Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0
Showing posts with label திரேக்காண பலன்கள். Show all posts
Showing posts with label திரேக்காண பலன்கள். Show all posts

Tuesday, December 5, 2017

மீனத்தின் திரேக்காண பலன்கள் -பிருகத் ஜாதகா – 217



வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்




பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  இருபத்து ஏழு

திரேக்காண பலன்கள்.. தொடர்ச்சி

[குறிப்பு: இராசிகளின் வடிவங்களைக் கொண்டு பொதுப்பலன் உரைப்பது போல்
   இங்கு திரேக்காண வடிவங்கள் விளக்கப்பட்டுள்ளன]


34. மீனத்தின் முதல் திரேக்காணமானது கமண்டல பாத்திரத்தையும், கம்பம், முத்து, மணிகள், சங்குகள் ஆகியவற்றைக் கையில் கொண்டும், அணிகலன்களைச் சுமந்தும், தனது மனைவியை அழகுபடுத்துவதற்காக கடலின் பயணம் செய்வதாக இருக்கும்.

குறிப்பு: இந்த திரேக்காணமானது ஆணின் வடிவில் இருக்கும். இதன் அதிபதி வியாழன்.



35. மீனத்தின் இரண்டாவது திரேக்காணமானது கையில் நீண்ட கொடியும் பதாகையைச் சுமந்தும், கடலின் அக்கரையைக் கடக்க தனது தோழியுடன் படகில் செல்வதாகவும், செண்பகமலர் போன்று மலர்ந்த முகமும் கொண்டிருக்கும்,

குறிப்பு: இந்த திரேக்காணமானது பெண்ணின் வடிவில் இருக்கும். இதன் அதிபதி சந்திரன்.



36. மீனத்தின் மூன்றாவது திரேக்காணமானது தன் உடலைப் பாம்பு சுற்றிய மனிதனாகவும், ஆடையற்று காட்டில் ஒரு பள்ளத்தின் விளிம்பில் நிற்பதாகவும், திருடர்கள், நெருப்பு ஆகியவற்றாலும், பசியாலும் அழுகையாலும் இருப்பதாகவும் காணப்படும்.

குறிப்பு: இந்த திரேக்காணமானது பாம்பின் வடிவில் இருக்கும். இதன் அதிபதி செவ்வாய்.



குறிப்பு: ஆசிரியர் திரேக்காணத்தின் இத்தகைய விளக்கங்களின் பயன்பாட்டினை தனது யாத்திரை எனும் நூலில் கூறியுள்ளார். திரேக்காணமானது ஏற்கக் கூடிய வடிவில் இருந்தால், அதாவது பழங்கள், பூக்கள், இரத்தினங்கள், பானைகள் ஆகியவற்றைச் சுமந்திருப்பதுடன், சுபக் கோள்களின் பார்வையில் இருந்தால், அது வெற்றியாக முடியும், அவை அருவருப்பான தோற்றத்தில் இருந்தால், ஆயுதம் ஏந்தி இருத்தல் மற்றும் அசுபக்கோள்களின் பார்வைப் பெற்றிருந்தால், அது வருத்தத்துடனும் தோல்வியுலும் முடியும். அவை பாம்புகள் அல்லது சங்கிலிகள் ஆகியவற்றைச் சுமந்திருந்தால் மனக்குழப்பமும், சிறைத்தண்டனையும் பெறுவதாக இருக்கும். வராகமிகிரரின் மகனான பிரிதுயாசர் தனது ஷட்பஞ்சசிகம் எனும் ஓரை சோதிட நூலில்  இந்த திரேக்காண விளக்கங்கள் திருடர்களைக் கண்டுபிடிக்கப் பயன்படும் என்கிறார்.

திரேக்காணத்தின் பலன்கள் முற்றும்


அடுத்து .. முடிவுரை


  

முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17

Monday, December 4, 2017

கும்பத்தின் திரேக்காண பலன்கள் - பிருகத் ஜாதகா – 216


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்




பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  இருபத்து ஏழு

திரேக்காண பலன்கள்.. தொடர்ச்சி

[குறிப்பு: இராசிகளின் வடிவங்களைக் கொண்டு பொதுப்பலன் உரைப்பது போல்
   இங்கு திரேக்காண வடிவங்கள் விளக்கப்பட்டுள்ளன]



31. கும்பத்தின் முதல் திரேக்காணமானது கழுகின் முகம் கொண்ட மனிதனாகவும், அதன் எண்ணங்கள் முழுதும் எண்ணெய், மது, தண்ணீர், உணவு ஆகியவற்றை அடைவது குறித்தும், சணல் போன்ற ஆடை, பட்டு, மான்தோல் போர்த்தியபடியும் காணப்படும்.

