்கங்களில் இருக்கும் வித்தியாசம் என்பது மீச்சிறு (மிக மிகக் குறைவான வித்தியாசம்) வித்தியாசம்தான். ஆனால் வாக்கியத்திற்கும் திருக்கணிதத்திற்கும் இருக்கும் வித்தியாசம், மிகப் பெரும் அளவு அல்லவா? இதனால், ஒரு கோளின் நிலையானது வீடு விட்டு வீடு அல்லது இராசி விட்டு இராசி அல்லவா மாறுபடுகிறது. இதனால் கணிப்பு என்பது பெரும் தவறாகிப் போகும் அல்லவா?


அயனாம்ச வித்தியாசம் என்பது வானியல் வல்லுனர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. அதைத்தான் திருக்கணித முறையாளர்கள் பயன்படுத்துகின்றனர். புதியன புகுதலும் பழையன கழிதலும் வழுவல கால வகையினானே எனும் நன்னூல் சூத்திரத்தின்படி, காலத்திற்கேற்ப மாற்றங்களை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.


தொகுப்பாக:

சோதிட பலன் உரைத்தல் என்பது, கோள்களின் இருப்பு நிலையினைக் கொண்டு கணிக்கப்படுவது. கோள்களின் இருப்பு நிலை என்பது, பஞ்சாங்கங்களின் குறிப்புகளைக் கொண்டு கணிக்கப்படுவது. பஞ்சாங்கங்களிடையே வித்தியாசம் இருக்கும் நிலையில் கணிப்பு என்பது தவறாகப் போவதற்கு வாய்ப்புகள் நிறைய உண்டு. அதன் முடிவானது, சோதிடம் பொய் எனும் நிலைக்கு தள்ளப்படுகிறது.


வாக்கியத்தினைப் பொருத்தவரையில், தற்போதைய மாற்றங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். திருக்கணித முறை என்பது வராகமிகிரர் காலத்திலேயே பயன்பாட்டில் வந்துவிட்டது. அது இன்றைய காலத்திற்கேற்ப மேம்படுத்தப் (UPDATED)பட்டுள்ளது. அதற்கு காரணம் இன்றைய வான் அறிவியல் வளர்ச்சியும், கணிணிப் பயன்பாடும் மிகமுக்கியமானது. ஆனால் இப்போது எழும் கேள்வி எல்லாம்,  அது லகிரி முறையோ அல்லது கிருஷ்ணமூர்த்தி முறையோ எது சிறந்த முறை என்பதைத் தீர்மானிப்பதைக் காட்டிலும், அனைவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய, உலகம் முழுமைக்கும் பொதுவான (universal acceptance) முறையாக இருக்க வேண்டும் என்பதுதான்.


அவ்வாறு பொதுவான முறையினை ஏற்றுக் கொள்ளும்போது, சோதிட அறிஞர்கள் ஒன்றுகூடி, அந்தக் கணிதமுறையில் கணிக்கப்படும் சாதகத்தில் கோள்களின் நிலையினைத் துள்ளியமாக இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். அவ்வாறு உறுதி செய்தபின், அதன் அடிப்படையில் பலன் உரைத்தல் என்பது துள்ளியமாக உள்ளதா என்பதனையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.


வானியல் கோட்பாட்டின்படி செயற்கைக் கோள்களும், ராக்கெட்டுகளும் துள்ளியமாக வானில் செலுத்தும்போது, அதே கோட்பாட்டினை, பொதுக் கோட்பாடாக ஏன் சோதிடத்திற்கும் ஏற்றுக் கொள்ளக்கூடாது.


உலகம் முழுமைக்கும் ஒரே கணக்கீட்டின்படி உருவாக்கப்படும் பஞ்சாங்கம்தான் இப்போதைய தீர்வாக இருக்க வேண்டும். 


இல்லையெனில், சோதிடம் பொய்யாய் போவதற்கு பஞ்சாங்கம்தான் மிக முக்கியக் காரணியாக இருக்கும்.



