Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Saturday, November 29, 2014

பிருகத் ஜாதகா – தமிழில்-12

            

வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்

அறிமுகம்(தொடர்ச்சி)            சோதிடம் வானியல் மீது பயணிக்கிறது. விக்ரமாதித்தன் காலத்தில் பிந்தைய (வானியல்) அறிவியலானது நல்ல நிலையில் இருந்தது. கோள்களின் இருப்பிடங்கள் குறித்து அப்போது நிறுவப்பட்டு பயன்பாட்டில் இருந்த கணக்கீடுகளின் அட்டவனையானது, அக்காலத்திற்கு மிகவும் பொருத்தமானதாக இருந்து வந்துள்ளது. சூரிய மண்டல அமைப்பின் கணக்கீடுகளில் தொடர்ந்து ஏற்பட்டுவந்த பல்வேறு சிறு பிழைகளால், ஒருகாலத்தில் பொருந்திவந்த அத்தகைய அட்டவணைகள், பின்னொரு காலத்திற்கு பொருந்தாமல் போயிற்று. இந்த உண்மைய இந்திய வானியலாளர்கள் உணர்ந்திருந்தனர். அதனால், எதிர்கால வானியல் அறிஞர்களுக்கான வழிகாட்டியாக விரிவார்ந்த விதிகளை வகுத்திருந்தனர்.            கணிதம் செய்வதில் ஏற்படும் பிழையானது, ஒரு வேதியனைக் கொல்வதற்கு ஒப்பாகும் என்பதால், வான் வெளியினைத் தினமும் உற்று நோக்கி கோள்களின் சரியான இருப்பிடத்தை உறுதி செய்ய வேண்டும்.

            இதனைச் சரியான உற்றுநோக்கு இல்லாமல் செய்ய முடியாது. இந்த பூமியில் அவ்வாறான அறிஞர்களும் இருந்தனர்; ஆனால் அயல்நாட்டினரின் படையெடுப்பு, நாட்டை ஆண்டு கொண்டிருந்தவர்களிட மிருந்து சரியான ஊக்குவிப்பு இல்லாமை ஆகியவற்றால், இந்த அறிவியலானது முன்னேறிச் செல்ல முடியாமல் போனது, அதனால் முன்பு சொன்ன கணக்கீடுகளின் அட்டவணை, திருத்தம் செய்யப்படாமல் போனதால், பயனற்றும் போயிற்று. அதனால், உள்ளூர் சோதிடர்களால் தயாரிக்கப்பட்ட நாட்காட்டிகளால், கோள்களின் உண்மையான இருப்பிட நிலையைக் கொடுக்கமுடியவில்லை. இத்தவறானது கடந்த 1000 ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

            ஐரோப்பா மற்றும் அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட கடல்சார் பஞ்சாங்கம் வரைபடமானது, கோள்களின் சரியான இருப்பிட நிலையைத் தெரிவிக்கின்றன; மற்றும் திருவாளர்கள்: பனாரசின் பாபு தேவ சாஸ்த்ரி, பூனாவின் லட்சுமண சத்ராய், மதராசின் இரகுநாதச் சாரியார், கும்பகோணம் வெங்கடேஸ்வர தீட்சிதர், சுந்தரேஸ்வர சுருதி ஆகியோர் சரியான புதிய அட்டவணையின் அடிப்படையில் பஞ்சாங்கள் தயாரிக்க ஆரம்பித்துள்ளனர். இத்தகைய அட்டவணைகள், நாம் கோள்களின் சரியான இருப்பிடத்தை வான்-புவி வெட்டுப்புள்ளியிலிருந்து (vernal Equinox), அதாவது சூரிய சுற்றுப்பாதையும் புவிப்பாதையும் வெட்டிக்கொள்ளும் இரண்டு மையப்புள்ளிகளிலிருந்து, நாம் அறிய உதவுகின்றன. இப்புள்ளியானது மேசத்தின் மேற்குப்பகுதியின் முதல் புள்ளியாகும்.முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 - 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014


Tuesday, November 25, 2014

பிருகத் ஜாதகா – தமிழில்-11

            

வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்

அறிமுகம்(தொடர்ச்சி)


            மீண்டும், சொர்க்கங்கள் அண்டத்தை உருவாக்குகின்றன என்றால், மனிதன் பிண்டமாக இருக்கிறான். மறுமொழியில், ஒவ்வொரு மனிதனும், இந்த பிரபஞ்சத்தைத் துள்ளியமாகப் பிரதிபலிக்கும் ஒரு சிறு உலகம்வெளியில் ஒன்றுமில்லாமல் தெரிந்தாலும், உள்ளுக்குள் செயல்படும் உலகம். அத்தகைய உலகத்தை மெய்ஞானத்தால் மட்டுமே ஒரு யோகியால் அறியமுடியும்மறைநிலை (அமானுஷ்ய) அறிவியல் இது பற்றி சொல்வதாவது:-
            சூஷ்மநாடியில் பிராணவாயுவை (உயிர்வளி) எடுத்துக்கொள்ளும்போது, எட்டு விதமான இசையினை உணரமுடிவதுடன், தீ, வெளிச்சம், விண்மீன்கள், சந்திரன் மற்றும் சூரியன் ஆகியவையும் காணக் கிடைக்கும். மீண்டும், முன்பு சொன்ன பகுதி-VI-ல், பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாயானது, செவ்வாயும் சந்திரனும் ஒருவருடன் ஒருவர் தொடர்புகொள்ளும்போது நிகழும் என வராகமிகிரர் கூறுகிறார். இது தொடர்பாக, சாரவளியின் ஆசிரியர் இவ்வாறு கூறுகிறார்.
            “சந்திரன் நீர், செவ்வாய் நெருப்பு; பித்தம் என்பது நீரும் நெருப்பும் கலப்பதனால் ஏற்படுவது, பித்தமானது குருதியுடன் கலக்கும்போது, பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுகிறது".

            எனவே, வெளியில் ஏற்படும் மாற்றங்களால், உள்ளிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன, மேலும் மனிதனின் உடலின் ஒவ்வொரு உறுப்பும் அல்லது துளியும் அதன் பிரதிநிதியை சொர்க்கத்தில் வைத்துள்ளன. அவ்வாறு இருக்கும்போது, மேலே உள்ள கோள்கள் மற்றும் விண்மீன்கள் ஆகியவற்றிற்கும் கீழே உள்ள மனிதனுக்கும், ஒரு நுண்ணியத் தொடர்பு இருக்க, அத்தகைய நுண்ணியத் தொடர்பை உணரமுடியாமலும் உள்ளது.

            நாம் இப்போது, சோதிடக் கணிப்புகள் பொய்யாவதற்கான சில காரணங்களைப் பார்ப்போம்; அதில் மிக முக்கியமானதை இப்போது எடுத்துக் கொள்வோம்.


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 - 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014