குறிப்பு: இந்த திரேக்காணமானது ஆணின் வடிவில் இருக்கும். இதன் அதிபதி சனி.



32. கும்பத்தின் இரண்டாவது திரேக்காணமானது இலவ மரத்தினால் ஆன எரிந்த தேரில் இருக்கும் பெண்ணாகவும், இரும்பினைச் சேகரிப்பதாகவும், காட்டில் வசிப்பதாகவும் அழுக்காண ஆடை அணிந்தும் காணப்படும்.

குறிப்பு: இந்த திரேக்காணமானது தீப்பந்தினை ஏந்திய பெண்ணின் வடிவில் இருக்கும். இதன் அதிபதி புதன்.



33. கும்பத்தின் மூன்றாவது திரேக்காணமானது கருப்பு நிற மனிதனாகவும், காதுகளில் முடிமுளைத்தும், கிரீடம் சூடியும், கிளைகள், இலைகள், அழுக்கு எண்ணெய், இரும்பு, பானை ஆகியவற்றை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்வதாகவும் இருக்கும்.

குறிப்பு: இந்த திரேக்காணமானது ஆணின் வடிவில் இருக்கும். இதன் அதிபதி சுக்கிரன்.


திரேக்காணத்தின் பலன்கள்.தொடரும்


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17


Sunday, December 3, 2017

மகரத்தின் திரேக்காண பலன்கள் -பிருகத் ஜாதகா – 215


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்


பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  இருபத்து ஏழு

திரேக்காண பலன்கள்.. தொடர்ச்சி

[குறிப்பு: இராசிகளின் வடிவங்களைக் கொண்டு பொதுப்பலன் உரைப்பது போல்
   இங்கு திரேக்காண வடிவங்கள் விளக்கப்பட்டுள்ளன]


28.    மகரத்தின் முதல் திரேக்காணமானது, உடல் முழுதும் முடியால் மூடிய மனிதனாகவும், கடல் அரக்கன் போல வலிமையாகவும், காட்டுப்பன்றி போன்ற உடலும், மூக்கில் வலையம் அணிந்தும் ஒழுங்கற்ற முகமும் கொண்டிருக்கும்.

குறிப்பு: இந்த திரேக்காணமானது வலையங்களைச் சுமந்த மனிதனாக இருக்கும். இதன் அதிபதி சனி.



29. மகரத்தின் இரண்டாவது திரேக்காணமானது, கலைகளில் திறமை மிக்க பெண்ணாகவும், தாமரை இதழ்களைப் போன்ற விழிகளும், கருப்பாகவும், பல்வேறு பொருட்களின் மீது ஆசை கொண்டவராகவும் இரும்பினால் ஆன காதணிகளை அணிந்தவராகவும் இருக்கும்.

குறிப்பு: இந்த திரேக்காணமானது பெண்ணின் வடிவில் இருக்கும். இதன் அதிபதி சுக்கிரன்.



30. மகரத்தின் மூன்றாவது திரேக்காணமானது சணல் போன்ற ஆடையைப் போர்த்திய கின்னரர்களின் வடிவிலும், அம்பாராத்துணி, அம்பு, பாதுகாப்பு ஆடை அணிந்தும், தோளில் விலைமதிப்புமிக்க கற்களைப்பதித்த பானையைச் சுமந்தும் காணப்படும்.

குறிப்பு: இந்த திரேக்காணமானது ஆயுதம் ஏந்தி இருக்கும். இதன் அதிபதி புதன்.