[குறிப்பு: இந்தக் கட்டுரையில் அயனாம்சம் பற்றிய அடிப்படை விளக்கமும், வாக்கியத்திற்கும் திருக்கணிதத்திற்கும் உள்ள அடிப்படை வேறுபாட்டினையும் மட்டுமே விளக்கி உள்ளேன். வாக்கியத்தை மேம்படுத்தியதுதான் திருக்கணிதம். அதனால் திருக்கணித முறையே சரியானது என்பதில் தவறில்லை. ஆனாலும் திருக்கணித முறையும் இன்னும் மிகத் துள்ளியமாக, தற்போதைய வானியல் கணித அடிப்படையில் திருத்தம் செய்யப்பட்டு, உலகம் முழுமைக்கும் ஒரே பஞ்சாங்கம் கொண்டுவரப்பட வேண்டும் என்பதே சரியான முடிவாக இருக்கும்].




Tuesday, March 28, 2017

வாக்கியம் (எதிர்) திருக்கணிதம் (4)




அயனாம்சம் .. தொடர்ச்சி


அயனாம்சம் பற்றி திரு சிதம்பரம் அய்யர், பிருகத் ஜாதக முன்னுரையில் குறிப்பிடுவதை இங்கே மீள்பதிவு செய்கிறேன். இது பிருகத் ஜாதகா பதிவு 12 & 13 –ல் பதிவிடப்பட்டது


இந்த முன்னுரை 1885- ஆண்டில் எழுதப்பட்டது

            சோதிடம் வானியல் மீது பயணிக்கிறது. விக்ரமாதித்தன் காலத்தில் பிந்தைய (வானியல்) அறிவியலானது நல்ல நிலையில் இருந்தது. கோள்களின் இருப்பிடங்கள் குறித்து அப்போது நிறுவப்பட்டு பயன்பாட்டில் இருந்த கணக்கீடுகளின் அட்டவனையானது, அக்காலத்திற்கு மிகவும் பொருத்தமானதாக இருந்து வந்துள்ளது. சூரிய மண்டல அமைப்பின் கணக்கீடுகளில் தொடர்ந்து ஏற்பட்டுவந்த பல்வேறு சிறு பிழைகளால், ஒருகாலத்தில் பொருந்திவந்த அத்தகைய அட்டவணைகள், பின்னொரு காலத்திற்கு பொருந்தாமல் போயிற்று. இந்த உண்மைய இந்திய வானியலாளர்கள் உணர்ந்திருந்தனர். அதனால், எதிர்கால வானியல் அறிஞர்களுக்கான வழிகாட்டியாக விரிவார்ந்த விதிகளை வகுத்திருந்தனர்.

            கணிதம் செய்வதில் ஏற்படும் பிழையானது, ஒரு வேதியனைக் கொல்வதற்கு ஒப்பாகும் என்பதால், வான் வெளியினைத் தினமும் உற்று நோக்கி கோள்களின் சரியான இருப்பிடத்தை உறுதி செய்ய வேண்டும்.

            இதனைச் சரியான உற்றுநோக்கு இல்லாமல் செய்ய முடியாது. இந்த பூமியில் அவ்வாறான அறிஞர்களும் இருந்தனர்; ஆனால் அயல்நாட்டினரின் படையெடுப்பு, நாட்டை ஆண்டு கொண்டிருந்தவர்களிட மிருந்து சரியான ஊக்குவிப்பு இல்லாமை ஆகியவற்றால், இந்த அறிவியலானது முன்னேறிச் செல்ல முடியாமல் போனது, அதனால் முன்பு சொன்ன கணக்கீடுகளின் அட்டவணை, திருத்தம் செய்யப்படாமல் போனதால், பயனற்றும் போயிற்று. அதனால், உள்ளூர் சோதிடர்களால் தயாரிக்கப்பட்ட நாட்காட்டிகளால், கோள்களின் உண்மையான இருப்பிட நிலையைக் கொடுக்கமுடியவில்லை. இத்தவறானது கடந்த 1000 ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

            ஐரோப்பா மற்றும் அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட கடல்சார் பஞ்சாங்கம் வரைபடமானது, கோள்களின் சரியான இருப்பிட நிலையைத் தெரிவிக்கின்றன; மற்றும் திருவாளர்கள்: பனாரசின் பாபு தேவ சாஸ்த்ரி, பூனாவின் லட்சுமண சத்ராய், மதராசின் இரகுநாதச் சாரியார், கும்பகோணம் வெங்கடேஸ்வர தீட்சிதர், சுந்தரேஸ்வர சுருதி ஆகியோர் சரியான புதிய அட்டவணையின் அடிப்படையில் பஞ்சாங்கள் தயாரிக்க ஆரம்பித்துள்ளனர். இத்தகைய அட்டவணைகள், நாம் கோள்களின் சரியான இருப்பிடத்தை வான்-புவி வெட்டுப்புள்ளியிலிருந்து (vernal Equinox), அதாவது சூரிய சுற்றுப்பாதையும் புவிப்பாதையும் வெட்டிக்கொள்ளும் இரண்டு மையப்புள்ளிகளிலிருந்து, நாம் அறிய உதவுகின்றன. இப்புள்ளியானது மேசத்தின் மேற்குப்பகுதியின் முதல் புள்ளியாகும்.

            இதன் சுற்றானது வருடத்திற்கு 50” எனும் அளவில் பின்தங்குகிறது. ஆனால், இந்தியக் கணிதத்தின்படி மேசத்தின் முதல் புள்ளியானது சூரியப்பாதையில் உள்ள ரேவதி விண்மீன் (யோகதாரா தொகுப்பில்) மீது அமைந்துள்ளது. இந்த விண்மீனானது வான்-புவி வெட்டுப்புள்ளிக்கு (vernal Equinox) கிழக்கே 20o உள்ளது. இந்த விண்மீனிலிருந்து கோள்களின் இருப்பிடத்தைக் கணிப்பது  நிர்ணய ஸ்புடம் என்றும், vernal Equinox-லிருந்து இருப்பிடத்தைக் கணிப்பது சாயன ஸ்புடம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த இரண்டு புள்ளிகளுக்கும் இடையே ஏற்படும் சிறு இடைவெளி வித்தியாசமானது அயனாம்சம் என அழைக்கப்படுகிறது. இந்திய சோதிடமானது  கோள்களின் நிர்ணய ஸ்புடம் எனும் கணக்கினையும், நவீன அட்டவணையானது நமக்கு சரியான சாயன ஸ்புடத்தையும் தருகிறது; எனவே, அயனாம்சத்தின் அளவு துள்ளியமாகத் தெரிய வருமானால், அதனை சாயன ஸ்புடத்திலிருந்து கழிக்கலாம்அதன் மீதமானது நிர்ணய ஸ்புடத்திற்கு தேவையாகும். ஆனால் மிகச்சரியான அயனாம்சம் தெரியவில்லை, அதனை நேரடியாகக் உற்றுநோக்கி அறிய முடிவதில்லை, ஏனெனில் ரேவதி விண்மீனானது மறைந்து விட்டது. இந்த பொருள் பற்றி ஏப்பிரல் (1883) தியோசொபிஸ்ட் இதழில் எழுதியிருக்கிறேன். பல்வேறு பஞ்சாங்க வெளியீட்டாளர்கள், தங்களுக்கு ஒத்துவரும் வகையில், தன்னிச்சையாக பல்வேறு அயனாம்ச இடைவெளி அளவினைக் குறிப்பிடுகிறார்கள்.



ஆக, அயனாம்சம் என்பது நிராயனத்திற்கும் சாயனத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் என்பது தெளிவாகிறது. தற்போதைய நடைமுறையில் அயனாம்ச மதிப்பானது பலவேறாக உள்ளது. இதில் குறிப்பாக, திரு லஹிரிமுறை, திரு கிருஷ்ணமூர்த்தி. முறை, திரு இராமன் முறை ஆகிய மூவரின் முறை பெரும்பாலும் நடைமுறையில் உள்ளது.


இதில் குறிப்பிடத்தக்க செய்தி என்னவென்றால், இந்த மூவரின் முறையினையும் பயன்படுத்தி, திருக்கணிதமுறை பஞ்சாங்கங்கள் வெளிவருகின்றன. இதுமட்டுமின்றி, நாசாவின் வானியல் கணக்கீட்டினை அடிப்படையாகக் கொண்டு இந்திய அரசின் ஆதரவோடு கொல்கத்தாவில் உள்ள Rashtriya Panchang and Positional Astronomy Centre, பஞ்சாங்கம் தயாரித்து அளிக்கிறது.  எவ்வாறு இருப்பினும் திருக்கணித பஞ்சாங்கங்களுக்கு இடையேயே கணக்கீட்டில் மீச்சிறு வித்தியாசங்கள் இருக்கின்றன.


ஆனால் இத்தகைய எவ்வித கணக்கீட்டு முறைகளுக்கும் உட்படாமல், நட்சத்திர மண்டலம் அசைவற்றது எனும் கோட்பாட்டுடன் தயாரிக்கப்படுவதுதான் வாக்கிய பஞ்சாங்கம்.


மேலும் தொடர்வோம்….