Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0
Showing posts with label இராசிகளில் பிறக் கோள்கள். Show all posts
Showing posts with label இராசிகளில் பிறக் கோள்கள். Show all posts

Tuesday, May 16, 2017

இராசியில் சனியின் பலன்கள் தொடர்ச்சி- பிருகத் ஜாதகா – 143


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்


பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  பதினெட்டு


இராசிகளில் பிறக் கோள்கள் தொடர்ச்சி…


19. தனுசு அல்லது மீனத்தில் சனி இருக்கும்போது பிறந்த ஒருவரின் இறப்பு மரியாதைக்குரிய வகையில் புகழ்மிக்கதாக இருக்கும்; அரசரின் அவையில் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக இருப்பார்; நல்ல மகன்களும் நல்ல மனைவியும் அமையப் பெற்றிருப்பார்; சிறப்பான சொத்துக்களைப் பெற்றிருப்பார்; நகரத்தில் படையின் தலைவராக அல்லது கிராமத்தில் முதன்மை மனிதராக இருப்பார்.


மகரம் அல்லது கும்பத்தில் சனி இருக்கும்போது பிறந்த ஒருவர், மாற்றானின் மனைவி மற்றும் அவரது சொத்துக்களை அனுபவிப்பார்; நகரத்தின் அல்லது கிராமத்தின் அல்லது படையின் தலைவராக இருப்பார்; பலகீனமான விழிகளைக் கொண்டிருப்பார்; அழுக்கானவராக இருப்பார்; அலட்சியமான முறையில் குளிப்பார்; சொந்தமான சொத்தும் அதற்கு உரிமையானவராகவும் இருப்பார்; அவரால் சம்பாதிக்கப்பட்ட சொத்துக்களை அனுபவிப்பவராகவும் இருப்பார்.


குறிப்பு:

சென்ற பகுதியில் பத்தி-13 மற்றும் அதன் குறிப்பில் குறிப்பிடப்பட்டவாறு, கோள்களின் பலன்களின் வலிமையினைத் தீர்மானிக்க வேண்டும்.


20.        இராசி சக்கரத்தில் உள்ள வீடுகளில் சந்திரன் இருக்கும் நிலைக்கு ஏற்பவும் அது பிறக் கோள்களின் தொடர்பில் இருப்பதற்கு ஏற்பவும், இலக்கினத்திற்கு ஏற்பவும் பலன்கள் தீர்மானிப்பது போலவே, பலன்களைத் தீர்மானிக்க வேண்டும்; குறைவான அல்லது மிகுதியான பலன்கள் என்பது இலக்கினம், 2வது, 3வது மற்றும் இதர பாவங்களுக்கு ஏற்பவே இருக்கும்; வீடுகள் வலிமையாக இருந்தால், அதன் அதிபதிகளும் வலிமையாக இருந்தால், அவை பலன்களை உயர்த்தி வழங்கும், இல்லையெனில் பலன்கள் குறையும்.


குறிப்பு:

உதய இராசியும் அதன் அதிபதியும் வலிமையானதாக இருந்தால், அப்போது பிறக்கும் மனிதன் வலிமையான உடலமைப்பினைப் பெற்றிருப்பார்; 2வது வீடும் அதன் அதிபதியும் வலிமையானதாக இருந்தால், அந்த மனிதர் வசதியானவராக இருப்பார். அதுபோலவே பிற பாவங்களுக்கும் அது பொருந்தும்.


பகுதி-18 முடிவுற்றது

அடுத்து பகுதி-19 கோள்களின் பார்வை பலன்கள்


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17



Monday, May 15, 2017

இராசியில் சனியின் பலன்கள் - பிருகத் ஜாதகா – 142



வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்




பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  பதினெட்டு

இராசிகளில் பிறக் கோள்கள் தொடர்ச்சி…


17. மேசத்தில்  சனி இருக்கும்போது பிறந்த ஒருவர் முட்டாளாக இருப்பார்; இடம் விட்டு இடம் அலைபவராக இருப்பார்; தற்பெருமையாளனாக இருப்பார்; நண்பர்கள் இருக்க மாட்டார்கள்.


விருச்சிகத்தில்  சனி இருக்கும்போது பிறந்த ஒருவர் சிறைவாசியாக இருப்பார்; அடி உதை வாங்குபவராக இருப்பார்; வேலையில் கவனம் செலுத்த மாட்டார்; கருணையில்லாதவராக இருப்பார்.


மிதுனம் அல்லது கன்னியில்  சனி இருக்கும்போது பிறந்த ஒருவர் வெட்கமற்றவராக இருப்பார்; துக்கத்தில் இருப்பார்; ஏழையாக இருப்பார்; குழந்தைகள் இருக்காது; மோசமான ஓவியர் அல்லது எழுத்தாளராக இருப்பார்; சேவகராக இருப்பார்; தலைமை அதிகாரியாக இருப்பார்.


18. ரிசபத்தில்  சனி இருக்கும்போது பிறந்த ஒருவர் கீழ்குலப் பெண்களின் மீது காமம் கொண்டவராக இருப்பார்; குறைவான செல்வம் கொண்டிருப்பார், பல மனைவிகள் கொண்டிருப்பார்.


துலாம் இராசியில்  சனி இருக்கும்போது பிறந்த ஒருவர்  புகழ்மிக்க மனிதராக இருப்பார்; ஒரு நகரத்தில்  கட்சியின் தலைவராக அல்லது படையின் தலைவராக இருப்பார்; செல்வந்தராக இருப்பார்.


கடகத்தில்  சனி இருக்கும்போது பிறந்த ஒருவர் ஏழையாக இருப்பார்; பற்கள் குறைவாக இருக்கும்; தாயிடமிருந்து பிரிந்து இருப்பார்; குழந்தைகள் இருக்காது; முட்டாளாக இருப்பார்.


சிம்மத்தில்  சனி இருக்கும்போது பிறந்த ஒருவர் மரியாதைக்கு உரியவராக இருக்க மாட்டார்; துயரத்தில் இருப்பார்; குழந்தைகள் இருக்காது, சுமைகளைத் தூக்குபவராக இருப்பார்.

சனியின் பலன்கள் தொடரும்…

முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17