வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி - இருபத்து ஆறு
சாதகம் இல்லாத நிலை …தொடர்கிறது
5. வேறு
சிலரின் கருத்துப்படி, பிறந்த பொழுதின் சந்திர மாதத்தினை, கேள்வி கேட்கும்போது சந்திரன்
நவாம்சத்தில் இருப்பதைக் கொண்டு தீர்மானிக்க வேண்டும்(1). மேலும், பிறக்கும்போது சந்திரன்
இருக்கும் இராசியானது, பிரசன்ன இலக்கினம் அல்லது அதிலிருந்து 5வது வீடு அல்லது 9வது
வீடு இவற்றில் அதிக வலிமை மிக்கதாகும். மூன்று வீடுகளில் பலமிக்கதை அறிவது கடினமாக
இருப்பின், காலபுருசர் தத்துவத்தின்படி, கேள்வி கேட்பவர் தொட்டுக்கொண்டிருக்கும் உடலின்
பாகத்திற்கு உரிய வீடு சந்திரன் இருக்கும் வீடாகும் அல்லது கேள்வி கேட்கும்போது அதுபோன்ற
குறிப்பினை உணர்த்துவதைக் கருத்தில் கொண்டு வீட்டினைத் தீர்மானிக்க வேண்டும்(2).
குறிப்பு:
(1) இதில்
உள்ள விதியானது அவ்வளவாக தெளிவில்லாமல் இருக்கிறது. இது பற்றி ஆசிரியர் கூறுவதை உரையாசிரியர்
விளக்கமாகக் கூறியிருக்கிறார். ஒவ்வொரு நவாம்சத்தினையும் 9 பாகங்களாகப் பிரித்து அதன்படி
தீர்மானிக்கும் முறையினை விளக்கியிருக்கிறார்.
|
நவாம்ச பாகத்திற்கு பிறகு
|
நவாம்சம் பாகம்வரை
|
சந்திர மாதம்
|
1
|
மேசத்தின்
– 8
|
துலாத்தின் -7
|
கார்த்திகை
|
2
|
துலாத்தின்
– 7
|
மிதுனத்தின் – 6
|
மிருகசீரிசம்
|
3
|
மிதுனத்தின்-6
|
கடகத்தின்-5
|
பூசம்
|
4
|
கடகத்தின்
– 5
|
சிம்மத்தின் – 4
|
மகம்
|
5
|
சிம்மத்தின்
– 5
|
கன்னியின் – 7
|
பூரம்
|
6
|
கன்னியின்
– 7
|
துலாத்தின் -6
|
சித்திரை
|
7
|
துலாத்தின் – 6
|
விருச்சிகத்தின் – 5
|
விசாகம்
|
8
|
விருச்சிகத்தின் -5
|
தனுசுவின் – 4
|
கேட்டை
|
9
|
தனுசுவின் – 4
|
மகரத்தின் – 3
|
பூராடம்
|
10
|
மகரத்தின் – 3
|
கும்பத்தின் -2
|
திருவோணம்
|
11
|
கும்பத்தின் -2
|
மீனத்தின் – 5
|
பூரட்டாதி
|
12
|
மீனத்தின் -5
|
மேசத்தின் – 8
|
அசுவணி
|
(2) எடுத்துக்காட்டாக,
அந்த நேரத்தில் உயிரினங்கள் உணர்த்தும் அல்லது கேட்கக் கூடிய ஒலி இவற்றைக் கொண்டு இராசியினைத்
தீர்மானிக்க வேண்டும்.
சாதகம்
இல்லாத நிலை … தொடரும்
No comments:
Post a Comment