வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி - பதினெட்டு
இராசிகளில் பிறக் கோள்கள் தொடர்ச்சி…
17. மேசத்தில் சனி இருக்கும்போது பிறந்த ஒருவர் முட்டாளாக இருப்பார்; இடம் விட்டு இடம் அலைபவராக இருப்பார்; தற்பெருமையாளனாக இருப்பார்; நண்பர்கள் இருக்க மாட்டார்கள்.
விருச்சிகத்தில் சனி இருக்கும்போது பிறந்த ஒருவர் சிறைவாசியாக இருப்பார்; அடி உதை வாங்குபவராக இருப்பார்; வேலையில் கவனம் செலுத்த மாட்டார்; கருணையில்லாதவராக இருப்பார்.
மிதுனம் அல்லது கன்னியில் சனி இருக்கும்போது பிறந்த ஒருவர் வெட்கமற்றவராக இருப்பார்; துக்கத்தில் இருப்பார்; ஏழையாக இருப்பார்; குழந்தைகள் இருக்காது; மோசமான ஓவியர் அல்லது எழுத்தாளராக இருப்பார்; சேவகராக இருப்பார்; தலைமை அதிகாரியாக இருப்பார்.
18. ரிசபத்தில் சனி இருக்கும்போது பிறந்த ஒருவர் கீழ்குலப் பெண்களின் மீது காமம் கொண்டவராக இருப்பார்; குறைவான செல்வம் கொண்டிருப்பார், பல மனைவிகள் கொண்டிருப்பார்.
துலாம் இராசியில் சனி இருக்கும்போது பிறந்த ஒருவர் புகழ்மிக்க மனிதராக இருப்பார்; ஒரு நகரத்தில் கட்சியின் தலைவராக அல்லது படையின் தலைவராக இருப்பார்; செல்வந்தராக இருப்பார்.
கடகத்தில் சனி இருக்கும்போது பிறந்த ஒருவர் ஏழையாக இருப்பார்; பற்கள் குறைவாக இருக்கும்; தாயிடமிருந்து பிரிந்து இருப்பார்; குழந்தைகள் இருக்காது; முட்டாளாக இருப்பார்.
சிம்மத்தில் சனி இருக்கும்போது பிறந்த ஒருவர் மரியாதைக்கு உரியவராக இருக்க மாட்டார்; துயரத்தில் இருப்பார்; குழந்தைகள் இருக்காது, சுமைகளைத் தூக்குபவராக இருப்பார்.
சனியின் பலன்கள் தொடரும்…
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment