Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0
Showing posts with label Brihat Jataka 121-130. Show all posts
Showing posts with label Brihat Jataka 121-130. Show all posts

Monday, April 24, 2017

சிம்மம்-கன்னி - சந்திரனின் பலன்கள் - பிருகத் ஜாதகா – 130


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்




பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  பதினேழு

பல்வேறு இராசிகளில் சந்திரன் தொடர்ச்சி….


5. சிம்ம இராசியில் சந்திரன் இருக்கும்போது பிறந்த ஒருவர் முன்கோபியாகவும், பெரிய தாடையும், பரந்த முகமும், பழுப்பு நிறக் கண்களும் கொண்டிருப்பார்; குழந்தை குறைவாக இருக்கும்; பெண்களை வெறுப்பார்; அசைவ உணவில் ஆர்வம் கொண்டவராகவும், காடு மலைகளை விரும்பவராகவும் இருப்பார்; சிறு செயல்களுக்காக நீண்ட நேரம் சண்டையிடுபவராக இருப்பார்; பட்டினி, தாகம், வயிற்றுவலி, பல்வலி, மன உளைச்சல் ஆகியவற்றால் வலியால் துடிப்பார்; தானம் வழங்குவதில் தாராளமாக இருப்பார்; சண்டையிடுவதில் கண்டிப்பாக இருப்பார்; தீர்மானித்த கொள்கைகளைக் கொண்டிருப்பார்; செருக்குடனும், தாயிடம் பற்றும் கொண்டிருப்பார்.


6. கன்னி இராசியில் சந்திரன் இருக்கும்போது பிறந்த ஒருவர் அழகிய கண்களையும், பணிவுடன் மெதுவான நடையும் கொண்டிருப்பார்; தோள்பட்டையும் கைகளும்  தாழ்ந்து இருக்கும்; வசதியாக வாழ்வார்; மென்மையான உடலும் பேச்சும் கொண்டிருப்பார்; நேர்மையானவராக இருப்பார்; நாட்டியம், இசை, ஓவியம், புத்தகம் தயாரித்தல் ஆகியவற்றில் திறமையானவராக இருப்பார்; சாத்திரங்களை கற்றவராக இருப்பார்; நல்லொழுக்கமும் புத்திசாலித்தனமும் கொண்டிருப்பார்; காம இச்சையில் ஆர்வம் கொண்டிருப்பார்; பிறரின் வீடு மற்றும் சொத்துக்களை அனுபவிப்பார்; வெளிநாட்டில் வசிப்பார்; இனிய பேச்சினைக் கொண்டிருப்பார்; பெண் குழந்தைகளும், குறைவாக மகன்களும் கொண்டிருப்பார்.


இராசிகளில் சந்திரன் தொடரும்…



முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17





Sunday, April 23, 2017

மிதுனம்-கடகம் - சந்திரனின் பலன்கள் - பிருகத் ஜாதகா – 129


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்




பிருகத் ஜாதகா
பாகம்-2

பகுதி   -  பதினேழு


பல்வேறு இராசிகளில் சந்திரன் தொடர்ச்சி….


3. மிதுன இராசியில் சந்திரன் இருக்கும்போது பிறந்த ஒருவர் பெண்களின் மீது ஈர்ப்பு கொண்டவராக இருப்பார்; காம இச்சையில் திறமையானவராக இருப்பார்;, சிவப்பு நிற விழிகளைக் கொண்டவராகவும் இருப்பார்; சாத்திரங்களை கற்றவராகவும் இருப்பார். செய்திகளை சுமந்து செல்பவராக இருப்பார், சுருட்டை முடியும் கூர்மையான அறிவும் கொண்டிருப்பார்;  நகைப்பு திறனும், பிறரின் மனதில் உள்ளதை அறியும் திறனும், விளையாட்டில் ஆர்வமும் கொண்டிருப்பார்; அழகிய குணாதிசயம் கொண்டிருப்பார்; இனிமையாக பேசக்கூடியவராக இருப்பார்; நன்றாக உணவும் உண்ணுவார்; இசையில் ஆர்வமும், நாட்டிய விதிகளில் திறனும் கொண்டிருப்பார்; திருநங்கையுடன் உறவு கொள்பவராக இருப்பார்; புடைப்பான நாசியைக் கொண்டிருப்பார்.


4. கடக இராசியில் சந்திரன் இருக்கும்போது பிறந்த ஒருவர் உடலை வளைத்து வேகமாக நடப்பவராக இருப்பார்; உயரமான இடுப்பினைக் கொண்டிருப்பார்; பெண்களால் ஆளப்படுபவராக இருப்பார்; நல்ல நண்பர்களைக் கொண்டிருப்பார்; சோதிடம் கற்பார்; நிறைய வீடுகள் கொண்டிருப்பார்; சந்திரனைப்போல் இருக்கும் சொத்து அதிகரிக்கும் குறையும்; குட்டையாக இருப்பார்; வலிமையான கழுத்தினைக் கொண்டிருப்பார்; அன்பான வார்த்தைகளால் வெற்றி கொள்ளும் திறன் இருக்கும்; நண்பர்களுடன் இணைந்திருப்பார்; தண்ணீர் மற்றும் காடுகளில் ஆர்வம் கொண்டவராக இருப்பார்.

