Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0
Showing posts with label பல்வேறு யோகங்கள். Show all posts
Showing posts with label பல்வேறு யோகங்கள். Show all posts

Tuesday, July 18, 2017

தசாக்கால பலன்கள் - பிருகத் ஜாதகா – 168


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்




பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  இருபத்து இரண்டு

பல்வேறு யோகங்கள்.. தொடர்ச்சி


5.         ஒருவர் பிறக்கும் நேரத்தில், வியாழன் அல்லது சந்திரன் இருக்கும் இராசியின் அதிபதியோ அல்லது இலக்கினாதிபதியோ ஒரு கேந்திரத்தில் இருந்தால், அந்த மனிதர் தமது வாலிபப் பருவத்தில் மகிழ்ச்சியாக இருப்பார். மேலும், தசாக் காலத்தின் தொடக்கத்தில், அத்தகைய தசாக்காலத்தின் அதிபதி, பிருஷ்டோதய இராசியில் இருந்தால் அவர் மகிழ்ச்சியாக இருப்பதுடன், அந்த அதிபதி அதன் பலன்களை(1) தசையின் கடைசியில் வழங்குவார். அந்த அதிபதி சிரோதய இராசியில் இருந்தால், தனது பலன்களை அந்த தசையின் தொடக்கத்தில் வழங்குவார். மேலும் அது சிர-பிருஷ்டோயத இராசியில் இருந்தால்,  பலனானது தசையில் நடுவில் கிடைக்கும்.


குறிப்பு: (1) நல்ல அல்லது தீய பலன்கள்.
தசா காலம் மூன்று சம பாகங்களாகப் பிரிக்கப்படும்; சிரோதயா, பிருஷ்டோதயா, சிர-பிருஷ்டோதயா வீடுகள் பற்றி, பகுதி-1, பத்தி-10ல் விளக்கப்பட்டுள்ளது.



6.         சூரியனும் செவ்வாயும் அதன் பலன்களை(1) ஒரு வீட்டில் நுழைந்தவுடன் வழங்குவர்; வியாழனும் சுக்கிரனும் ஒரு வீட்டின் நடுப்பகுதியில் வரும்போது வழங்குவர்; சனியும் சந்திரன் அந்த வீட்டினை விட்டு வெளிவருவதற்கு முன்பு வழங்குவர்; புதன் அந்த இராசியில் இருக்கும்வரையில் வழங்கும்.



குறிப்பு: (1) நல்ல மற்றும் தீய பலன்கள் ஆகிய இரண்டும்.
இராசியானது 10பாகை எனும் அளவில் மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட வேண்டும்.



குறிப்பு: (நிமித்திகன்)இங்கே கூறப்பட்டுள்ள தசாக் கால அளவீடு என்பது தற்போது நடைமுறையில் உள்ள விம்சோத்திரி தசா முறையிலிருந்து மாறுபட்டது. வராக மிகிரரின் தசா முறை என்பது வேறு.

பகுதி-22 முற்றும்

அடுத்துபகுதி-23 – தீமை தரும் யோகங்கள்


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17



Monday, July 17, 2017

வர்க்கோத்தம பலன்கள் - பிருகத் ஜாதகா – 167


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்




பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  இருபத்து இரண்டு

பல்வேறு யோகங்கள்

4.         ஒருவர் பிறக்கும்போது உதய நவாம்சம் வர்க்கோத்தமம் இருந்தால் அல்லது சந்திரன் வர்க்கோத்தம நிலையில் இருந்தால், அவர் மகிழ்சியாகவும் வளமுடனும் இருப்பார். ஒருவர் பிறக்கும்போது சூரியனிலிருந்து இரண்டாவது வீட்டில் சுபக் கோள்கள் இருந்தால்(1) அல்லது கேந்திரத்தில் எவ்வித கோள்களும்(2) இல்லாது இருந்தாலும் மேற்கூறிய பலன்கள் கிடைக்கும். மேலும் ஒருவர் பிறக்கும்போது, காரகக் கோள்கள் இராசி சக்கரத்தில் அவைகளின் வீடுகளில் இருந்தால், அவர் மகிழ்ச்சியுடனும் வளமுடனும் வாழ்வார்.


குறிப்பு:

(1)  புதன், வியாழன் அல்லது சுக்கிரன் – உரையாசிரியரின் கருத்துப்படி.
(2)  ஏதேனும் ஒரு கேந்திரத்தில் இருந்தால், அந்த மனிதர் மகிழ்ச்சியுடன் இருப்பார்; இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கேந்திரங்களில் இருந்தால் மிக்க மகிழ்ச்சியுடனும், மேலும் அதில் உள்ள கோள்கள் சுபக்கோள்களாக இருந்தால், அளவுக்கு அதிகமான மகிழ்ச்சியுடனும் வளமுடனும் வாழ்வார்.


குறிப்பு (நிமித்திகன்):அல்லது கேந்திரத்தில் எவ்வித கோள்களும்(2) இல்லாது இருந்தாலும்” (or the Kendra houses may happen to be occupied by no planets at all)  என வரையறை செய்யப்பட்டுள்ளது. ஆனால், திரு சிதம்பரம் அவர்களின் குறிப்பு(2)-ல் கேந்திரத்தில் கோள்கள் இருந்தால் மகிழ்ச்சியாக இருப்பர் என எழுதியுள்ளார். அறிந்தவர்கள் விளக்கவும்.



பல்வேறு யோகங்கள்.. தொடரும்




முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17