வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி - இருபத்து ஆறு
சாதகம் இல்லாத நிலை …தொடர்கிறது
3. ரிதுவானது
அயணத்தோடு ஒத்துவரவில்லை எனில், அடுத்த மாற்று கோளினின் ரிதுவினைக் கணக்கில் கொண்டு
ஒருவரின் பிறந்த ரிதுவை(1) தீர்மானிக்க வேண்டும். சந்திரனும் சுக்கிரனும் ஒன்றிற்கு
ஒன்று மாற்று கோள்கள். அதுபோல் புதனும் செவ்வாயும்(2), வியாழனும் சனியும். கேள்வி கேட்கும்
நேரத்தில் உதய திரேக்கானம் முதல் பாதியாக இருந்தால், பிறந்த மாதம் என்பது ரிதுவின்
இரண்டு மாதங்களின் முதல் மாதமாகும்; இரண்டாவது பாதியாக இருந்தால், பிறந்த மாதம் என்பது
ரிதுவின் இரண்டாவது மாதமாகும். பிறந்த நாள் என்பது பாதி திரேக்கானத்தின் பகுதியில்
உதயமாகி உள்ளதைக் கொண்டு தீர்மானிக்க வேண்டும்(3).
குறிப்பு:
1. இது பற்றி
சென்ற பத்தியில் ஏற்கனவே விளக்கப்பட்டுள்ளது.
2. உரையாசிரியரின்
கருத்துப்படி, புதன், செவ்வாய், சூரியன் ஆகியவை மாற்றுக் கோள்கள்.
3. கேள்வி
கேட்கும் நேரத்தில் உள்ள உதயத்தின் பாதி திரேக்கானமானது ஒரு மாதத்தின் 30 நாட்களைக் குறிக்கும் என்பதால்,
உதயத்தின் பாதிக்கு மேல் இருந்தால் அந்த மாதத்தின் 15 நாட்களுக்குள் நிகழ்ந்திருக்க
வேண்டும். அதாவது, பிறந்த தேதி என்பதை உதயத்தின் பாதிக்கு மேல் உள்ள பகுதியின் விகிதாச்சாரத்தின்
அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும். ஒரு திரேக்கானம் என்பது 10 பாகைகள் கொண்டது; ஒரு
திரேக்கானத்தின் பாதி என்பது 5 பாகைகளாகவும், முப்பாதாவது பகுதி என்பது 10 நொடியாக
இருக்கும், எனவே உதய திரேக்கானத்தின் ஒவ்வொரு 10 நொடியும் ஒரு நாளைக் குறிக்கும்.
சாதகம்
இல்லாத நிலை … தொடரும்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment