வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி - பதினெட்டு
இராசிகளில் பிறக் கோள்கள் தொடர்ச்சி…
19. தனுசு அல்லது மீனத்தில் சனி இருக்கும்போது பிறந்த ஒருவரின் இறப்பு மரியாதைக்குரிய வகையில் புகழ்மிக்கதாக இருக்கும்; அரசரின் அவையில் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக இருப்பார்; நல்ல மகன்களும் நல்ல மனைவியும் அமையப் பெற்றிருப்பார்; சிறப்பான சொத்துக்களைப் பெற்றிருப்பார்; நகரத்தில் படையின் தலைவராக அல்லது கிராமத்தில் முதன்மை மனிதராக இருப்பார்.
மகரம் அல்லது கும்பத்தில் சனி இருக்கும்போது பிறந்த ஒருவர், மாற்றானின் மனைவி மற்றும் அவரது சொத்துக்களை அனுபவிப்பார்; நகரத்தின் அல்லது கிராமத்தின் அல்லது படையின் தலைவராக இருப்பார்; பலகீனமான விழிகளைக் கொண்டிருப்பார்; அழுக்கானவராக இருப்பார்; அலட்சியமான முறையில் குளிப்பார்; சொந்தமான சொத்தும் அதற்கு உரிமையானவராகவும் இருப்பார்; அவரால் சம்பாதிக்கப்பட்ட சொத்துக்களை அனுபவிப்பவராகவும் இருப்பார்.
குறிப்பு:
சென்ற பகுதியில் பத்தி-13 மற்றும் அதன் குறிப்பில் குறிப்பிடப்பட்டவாறு, கோள்களின் பலன்களின் வலிமையினைத் தீர்மானிக்க வேண்டும்.
20. இராசி சக்கரத்தில் உள்ள வீடுகளில் சந்திரன் இருக்கும் நிலைக்கு ஏற்பவும் அது பிறக் கோள்களின் தொடர்பில் இருப்பதற்கு ஏற்பவும், இலக்கினத்திற்கு ஏற்பவும் பலன்கள் தீர்மானிப்பது போலவே, பலன்களைத் தீர்மானிக்க வேண்டும்; குறைவான அல்லது மிகுதியான பலன்கள் என்பது இலக்கினம், 2வது, 3வது மற்றும் இதர பாவங்களுக்கு ஏற்பவே இருக்கும்; வீடுகள் வலிமையாக இருந்தால், அதன் அதிபதிகளும் வலிமையாக இருந்தால், அவை பலன்களை உயர்த்தி வழங்கும், இல்லையெனில் பலன்கள் குறையும்.
குறிப்பு:
உதய இராசியும் அதன் அதிபதியும் வலிமையானதாக இருந்தால், அப்போது பிறக்கும் மனிதன் வலிமையான உடலமைப்பினைப் பெற்றிருப்பார்; 2வது வீடும் அதன் அதிபதியும் வலிமையானதாக இருந்தால், அந்த மனிதர் வசதியானவராக இருப்பார். அதுபோலவே பிற பாவங்களுக்கும் அது பொருந்தும்.
பகுதி-18 முடிவுற்றது
அடுத்து பகுதி-19 – கோள்களின் பார்வை பலன்கள்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment