Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0
Showing posts with label Brihat Jataka 31-40. Show all posts
Showing posts with label Brihat Jataka 31-40. Show all posts

Monday, January 30, 2017

பிருகத் ஜாதகா – தமிழில்-31


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்



பிருகத் ஜாதகா

பகுதி   -  ஒன்று (தொடர்ச்சி)

வரையறையும்  அடிப்படைக் கொள்கைகளும்
[இராசி மண்டலம்]


15.        உதய இராசியிலிருந்து (இலக்கினத்திலிருந்து) தொடங்கும் 12 இராசிகளின் முக்கியத்துவங்கள் முறையே (சாதகரின்) உடல், குடும்பம், சகோதரர்கள், உறவுகள், குழந்தைகள், எதிரிகள், மனைவி, இறப்பு, தலைவிதிப்பலன்கள், சொந்தவாழ்க்கை, இலாபம், நட்டம் ஆகியவை ஆகும்1. இலக்கினத்திலிருந்து 3வது, 6வது, 10வது, 11வது வீடுகள் உபச்சயா (முன்னேற்றம்) இராசிகள், ஆனால் பிறர் சொல்வதுபோல் அல்ல2.



குறிப்புகள் (சிதம்பரம் அய்யர்)

1. இராசிசக்கரத்தில் இலக்கினத்திலிருந்து கூறப்படும் பல்வேறு வீடுகளின் முக்கியத்துவம் கீழ்வருமாறு:

இலக்கினம் அல்லது 1வது வீடு
உடல், புகழ், மூட்டுகள்
2வது வீடு
குடும்பம், சொத்து, கண்கள், பேச்சு, உண்மை
3வது வீடு
சகோதரர்கள், தைரியம், உணவு
4வது வீடு
உறவுகள், கல்வி, தாய், பசுக்கள், வசிப்பிடம், வாகனம், வசதி
5வது வீடு
குழந்தைகள், அறிவுத்திறன், முந்தைய வினைப்பயன்
6வது வீடு
எதிரிகள், சம்பந்திகள், நோய்கள்
7வது வீடு
மனைவி, சகிப்புத்தன்மை, மரியாதை
8வது வீடு
மரணம், ஆயுள்
9வது வீடு
தலைவிதிப்பயன், தந்தை, மருத்துவம்
10வது வீடு
சொந்தவாழ்க்கை, அறிவு, உடைகள்
11வது வீடு
இலாபம், பலனடைதல்
12வது வீடு
நட்டம், தீயவினை, பயணங்கள்

2.   காரக்கர் மற்றும் அவர்தம் சோதிட மாணாக்கர்கள் கருத்துப்படி, 3வது, 6வது, 10வது, 11வது வீடுகள் உபச்சய வீடுகளாக இருக்கும், அதாவது, அந்த 4 வீடுகளின் அதிபதிகளுக்கு பகைக் கோள்களாகவோ அல்லது அசுபக் கோள்களாகவோ இருக்கும் போது மட்டும். ஆனால், ஆசிரியர், காரக்கரின் கூற்றினை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதுடன், அவர் சத்தியாச்சார்யர் மற்றும் யவனேஸ்வரரின் கருத்துக்களையே துணைக் கொள்கிறார்.



16.        இராசி சக்கரத்தில் இலக்கினத்தில் இருந்து தொடங்கும் பன்னிரெண்டு இராசிகளும் நுட்பமாகக் குறிப்பிடுவது (1) கல்பம்(சக்தி)(Kalpa),  (2) ஸ்வா(சொத்து)(Sva),(3) விக்ரமம்(வலிமை)(Vikrama), (4) கிரகம் (வசிப்பிடம்)(Graha), (5) ப்ரதிபா (அறிவு)(Pratibha), (6) க்ஷட (காயம்)(Kshata), (7) மன்மதன்(ஆசை)(Manmatha), (8) ரந்த்ரம்(துளை)(Randhra), (9) குரு (தந்தை அல்லதுஆசான்)(Guru), (10) மானம் (மரியாதை)(Mana), (11) பாவம் (கைக்கொளல்)(Bhava), (12) வியாயம்(இழப்பு)(Vyaya) ஆகியவை. 4வது மற்றும் 8வது வீடுகள் சதுரஸ்ர இராசிகள் ஆகும். 7வது வீடு டையுனா, 10வது வீடு அக்னா எனப்படும்.


குறிப்புகள் (சிதம்பரம் அய்யர்)

பல்வேறு சோதிட பதங்கள் இப்பத்தியில் வரையறுக்கப்பட்டுள்ளது.




முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 - 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-15


பிருகத் ஜாதகா – தமிழில்-33


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்



பிருகத் ஜாதகா

பகுதி   -  ஒன்று (தொடர்ச்சி)

வரையறையும்  அடிப்படைக் கொள்கைகளும்
[இராசி மண்டலம்]


19.    இலக்கின அதிபதி அல்லது வியாழன் அல்லது புதன் இலக்கினத்தில் இருந்தாலோ அல்லது தொடர்புடன் இருந்தாலோ, இலக்கினம் வலிமையுடையதாக இருக்கும், இது பிறக் கோள்களால் கிடையாது. கேந்திர இராசிகள் இயற்கையில் வலிமை வாய்ந்தவை1. இருகால் இராசிகள் பகலில் வலிமை வாய்ந்தவை, நான்குகால் இராசிகள் இரவில் வலிமை வாய்ந்தவை, பலகால் இராசி சூரிய உதயம் சூரிய அஸ்தமன நேரங்களில் வலிமை வாய்ந்தவை. மேசத்திலிருந்து முதல் ஆறு இராசிகளின் மனமானது2 முறையே 20, 24, 28, 32, 36, 40 எனவும், அடுத்த ஆறு இராசிகளில் 40, 36, 32, 28, 24, 20 எனவும் உள்ளது. 3வது வீடு துஸ்சிக்யா (Duschikya) எனவும் 9வது தபஸ் (Tapas) அல்லது திரித்திரிகோணம் எனப்படுகிறது.



குறிப்புகள் (சிதம்பரம் அய்யர்)


1. எனவே, பணபர வீடுகள் என்பவை கேந்திரத்தைவிட வலிமை குன்றியவை, ஆபோக்லிம வீடுகள் மற்ற எல்லா வீடுகளைக் காட்டிலும் வலிமை குன்றியவை. நான்கு கேந்திரங்களில், இருகால் இராசிகள் முதல் கேந்திரத்தில் வலிமை வாய்ந்தவை, நாற்கால் இராசிகள் 10வது கேந்திரத்திலும், பலகால் இராசி 7வது கேந்திரத்திலும், நீர் இராசிகள் 4வது கேந்திரத்திலும் வலிமை வாய்ந்தவை.
2. இது பகுதி ஐந்து, பத்தி-23ல் பயன்படுத்தப்பட்டுள்ளது.


20.    மேசம் முதற்கொண்டு தொடங்கும் பன்னிரெண்டு இராசிகளும் முறையே, சிவப்பு (மேசம்), வெண்மை (ரிசபம்), பச்சைக்கிளியின் நிறம்(மிதுனம்), பாடலி நிறம் (ஊதுகுழல் மலர்), கருப்பு-வெள்ளை (சிம்மம்), பல்வேறு வண்ணம் (கன்னி), கருப்பு (துலாம்), பொன்னிறம் (விருச்சிகம்), நெல் உமியின் நிறம் (தனுசு), வெண்-சிவப்பு (மகரம்), கீரிப்பிள்ளையின் நிறம் (கும்பம்), மீனின் நிறம் (மீனம்). ப்ளவா (Plava)1 எனப்படும் இந்த இராசிகள் அந்தந்த இராசி அதிபதிகளின் திசைகளைக் குறிக்கும். இரண்டாம் வீடு சூரியனால் இருக்குமானால், அது வேசி (Vesi) எனப்படும்.


குறிப்புகள் (சிதம்பரம் அய்யர்)

1. இது பகுதி ஐந்து பத்தி 21-ல் பயன்படுகிறது.


 முதல் பகுதி முற்றிற்று.


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 - 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-15