Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0
Showing posts with label Brihat Jataka 131-140. Show all posts
Showing posts with label Brihat Jataka 131-140. Show all posts

Wednesday, May 10, 2017

இராசியில் வியாழனின் பலன்கள் - பிருகத் ஜாதகா – 140


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்



பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  பதினெட்டு


இராசிகளில் பிறக் கோள்கள் தொடர்ச்சி…

12. மேசத்தில் அல்லது விருச்சிகத்தில்  வியாழன் இருக்கும்போது பிறந்த ஒருவர் இராணுவத்தின் படைத்தளபதியாக இருப்பார்; பெரும் பணக்காரராக இருப்பார்; நிறைய மனைவிகளும் குழந்தைகளும் இருக்கும், கொடையாளியாக இருப்பார்; நல்ல வேலையாட்களைக் கொண்டிருப்பார்; அமைதியான குணம் கொண்டிருப்பார்; நல்ல தோற்றம் கொண்டிருப்பார்; மனைவியுடன் மகிழ்ச்சியாக இருப்பார்; புகழ் பெற்றவராக இருப்பார்.


ரிசபம் அல்லது துலாத்தில்  வியாழன் இருக்கும்போது பிறந்த ஒருவர் நோய்நொடிகள் இன்றி இருப்பார்; வாழ்க்கை வசதியானதாக இருக்கும்; செல்வந்தராக இருப்பார்; நண்பர்களும் குழந்தைகளும் கொண்டிருப்பார்; கொடையில் தாராளமாக இருப்பார்; அனைவராலும் விரும்பப்படுபவராக இருப்பார்.


மிதுனம் அல்லது கன்னியில்  வியாழன் இருக்கும்போது பிறந்த ஒருவர் நிறைய உடைகள், வீடுகள், வேலையாட்கள், குழந்தைகள், நண்பர்கள் கொண்டிருப்பார்; அமைச்சராக இருப்பார்; வசதியாக வாழ்வார்.


13. கடகத்தில்  வியாழன் இருக்கும்போது பிறந்த ஒருவர் நவரத்தினங்களும், குழந்தைகளும், சொத்தும், மனைவியும் கொண்டிருப்பதுடன், செல்வாக்கு மிக்கவராகவும், புத்திக் கூர்மையானவராகவும், வசதியானவராகவும் இருப்பர்.


சிம்மத்தில்  வியாழன் இருக்கும்போது பிறந்த ஒருவர், கடகத்தில் வியாழன் இருந்தால் கூறப்பட்டவை அனைத்தும் கொண்டிருப்பதுடன், இராணுவத்தில் படைத் தளபதியாகவும் இருப்பார்.


தனுசு அல்லது மீனத்தில்  வியாழன் இருக்கும்போது பிறந்த ஒருவர், ஒரு பகுதியை ஆள்பவராகவோ அல்லது அரசரின் கீழ் அமைச்சராகவோ அல்லது இராணுவத் தளபதியாகவோ இருப்பார்; பெரும் செல்வந்தராக இருப்பார்.


கும்பத்தில்  வியாழன் இருக்கும்போது பிறந்த ஒருவர், கடகத்தில் சந்திரன் இருந்தால் கூறப்பட்டவை அனைத்தும் கொண்டிருப்பார்.


மகரத்தில்  வியாழன் இருக்கும்போது பிறந்த ஒருவர், அவருடைய தகுதிக்கு குறைவான வேலையை தம்முடைய வாழ்வில் மேற்கொள்வார்; மிகக்குறைவான செல்வம் கொண்டிருப்பார்; துன்பத்தால் பாதிக்கப்பட்டிருப்பார்.



இராசிகளில் பிறக் கோள்கள் தொடரும்…


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17


Tuesday, May 9, 2017

இராசியில் புதனின் பலன்கள் தொடர்ச்சி - பிருகத் ஜாதகா – 139


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்



பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  பதினெட்டு

இராசிகளில் பிறக் கோள்கள் தொடர்ச்சி…


10. சிம்மத்தில் புதன் இருக்கும்போது பிறந்த ஒருவர் பெண்களால் வெறுக்கப்படுபவராக இருப்பார்; ஏழையாக இருப்பார்; வசதியற்றவராகவோ அல்லது குழந்தைகள் இன்றியோ இருப்பார்; இடம் விட்டு இடம் செல்பவராக இருப்பார்; வெகுளியாக இருப்பார்; பெண்களின்மீது ஆசை கொண்டவராக இருப்பார்; அவமதிப்புக்கு உள்ளாவார்.


கன்னியில் புதன் இருக்கும்போது பிறந்த ஒருவர் தானம் வழங்குவதில் தாராளமானவராக இருப்பார்; கற்றறிந்தவராக இருப்பார்; பல நற்குணங்களைக் கொண்டிருப்பார்; வசதியானவராக இருப்பார்; அமைதியான குணம் கொண்டவராக இருப்பார்; தனித்துவமானவராகவும் பயமற்றவராகவும் இருப்பார்.


11. மகரத்தில் அல்லது கும்பத்தில் புதன் இருக்கும்போது பிறந்த ஒருவர் பிறருக்காக உழைப்பவராக இருப்பார்; ஏழையாக இருப்பார்; சிற்பியாக இருப்பார்; கடனில் வாழ்பவராக இருப்பார், ஊதியம் இல்லாமல் பணியாற்றுபவராக இருப்பார்.


தனுசுவில் புதன் இருக்கும்போது பிறந்த ஒருவர் அரசர்களால் மதிக்கப்படுபவராக இருப்பார்; அறிவியலும் சட்டமும் பயின்றவராக இருப்பார்.


மீனத்தில் புதன் இருக்கும்போது பிறந்த ஒருவர் பிறரை நண்பராக்கிக் கொள்வதில் திறமையானவராக இருப்பார்; பிறரின் எண்ண ஓட்டத்தை எளிதில் அறிந்து கொள்ளக்கூடியவராக இருப்பார்; தாழ்குல மக்களின் கைத்தொழிலினை, அதாவது செருப்புத் தைத்தல் போன்றவை, கற்றறிந்தவராக இருப்பார்.



இராசிகளில் பிறக் கோள்கள் தொடரும்…

முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17