Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0
Showing posts with label சோதிடத்தில் வான் மண்டலம். Show all posts
Showing posts with label சோதிடத்தில் வான் மண்டலம். Show all posts

Saturday, November 22, 2014

சோதிடத்தில் வான் மண்டலம் -4




            இராயல் வானியல் சங்கம், இலண்டன் (Royal Astronomical Society, London),  வான் மண்டலத்தில் உள்ள இராசி மண்டலத்தின் விண்மீன் கூட்டத்தை (zodiac) மறு ஆய்வு செய்து 13 மண்டலங்களாகப் பிரித்துள்ளது.  அதில் புதிதாக சேர்க்கப்பட்ட பிரிவானது ophiuchus எனும் உச்சிமண்டலம் ஆகும்பொதுவாக 12 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்ட இராசி மண்டலம் என்பது வானியல் அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும். இந்த இராசி மண்டலத்தை வானியல் அறிஞர்களும் சோதிட அறிஞர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இராசி மண்டலத்தை வைத்து சோதிடம் சொல்லாமா என்பதில்தான் கருத்துவேறுபாடு உள்ளதே தவிர, இராசி மண்டலத்தை யாவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.




            அதே நேரத்தில், இந்த பன்னிரெண்டு பிரிவுகள் கொண்ட இராசி மண்டலத்தை பன்னெடுங்காலத்திற்கு முன்பே, நமது வானியல் அறிஞர்களும், சோதிட அறிஞர்களும் அறிந்து வைத்து கணிதம் செய்துள்ளனர். அதே போல், யவணர்களும், பாபிலோனியர்களும் நமக்கு ஈடாகவே அறிந்து வைத்திருந்தனர். இதனைத் திரு சிதம்பரம் ஐயர் அவர்கள் தமதுபிருகத் ஜாதகாஆங்கில மொழிபெயர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார். அதனால்தான், நமது இராசி மண்டல அமைப்பும், மேலை நாட்டு அமைப்பும் ஒன்றாகவே உள்ளன. அதாவது, சூரியனின் ஓராண்டு கால நிகழ்வினை, பூமி மையக் கொள்கை அடிப்படையில், கணக்கிட்டு காலவகை செய்துள்ளனர்.

சூரியனின் பயணம்


            இராசி மண்டலத்தில் உள்ள பன்னிரெண்டு இராசிகளும் விண்மீன்களின் தொகுப்பாக இருந்தபோதிலும், அந்த விண்மீன் தொகுப்புகளை மேலும் பிரித்து, 27 விண்மீன் தொகுப்புகளாக வகைப்படுத்தி வான்கணிதம் செய்திருந்தனர் நம் அறிஞர் பெருமக்கள். அவை முறையே அசுவனி, பரணி எனத் தொடங்கும் நிலையில், அவற்றின் வடமொழிப் பதங்களும், மேலை நாட்டுப் பதங்களும் இணையாக உள்ளதைக் காணும்போது வியப்பு உண்டாகிறது. அவற்றின் பதங்களைபிருகத் ஜாதகாஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து பதிவிடுகிறேன்.



            எனவே வான்மண்டலக் கணிதம் என்பது, வானியல் மற்றும் சோதிடவியல் ஆகிய இரண்டிற்கும் பொதுவானதாகவே இருந்திருக்கிறது.

            இனி இராசி மண்டலமானது சோதிடக் கணிதத்தில் இராசிச் சக்கரம் ஆனதைப் பின்வரும் பதிவுகளில் காண்போம்.




Thursday, November 13, 2014

சோதிடத்தில் வான் மண்டலம் -3


            வான் மத்தியக் கோட்டிற்கும், புவி மத்தியக் கோட்டிற்கும் சிறிது கோண வித்தியாசம் இருப்பதாகப் பார்த்தோம். வான் மண்டலத்தில் சூரியக் குடும்பமானது, சூரியனின் தலைமையில், தத்தமது பாதையில் நீள்வட்டத்தில் சுற்றி வருகின்றன. சூரியனின் சுற்றுப்பாதை, வான் மத்தியக் கோட்டிற்கு (celestial equator) இணையாக அதாவது 1800 கோணத்தில் சுற்றிவரவில்லை. சற்று சாய்வாகவே சுற்றி வருகிறது.



            எனவே, சூரிய சுற்றுப் பாதைக்கு அருகில் இருக்கும் விண்மீன் கூட்டங்களின் தொகுப்பிற்கும், வான்மத்திய கோட்டிற்கு அருகில் இருக்கும் விண்மீன் கூட்டங்களின் தொகுப்பிற்கும் எண்ணிக்கை மாறுபடுகிறது. வான் மத்தியக் கோட்டின் கணக்கின்படி 15 கூட்டங்கள்(மொத்தம் 88 கூட்டங்களின் சுருக்கம்) என்றாலும், சூரிய சுற்றுப்பாதையின்படி 13 கூட்டங்கள் உள்ளன. அதனை இராசி மண்டலம் (Zodiac) 12 மற்றும் உச்சி மண்டலம் (Ophiuchus) ஒன்று எனக் கூறுகின்றனர். அவை முறையே:


            இது பொதுவாக வானியல் ஆய்வாளர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட கணக்கீடு ஆகும்ஆனால் நமது இந்திய மற்றும் இலத்தின், கிரேக்க வானியல் அறிஞர்கள், சூரியனின் சாய்கோண சுற்றுப் பாதையின் மையப்புள்ளியில் இருந்து மேலும் கீழழுமாக 90 பாகை விரிவில் அடங்கியுள்ள விண்மீன் கூட்டங்களை எடுத்துக் கொண்டு வான் மண்டலத்தின் எல்லையினை வரையறை செய்துள்ளனர்.



            அவ்வாறு வரையறை செய்யும்போது, அதில் அடங்கியுள்ள வின்மீண் கூட்டங்களின் எண்னிக்கையையும் வகைப்படுத்தி, அவைகளை பன்னிரெண்டு இராசி மண்டலங்களுக்குள் (Zodiac), தொகுத்துள்ளனர்.

            பன்னிரெண்டு ராசி மண்டலங்கள் என்பன, சூரிய வான்மண்டலத்தினை, மொத்த கோண அளவான 3600 பாகையினை 300 பாகை கோண அளவில், மொத்தம்  பன்னிரெண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டதாகும்.  அவற்றிற்கு அந்த விண்மீன் தொகுதிக் கூட்டங்களின் பெயரினையே வைத்துள்ளனர்.


            பொதுவாக இராசி மண்டலம் என அழைக்கப்பட்டாலும் அவை விண்மீன் தொகுதிகளே ஆகும்.

            இதுபற்றி மேலும் இனிவரும் பதிவுகளில் பார்ப்போம்.