Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Wednesday, February 13, 2019

திருட்டு சோதிடனுக்கு தெய்வீக ஜோதிடர் என்று பெயரா?



திருட்டு சோதிடனுக்கு தெய்வீக ஜோதிடர் என்று பெயரா?

அன்பு நண்பர்களுக்கு, தவிர்க்க முடியாத சில காரணங்களாலும், உடல் பிணியின் காரணமாகவும் நீண்ட நெடு நாட்களாக நிமித்திகனில் பதிவு எதுவும் செய்யவில்லை.

நான் எழுதும் பதிவுகள் அனைத்தும் யாவரும் பயன் அடையும் வகையிலேயே எழுதி வருகிறேன்.

வராக மிகிரரின் பிருகத் ஜாதகா எனும் நூலை, திரு சிதம்பரம் அய்யர் அவர்கள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் (1880) செய்திருந்ததை, தமிழில் மொழி பெயர்த்துள்ளேன். அதற்காக நான் எடுத்துக்கொண்ட கால அளவானது ஏறக்குறைய மூன்று ஆண்டுகள்.

இன்று (12.02.2019) கூகுளில் சோதிடம் தொடர்பாக ஒரு செய்தியைத் தேடியபோது, எதேச்சையாக பிருகத் ஜாதகம் பற்றிய பதிவு தென்பட்டது. அது வேறொருவரின் பெயரில் முகநூலில் வந்துள்ளது. அது அப்படியே எனது மொழிபெயர்ப்பின் பதிவினை அச்சு பிசகாமல் வந்துள்ளது.

அந்த முகநூலின் உரிமையாளர் (Admin) குருஜி ஹரிராம்  தெய்வீக ஜோதிடர்.  Guruji Hariram  தெய்வீக ஜோதிடர்.

அதிர்ச்சி அடைந்த நான் அவரின் முகநூலில் சென்று பார்த்த போது, எனது பிருகத் ஜாதக மொழி பெயர்ப்பு பதிவுகள் அனைத்தும் (நான் பார்த்த வரையில் இரண்டு அத்தியாயங்கள் - ஏறக்குறைய 40 பதிவுகள்) அவரது பதிவுபோல் வெளியிடப்பட்டிருந்தது.

எடுத்துக்காட்டிற்கு கீழே உள்ள ஒரு பதிவினைப் பாருங்கள்.



இந்த அறிவுத் திருடனை என்னவென்று திட்டுவது அல்லது எதைக் கொண்டு அடிப்பது. நீங்கள்தான் கூற வேண்டும்.

அன்புடன்
நிமித்திகன்