திரேக்காணத்தின் பலன்கள்.தொடரும்


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17



Saturday, December 2, 2017

தனுசுவின் திரேக்காண பலன்கள் - பிருகத் ஜாதகா – 214


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்



பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  இருபத்து ஏழு

திரேக்காண பலன்கள்.. தொடர்ச்சி

[குறிப்பு: இராசிகளின் வடிவங்களைக் கொண்டு பொதுப்பலன் உரைப்பது போல்
   இங்கு திரேக்காண வடிவங்கள் விளக்கப்பட்டுள்ளன]




25. தனுசுவின் முதல் திரேக்காணமானது குதிரை உடல் கொண்ட மனிதனாக, கையில் நீண்ட வில்லும் அவரது ஆசிரமத்தில் நின்று, யாகத்திற்கு பல்வேறு பொருட்களை பாதுகாப்பவராகவும் இருக்கும்.

குறிப்பு: இந்த திரேக்காணமானது மனித வடிவும் நான்குகால் விலங்காகவும் ஆயுதம் தரித்தும் இருக்கும். இதன் அதிபதி வியாழன்.



26. தனுசுவின் இரண்டாவது திரேக்காணமானது அழகிய பெண்ணாகவும், தங்கம் மற்றும் செண்பக மலர்போல் அழகாகவும், நடுத்தர அரியாசனத்தில் அமர்ந்தும்,  கடலிலிருந்து ரத்தினங்களை எடுத்தாள்பவராகவும் இருக்கும்.

குறிப்பு: இந்த திரேக்காணமானது பெண் வடிவில் இருக்கும். இதன் அதிபதி செவ்வாய்.



27. தனுசுவின் மூன்றாவது திரேக்காணமானது தாடியும் மீசையும் வைத்துள்ள மனிதனாகவும், தங்கம் மற்றும் செண்பக மலரின் நிறத்திலும், அரியாசனத்தில் அமர்ந்தும் கையில் செங்கோலும், வெண்பட்டு மற்றும் மான்தோல் அணிந்தும் காணப்படும்.

குறிப்பு: இந்த திரேக்காணமானது ஆண் வடிவமாகவும் ஆயுதத்துடனும் இருக்கும். இதன் அதிபதி சூரியன்.


திரேக்காணத்தின் பலன்கள்.தொடரும்


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17


Friday, December 1, 2017

விருச்சிகத்தின் திரேக்காண பலன்கள் - பிருகத் ஜாதகா – 213


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்



பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  இருபத்து ஏழு

திரேக்காண பலன்கள்.. தொடர்ச்சி

[குறிப்பு: இராசிகளின் வடிவங்களைக் கொண்டு பொதுப்பலன் உரைப்பது போல்
   இங்கு திரேக்காண வடிவங்கள் விளக்கப்பட்டுள்ளன]


22.    விருச்சிகத்தின் முதல் திரேக்காணமானது நிர்வாண நிலையில் அணிகலன்கள் ஏதுமின்றி அழகிய பெண்ணாக, அவருடைய இடத்தினை விட்டு விலகி நீண்ட கடல் பயணத்திற்கு பின் நிலத்தினை அடைந்து, காலில் பாம்பு சுற்றிய நிலையில் காணப்படும்.

குறிப்பு: இந்த திரேக்காணமானது பெண்ணும் பாம்புமாக இருக்கும். இதன் அதிபதி செவ்வாய்.



23. விருச்சிகத்தின் இரண்டாவது திரேக்காணமானது ஆமையின் ஓடு அல்லது பானை போன்ற உடலமைப்பு கொண்ட பெண்ணாகவும், அவர் இருக்கும் இடத்தில் தனது கணவருக்காக வசதியினை விரும்புவராகவும், அவருடைய உடலில் பாம்பு சுற்றிய நிலையிலும் காணப்படும்.

குறிப்பு: இந்த திரேக்காணமானது பெண்ணும் பாம்புமாக இருக்கும். இதன் அதிபதி வியாழன்.



24. விருச்சிகத்தின் மூன்றாவது திரேக்காணமானது சிங்கம் போன்றும் அகலமான தட்டையான ஆமை போன்ற முகமும், மரக்கட்டையில் நாய்கள், மான், நரி மற்றும் காட்டுப்பன்றி ஆகியவற்றினை செதுக்கியதாகவும், சந்தன மரங்கள் சூழ்ந்த நாட்டில் வசிப்பதாகவும் இருக்கும்.

குறிப்பு: இந்த திரேக்காணமானது நான்குகால் இராசியாக இருக்கும். இதன் அதிபதி சந்திரன்.


திரேக்காணத்தின் பலன்கள்.தொடரும்



முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17