Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0
Showing posts with label இரட்டைக் கோள்களின் யோகங்கள். Show all posts
Showing posts with label இரட்டைக் கோள்களின் யோகங்கள். Show all posts

Monday, March 6, 2017

இரண்டிற்கும் மேற்பட்ட கோள்களின் யோகங்கள் - பிருகத் ஜாதகா – 119


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்

பிருகத் ஜாதகா

பகுதி   -  பதினான்கு

இரட்டைக் கோள்களின் யோகங்கள்… தொடர்ச்சி


5. பிறக்கும் பொழுது, இராசியில் உள்ள ஒரு வீட்டில் இரட்டைக் கோள்களாக வெள்ளியும் சனியும் ஒன்றாக இருந்தால் அந்த மனிதர் கிட்டப்பார்வை உடையவராகவும், ஒரு இளம் பெண்ணின் நட்பின் மூலமாக தனது செல்வத்தை உயர்த்திக் கொள்பவராகவும், எழுத்து மற்றும் ஓவியங்களில் திறமை மிக்கவராகவும் இருப்பார்மற்ற கோள்களின் யோகங்களைப் (1) பொருத்தமட்டில், இங்கே குறிப்பிடப்பட்ட பலன்களின்படி தீர்மானித்து, முடிவு செய்ய வேண்டும்.



குறிப்புகள்:

(1)    அதாவது, பிறக்கும்போது, மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட கோள்கள் இராசியில் ஒரே வீட்டில் இருந்தால், அந்த யோகமானது முதலில் இரட்டைக் கோள்களாகப் பிரிக்கப்பட்டு, இந்த பகுதியில் குறிப்பிடப்பட்டவாறு அவைகளின் பலன்களை தீர்மானித்து பின்பு ஒட்டு மொத்தமாகத் தீர்மானிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, ஒருவேளை சூரியன், சந்திரன், செவ்வாய், புதன் ஆகியவை ஒன்றாக ஒரு இராசியில் இருப்பதாகக் கொள்வோம். இந்த யோகமானது ஆறு இரட்டை யோகங்களாக, முறையே: (1) சூரியன் சந்திரன், (2) சூரியன் செவ்வாய், (3) சூரியன் புதன், (4) சந்திரன் செவ்வாய், (5) சந்திரன் புதன், (6) செவ்வாய் புதன் என பிரிக்க வேண்டும். ஒவ்வொன்றின் பலனையும் தீர்மானித்து பின்பு முழுமையாக முடிவு செய்ய வேண்டும்.



குறிப்புகள் (நிமித்திகன்):

திரு சிதம்பரம் அவர்கள், இதன்படி பல்வேறு இரட்டை யோகங்களின் தொகுப்பினையும், இரண்டிற்கும் மேற்பட்ட கோள்கள் ஒரே இராசியில் இருந்தால் ஏற்படும் பலன்களையும், ஜாதக பாரிசாதம் எனும் நூலின் அடிப்படையில் வரையறை செய்கிறார்யோகங்கள் பற்றிய ஆய்வுப் பதிவினை நிமித்திகனில் பதிவிடும்போது அவைகளைப் பற்றி விரிவாகக் காண்போம்.


இரட்டைக் கோள்களின் யோகங்கள்முற்றும்


... அடுத்து துறவறம் (சன்னியாசி) யோகம்



முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17


Sunday, March 5, 2017

செவ்வாயுடன் இணைந்த கோள்களின் யோகங்கள் - பிருகத் ஜாதகா – 118


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்




பிருகத் ஜாதகா

பகுதி   -  பதின்மூன்று

இரட்டைக் கோள்களின் யோகங்கள்… தொடர்ச்சி

3.  பிறக்கும் பொழுது, இராசியில் உள்ள ஒரு வீட்டில் இரட்டைக் கோள்களாக செவ்வாயும் புதனும் ஒன்றாக இருந்தால் அந்த மனிதர் கிழங்குகள் மற்றும் அதுபோன்றவை(1), எண்ணெய், கலை வேலைப்பாடுகள், ஆட்டங்கள் ஆகியவற்றில் ஈடுபடுவார்; செவ்வாயும்  வியாழனும் ஒரு வீட்டில் ஒன்றாக இருந்தால் அந்த மனிதர் ஒரு நகரத்தின் தலைமை அதிகாரியாகவோ அல்லது அரசராகவோ அல்லது வசதிமிக்க வேதியராகவோ(2) இருப்பார்செவ்வாயும் வெள்ளியும் ஒரு வீட்டில் ஒன்றாக இருந்தால் அந்த மனிதர் பசுக்களை பாதுகாப்பவராகவும், ஆட்டங்களில் ஈடுபாடுகொண்டவராகவும், வேலையில் திறமை மிக்கவராகவும், பிற ஆடவரின் மனைவியருடன் உறவு கொள்பவராகவும், சூதாடியாகவும் இருப்பார்; செவ்வாயும் சனியும் ஒன்றாக ஒரு வீட்டில் இருந்தால் அந்த மனிதர்  வறுமையால் பார்க்கப்படுபவராகவும், பொய்யராகவும், பிறரால் வெறுத்து ஒதுக்கப்பட்டவராகவும் இருப்பார்.


குறிப்புகள்:

(1)    பழங்கள், பூக்கள், பட்டைகள், சாறுகள் போன்றவை

(2)    அல்லது கற்றறிந்தவர்வேறு நூலின் படி.



4.  பிறக்கும் பொழுது, இராசியில் உள்ள ஒரு வீட்டில் இரட்டைக் கோள்களாக புதனும்  வியாழனும் ஒன்றாக இருந்தால் அந்த மனிதர் ஆட்டத்திறன் கொண்டவராகவும், இசையில் ஆர்வம் உடையவராகவும், நடனங்களைத் கற்றுத் தேர்ந்தவராகவும் இருப்பார்;  புதனும் வெள்ளியும் ஒரு வீட்டில் ஒன்றாக இருந்தால் அந்த மனிதர் ஒரு நல்ல பேச்சாளராகவும், நாடுகளையும் மக்களையும் ஆள்பவராக இருப்பார்; புதனும் சனியும் ஒன்றாக இருந்தால் அந்த மனிதர் மற்றவர்களை ஏமாற்றி பிழைப்பவராகவும்,  மூத்தோர்களின் அறிவுரையை ஏற்காதவராகவும் இருப்பார்வியாழனும் வெள்ளியும் ஒன்றாக இருந்தால், ஒரு குறிப்பிட்ட துறையில்  கற்றறிந்த அறிஞராக இருப்பதுடன், செல்வமும், மனைவியும், நல்லொழுக்கமும் கொண்டவராக இருப்பார்; வியாழனும் சனியும் ஒன்றாக இருந்தால், அந்த மனிதர் நாவிதராகவோ அல்லது படகோட்டியாகவோ அல்லது சமையற்காரராகவோ இருப்பார்.


இரட்டைக் கோள்களின் யோகங்கள்… தொடரும்



முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17