Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0
Showing posts with label Brihat Jataka 141-150. Show all posts
Showing posts with label Brihat Jataka 141-150. Show all posts

Monday, May 29, 2017

நவாம்ச சந்திரனின் பலன்கள்(3) - பிருகத் ஜாதகா – 150



வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்




பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  பத்தொன்பது

கோள்களின் பார்வை பலன்கள் தொடர்ச்சி…


7. பிறக்கும் நேரத்தில், சந்திரனானது சிம்மத்தின் நவாம்சத்தில் இருந்து, அது சூரியனால் பார்க்கப்பட்டால், அந்த மனிதர் கோபக்காரராக இருப்பார்; செவ்வாயால் பார்க்கப்பட்டால் அரசரால் ஆதரிக்கப்படுவார்; புதனால் பார்க்கப்பட்டால், புதையலைக் கண்டுபிடிப்பதன் மூலம் செல்வந்தராவார்; வியாழனால் பார்க்கப்பட்டால் செல்வாக்கு மிக்கவராகவும் அதிகாரம் மிக்கவராகவும் இருப்பார்; வெள்ளியால் பார்க்கப்பட்டால் குழந்தைகள் இருக்காது; சனியால் பார்க்கப்பட்டால் தீய செயல்களில் ஈடுபடுவார்.


பிறக்கும் நேரத்தில், சந்திரனானது வியாழனின் நவாம்சத்தில் இருந்து, அது சூரியனால் பார்க்கப்பட்டால், அந்த மனிதர் அதிகாரமிக்கவராக இருப்பார்; செவ்வாயால் பார்க்கப்பட்டால் சண்டைகளின் விதிமுறைகளை அறிந்தவராக இருப்பார்; புதனால் பார்க்கப்பட்டால் நகைச்சுவைத் திறன் கொண்டவராக இருப்பார்; வியாழனால் பார்க்கப்பட்டால், அவர் ஒரு அமைச்சராக இருப்பார்; வெள்ளியால் பார்க்கப்பட்டால் வீரியம் இல்லாத மனிதராக இருப்பார்; சனியால் பார்க்கப்பட்டால், அறக்கட்டளைகள நிர்வாகிப்பார்.


நவாம்ச சந்திரனின் பலன்கள்.. தொடரும்


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17



Sunday, May 28, 2017

நவாம்ச சந்திரனின் பலன்கள்(2) - பிருகத் ஜாதகா – 149


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்




பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  பத்தொன்பது

கோள்களின் பார்வை பலன்கள் தொடர்ச்சி…


6. பிறக்கும் நேரத்தில், சந்திரனானது புதனின் நவாம்சத்தில் இருந்து, அது சூரியனால் பார்க்கப்பட்டால், அந்த மனிதர் கலைஞர் அல்லது நாட்டியக்காரராக இருப்பார்; செவ்வாயால் பார்க்கப்பட்டால், அவர் திருடராக இருப்பார்; புதனால் பார்க்கப்பட்டால் பெருங்கவிஞராக இருப்பார்; வியாழனால் பார்க்கப்பட்டால், அவர் அமைச்சராக இருப்பார்; வெள்ளியால் பார்க்கப்பட்டால், இசையில் திறமை மிக்கவராக இருப்பார், சனியால் பார்க்கப்பட்டால், எந்திரதொழில் நுட்பத்தில் சிறந்து விளங்குவார்.


பிறக்கும் நேரத்தில், சந்திரனானது கடக நவாம்சத்தில் இருந்து, அது சூரியனால் பார்க்கப்பட்டால், அந்த மனிதர் சிறு உடலமைப்பு கொண்டவராக இருப்பார்; செவ்வாயால பார்க்கப்பட்டால் அவர் ஒரு கருமியாக இருப்பார் அல்லது குறைவான செல்வம் கொண்டிருப்பார்; புதனால் பார்க்கப்பட்டால் யோகக்கலையில் ஈடுபாடு கொண்டவராக இருப்பார்; வியாழனால் பார்க்கப்பட்டால், ஒரு தலைவராக இருப்பார்; வெள்ளியால் பார்க்கப்பட்டால் பெண்களால் வளம் பெறுவார்; சனியால் பார்க்கப்பட்டால் வேலையில் ஆர்வம் கொண்டவராக இருப்பார்.


நவாம்ச சந்திரனின் பலன்கள்.. தொடரும்


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17



Saturday, May 27, 2017

நவாம்ச சந்திரனின் பலன்கள் - பிருகத் ஜாதகா – 148

வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்



பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  பத்தொன்பது

கோள்களின் பார்வை பலன்கள் தொடர்ச்சி…


5. பிறக்கும் நேரத்தில், சந்திரனானது செவ்வாயின் நவாம்சத்தில் இருந்து, அது சூரியனால் பார்க்கப்பட்டால், அந்த மனிதர் ஒரு நகரத்தின் பாதுகாவலராக இருப்பார்; செவ்வாயால் பார்க்கப்பட்டால், பிறரைத் துன்புறுத்துவதில் ஆர்வம் கொண்டவராக இருப்பார்; புதனால் பார்க்கப்பட்டால், சண்டைப்பயிற்சியில் திறமையானவராக இருப்பார்; வியாழனால் பார்க்கப்பட்டால், அவர் அரசனாக ஆவார்; வெள்ளியால் பார்க்கப்பட்டால் செல்வந்தராக இருப்பார்; சனியால் பார்க்கப்பட்டால் வம்புகளை வாங்கிவருவார்.


