Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0
Showing posts with label Brihat Jataka 91-100. Show all posts
Showing posts with label Brihat Jataka 91-100. Show all posts

Wednesday, January 25, 2017

செவ்வாயின் தொடர்பில் அரசனாகும் யோகம் - பிருகத் ஜாதகா – 100



வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்


பிருகத் ஜாதகா

பகுதி   -  பதினொன்று

அரச யோகம் அல்லது அரசனின் பிறப்பு..தொடர்ச்சி

செவ்வாயின் தொடர்பில் அரசனாகும் யோகம்


8.         மீனம் இலக்கினமாக இருக்க, அதில் சந்திரன் இருக்க, கும்பம், மகரம், சிம்மத்தில் முறையே சனி, செவ்வாய், சூரியன் இருக்கும் நிலையில் பிறக்கும் ஒருவர் அரசன் ஆவார்.

மேலும், செவ்வாய் மேசத்திலும், வியாழன் கடகத்திலும் இருக்க, மேசம் இலக்கினமாகவோ அல்லது கடகம் இலக்கினமாகவோ இருக்கும் நிலையில் பிறக்கும் ஒருவர், அரசன் ஆவார்.


9.         கடகம் இலக்கினமாக இருக்க, அதில் வியாழன் இருக்க, சந்திரன், வெள்ளி, புதன் ஆகியவை ரிசபத்தில் இருக்க, சூரியன் மேசத்தில் இருக்க பிறக்கும் ஒருவர், பேரரசன் ஆவார்.


10.        மகரம் இலக்கினமாக இருக்க, அதில் சனி இருக்க, மேசம், கடகம், சிம்மத்தில் அதன் அதிபதிகள் இருக்க, மிதுனம் மற்றும் துலாத்தில் முறையே, புதனும் வெள்ளியும் இருக்கும் நிலையில் பிறக்கும் ஒருவர் புகழ் மிக்க அரசன் ஆவார்.


11.        கன்னியானது இலக்கினமாக இருக்க, அதில் புதன் இருக்க, வெள்ளி மிதுனத்திலும், சந்திரனும் வியாழனும் மீனத்தில் இருக்க, செவ்வாயும் சனியும் மகரத்தில் இருக்கும் நிலையில் பிறக்கும் ஒருவர் அரசன் ஆவார்.


12.        மேலே குறிப்பிட்ட பல்வேறு யோகங்களில்(1) பிறந்தவர்கள், அவர்கள் கீழ்நிலைக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அரசன் ஆவார்கள். அத்தகையவர்கள் அரச குடும்பத்தில் பிறந்திருந்தால், சந்தேகமில்லாமல் அரசன் ஆவார்கள்நாம் இப்போது அரசக் குடும்பத்தில் பிறந்து அரசன் ஆகக் கூடிய நிலை இல்லையெனில் செல்வந்தர் ஆகக்கூடிய யோகங்களைப் பற்றி பார்ப்போம்,



குறிப்பு

(1) அதாவது, மொத்தத்தில் மேலே குறிப்பிட்ட 96 வகையான யோகங்கள்.



யோகங்கள் தொடரும்….


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17


Tuesday, January 24, 2017

சனியின் தொடர்பில் அரசனாகும் யோகம் -பிருகத் ஜாதகா – 99


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்


பிருகத் ஜாதகா

பகுதி   -  பதினொன்று

அரச யோகம் அல்லது அரசனின் பிறப்பு..தொடர்ச்சி

சனியின் தொடர்பில் அரசனாகும் யோகம்


4.  சனியானது கும்பத்தில் இருக்க, சூரியன் மேசத்திலும், சந்திரன் ரிசபத்திலும், புதன் மிதுனத்திலும், வியாழன் சிம்மத்திலும், செவ்வாய் விருச்சிகத்திலும் இருக்க, இலக்கினமானது கும்பம் அல்லது மேசம் அல்லது ரிசபமாக இருக்கும் நிலையில் பிறக்கும் ஒருவர் அரசனாக ஆவார்.


சனியானது துலாத்தில் இருக்க, சந்திரன் ரிசபத்திலும், சூரியன், புதன் கன்னியிலும், வெள்ளி துலாத்திலும், செவ்வாய் மேசத்திலும், வியாழன் கடகத்திலும் இருக்க, இலக்கினமானது துலாம் அல்லது ரிசபமாக இருக்கும் நிலையில் பிறக்கும் ஒருவர் அரசனாக ஆவார்.


5. செவ்வாய் மகரத்திலும், சூரியனும் சந்திரனும் தனுசுவிலும், சனி மகரத்திலும் இருக்க, இலக்கினமும் மகரமாக இருந்தால், அந்த நிலையில் பிறக்கும் ஒருவர் அரசனாக ஆவார்.


மேலும், இலக்கினம் மகரமாக இருக்க, செவ்வாயும் சந்திரனும் அதில் இருக்க, சூரியன் தனுசுவில் இருக்கும் நிலையில், பிறக்கும் ஒருவர் அரசனாக ஆவார்.


மேலும், மேசம் இலக்கினமாக இருக்க, அதில் சூரியன் இருக்க, சனியும் சந்திரனும் துலாத்தில் இருக்க, வியாழன் தனுசுவில் இருந்தால், அந்த நிலையில் பிறக்கும் ஒருவர் அரசனாக ஆவார்.


6. இலக்கினம் ரிசபமாக இருக்க, அதில் சந்திரன் இருக்க, சூரியன் சிம்மத்தில் இருக்க, வியாழன் விருச்சிகத்திலும், சனி கும்பத்திலும் இருக்க, பிறக்கும் ஒருவர் அரசனாக ஆவார்.


மேலும், இலக்கினம் மகரமாகவும், அதில் சனியும் இருக்க, சந்திரன் 3வது வீட்டில் இருக்க, செவ்வாய் 6வது வீட்டில் இருக்க, புதன் 9வது வீட்டில் இருக்க, வியாழன் 12வது வீட்டில் இருக்க, அந்த மனிதன் ஒழுக்கம் மிகுந்த, புகழ்பெற்ற அரசனாக இருப்பார்.


7. சந்திரனும் வியாழனும் தனுசுவில் இருக்க, செவ்வாயனது மகரத்தில் இருக்க, இலக்கினமானது மீனமாகவும், அதில் சுக்கிரன் இருக்க அல்லது கன்னியானது இலக்கினமாகவும், அதில் புதன் இருக்க பிறக்கும் ஒருவர், அரசனாவார்.


மேலும், கன்னி இலக்கினமாகவும், அதில் புதன் இருக்க, செவ்வாயும் சனியும் 5வது வீட்டில் இருக்க, சந்திரனும், வியாழனும், வெள்ளியும் 4வது வீட்டில் இருக்க, பிறக்கும் ஒருவர் அரசான் ஆவார்.


குறிப்பு(நிமித்திகன்):

மேலே குறிப்பிடப்பட்டவை மிக எளிமையானதாக இருப்பதால், திரு சிதம்பரம் அவர்கள் எவ்வித சிறப்புக் குறிப்புகளும் எழுதவில்லை. ஆனால் இங்கு மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, சனியும் அரச யோகத்தினைக் கொடுக்கும் என்பதாகும்.  இதுபற்றி விரிவாகவும் விளக்கங்களுடனும் பின்னர் பார்க்கலாம்.


யோகங்கள் தொடரும்….


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17