இராசிகளில் சந்திரன் தொடரும்…


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17




Saturday, April 22, 2017

மேசம்-ரிசபம் - சந்திரனின் பலன்கள் - பிருகத் ஜாதகா – 128


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்




பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  பதினேழு

பல்வேறு இராசிகளில் சந்திரன்


1. மேச இராசியில் சந்திரன் இருக்கும்போது பிறந்த ஒருவர் வட்டவடிவமான சிவப்பு விழிகளையும், காய்கறி உணவில் விருப்பம் உள்ளவராகவும், இளஞ்சூடான உணவினை உண்பவராகவும் இருப்பார்; வெகுவில் இளகும் மனம் படைத்தவராகவும், பயணங்களில் ஆர்வம் உடையவராகவும், காம இச்சையில் ஆர்வம் உடையவராகவும் இருப்பார்; வலிமையற்ற மூட்டுகளைக் கொண்டிருப்பார்; நிரந்தரமான சொத்துக்களை வைத்திருக்க மாட்டார்; சண்டை இடுவதிலும், பெண்களிடத்தில் ஆசை உடையவராகவும் இருப்பார்; பிறரின் கீழ் பணிபுரிவதில் திறமையானவராக இருப்பார்; நகங்கள் உடைந்தும், தலையில் காயங்களுடனும் இருப்பார்; செருக்கு மிகுந்தவராகவும், சகோதர்களில் மூத்தவராகவும் இருப்பார்; கையில் ஆயுத இரேகையுடன் அதாவது சக்தி இரேகையுடன் இருப்பார்; அடிக்கடி மாறும் மன நிலையுடனும், நீரைக் கண்டு பயப்படுபவராகவும் இருப்பார்.


2. ரிசப இராசியில் சந்திரன் இருக்கும்போது பிறந்த ஒருவர் சிறந்த தோற்றமும் அழகிய நடையும் கொண்டிருப்பார்; பெரிய தொடைகளும் முகமும் கொண்டிருப்பார்; பின்புறம் அல்லது முகம் அல்லது பக்கவாட்டில் வடுக்கள் இருக்கும்; கொடையாளியாக இருப்பார்; துயரங்களைத் தாங்குபவராக இருப்பார்; பெரிய செல்வாக்கும் அதிகாரமும் கொண்டிருப்பார்; கழுத்தில் பெரிதாக புடைத்திருக்கும்; பெண் குழந்தைகள் இருக்கும்; சளித் தொந்தரவால் பாதிக்கப்பட்டிருப்பார்; சொத்துக்கள், உறவினர்கள், பிள்ளைகள் ஆகியோரிடமிருந்து, விலகியிருப்பார்; அனைவராலும் விரும்பப்படுபவராக இருப்பார்; அமைதியான குணம் உடையவராக இருப்பார்; நன்றாக உண்பவராகவும்; பெண்கள் மீது ஆர்வம் கொண்டவராகவும் இருப்பார்; நண்பர்களோடு இணைந்திருப்பார்; நடுவயதிலும், வயதின் முதிர்விலும்(1) மகிழ்ச்சியுடன் இருப்பார்.

குறிப்பு: (1) எனவே இளமைக் காலத்தில் மகிழ்வில்லாமல் இருப்பார்.


இராசிகளில் சந்திரன் தொடரும்…



முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17


Thursday, April 20, 2017

சதயம் – ரேவதி பலன்கள் -பிருகத் ஜாதகா – 127


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்



பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  பதினாறு

நட்சத்திரங்கள் () நட்சத்திரங்களில் சந்திரன் தொடர்ச்சி


13. சதயம் நட்சத்திரத்தினைச் சந்திரன் கடக்கும்போது பிறந்த ஒருவர் கடுமையாக பேசுபவராகவும், உண்மையானவராகவும், துன்பம் அனுபவிப்பவராகவும், எதிரிகளை வெற்றி கொள்பவராகவும், வேலையில் துணிந்து ஈடுபடுபவராகவும், சுதந்திரமானவராகவும் இருப்பார்.


பூரட்டாதி நட்சத்திரத்தினைச் சந்திரன் கடக்கும்போது பிறந்த ஒருவர்  துன்பங்கள் அனுபவிப்பவராகவும், தனது சொத்துக்களை பராமரிப்பதை தன் மனைவியிடம் கொடுப்பவராகவும், தனித்துவமான பேச்சு(1) உடையவராகவும் இருப்பார்.

குறிப்பு:  (1) அல்லது பணம் சம்பாதிப்பதில் திறமையானவர்.


14. உத்திரட்டாதி  நட்சத்திரத்தினைச் சந்திரன் கடக்கும்போது பிறந்த ஒருவர்  திறமையாக பேசுபவராகவும், மகிழ்ச்சியானவராகவும், குழந்தைகளும் பேரக்குழந்தகளும் கொண்டிருப்பவராகவும், எதிரிகளை வெல்பவராகவும், நல்லொழுக்கம் மிக்கவராகவும் இருப்பார்.


ரேவதி நட்சத்திரத்தினைச் சந்திரன் கடக்கும்போது பிறந்த ஒருவர்  அழகான உடலமைப்பும், அனைவராலும் விரும்பப்படுபவராகவும், சண்டையில் வீரம் மிக்கவராகவும், பிறரின் சொத்துக்களை அபகரிக்காதவராகவும், செல்வந்தராகவும் இருப்பார்.


குறிப்பு: மேற்கூறிய விளைவுகளானது, குறிப்பிட்ட நட்சத்திரத்தினைக் கடக்கும் போது சந்திரன் வலிமையாக இருந்தால் மட்டுமே நிகழும்.



நட்சத்திரங்களில் சந்திரன் முடிவுற்றது

அடுத்து இராசிகளில் சந்திரன்


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17