பிறக்கும் நேரத்தில், சந்திரனானது வெள்ளியின் நவாம்சத்தில் இருந்து, அது சூரியனால் பார்க்கப்பட்டால், அந்த மனிதர் ஒரு முட்டாளாக இருப்பார்; அது செவ்வாயால் பார்க்கப்பட்டால், அவர் பிறர் மனைவியின் மீது மோகம் கொண்டவராக இருப்பார்; புதனால் பார்க்கப்பட்டால் நல்ல கவிஞராக இருப்பார் அல்லது பிறரின் கருத்துப்படி, பிறரின் மனைவியைக் கவர்பவராக இருப்பார்; வியாழனால் பார்க்கப்பட்டால் சிறந்த நூல்களைப் படைப்பவராக இருப்பார்; வெள்ளியால் பார்க்கப்பட்டால், வசதியான வாழ்க்கையை விரும்புவராக இருப்பார்; சனியால் பார்க்கப்பட்டால், பிறர் மனைவியுடன் சேர்ந்து வாழ்வார்.


நவாம்ச சந்திரனின் பலன்கள்.. தொடரும்


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17


Monday, May 22, 2017

ஓரையில் இருக்கும் சந்திரனைப் பார்க்கும் பலன்கள் - பிருகத் ஜாதகா – 147


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்



பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  பத்தொன்பது

கோள்களின் பார்வை பலன்கள் தொடர்ச்சி…


4. பிறக்கும் நேரத்தில், சந்திரனானது ஒரு இராசியின் சூரிய ஓரை அல்லது சந்திர ஓரையில் இருந்தால், அதே ஓரையில் இருக்கும் பிற கோள்களினால் அது பார்க்கப்பட்டால் அது நல்ல பலன்களைக் கொடுக்கும்(1). சந்திரன் இருக்கும் திரேக்கானத்தின் அதிபதியால்(2) சந்திரன் பார்க்கப்பட்டால், அல்லது நட்பு வீடுகளில்(3) இருக்கும் கோள்களின் அதிபதிகளால் பார்க்கப்பட்டால், அது நல்ல பலன்களை வழங்கும். பல்வேறு இராசிகளில் இருக்கும் சந்திரன் அளிக்கும் பலன்கள் மற்றும் அதனைப் பார்க்கும் பல்வேறு கோள்களின் பலன்கள் சந்திரன் துவாதசாம்சத்தில் இருக்கும் நிலையில் பார்க்கப்படும் கோள்களின் பலன்களுக்கும் பொருந்தும். குறிப்பிட்ட நவாம்சத்தில் சந்திரன் இருந்து அது பல்வேறு கோள்களால் பார்க்கப்பட்டால், அதன் பலன்கள் கீழ்வருமாறு (பத்தி 5-ல்).

குறிப்பு:

(1)  சந்திரனைப் பார்க்கும் கோள்கள் இருக்கும் ஓரையின் அதிபதியும் சந்திரன் இருக்கும் ஓரையின் அதிபதியும் வேறாக இருந்தால் பலனானது தீயதாக இருக்கும். இதே குறிப்பு உதய ஓரைக்கும் பொருந்தும்.

(2)  சொல்ப ஜாதகத்தின்படி[Swalpa Jataka), சந்திரனைப் பார்க்கும் திரேக்கானத்தின் அதிபதி சுபக் கோளாக இருந்தால், பலனானது சுபமாக இருக்கும்; அசுபக் கோளாக இருந்தால், பலனானது தீயதாக இருக்கும். இதே குறிப்பு உதய திரேக்கானத்திற்கும் பொருந்தும்.

(3)  ஆகவே, பகைவீட்டில் இருக்கும் கோள்கள் சந்திரனைப் பார்த்தால், பலனானது தீயதாக இருக்கும்.

(4)  இதே குறிப்பு உதய திரேக்கானத்திற்கும் பொருந்தும்.உதய துவாதசாம்சமானது கடகத்தினைத் தவிர மற்றவையாக இருந்தால், மேலும் உதய இராசியானது சந்திரனால் பார்க்கப்பட்டாலும், பலனானது தீயதாக இருக்கும்; உதய துவாதசாம்சமானது கடகமாக இருந்து, மேலும் உதய இராசியானது சந்திரனால் பார்க்கப்பட்டால், பலனானது நன்மையாக இருக்கும்.


கோள்களின் பார்வை பலன்கள்.. தொடரும்


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17