வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பகுதி - ஒன்று (தொடர்ச்சி)
வரையறையும் அடிப்படைக் கொள்கைகளும்
[இராசி மண்டலம்]
19. இலக்கின அதிபதி
அல்லது வியாழன் அல்லது புதன் இலக்கினத்தில் இருந்தாலோ அல்லது தொடர்புடன் இருந்தாலோ,
இலக்கினம் வலிமையுடையதாக இருக்கும், இது பிறக் கோள்களால் கிடையாது. கேந்திர இராசிகள்
இயற்கையில் வலிமை வாய்ந்தவை1. இருகால் இராசிகள் பகலில் வலிமை வாய்ந்தவை,
நான்குகால் இராசிகள் இரவில் வலிமை வாய்ந்தவை, பலகால் இராசி சூரிய உதயம் சூரிய அஸ்தமன
நேரங்களில் வலிமை வாய்ந்தவை. மேசத்திலிருந்து முதல் ஆறு இராசிகளின் மனமானது2
முறையே 20, 24, 28, 32, 36, 40 எனவும், அடுத்த ஆறு இராசிகளில் 40, 36, 32, 28, 24,
20 எனவும் உள்ளது. 3வது வீடு துஸ்சிக்யா (Duschikya) எனவும் 9வது தபஸ் (Tapas) அல்லது
திரித்திரிகோணம் எனப்படுகிறது.
குறிப்புகள்
(சிதம்பரம் அய்யர்)
1. எனவே, பணபர வீடுகள் என்பவை கேந்திரத்தைவிட வலிமை குன்றியவை,
ஆபோக்லிம வீடுகள் மற்ற எல்லா வீடுகளைக் காட்டிலும் வலிமை குன்றியவை. நான்கு கேந்திரங்களில்,
இருகால் இராசிகள் முதல் கேந்திரத்தில் வலிமை வாய்ந்தவை, நாற்கால் இராசிகள் 10வது கேந்திரத்திலும்,
பலகால் இராசி 7வது கேந்திரத்திலும், நீர் இராசிகள் 4வது கேந்திரத்திலும் வலிமை வாய்ந்தவை.
2. இது பகுதி ஐந்து, பத்தி-23ல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
20. மேசம் முதற்கொண்டு
தொடங்கும் பன்னிரெண்டு இராசிகளும் முறையே, சிவப்பு (மேசம்), வெண்மை (ரிசபம்), பச்சைக்கிளியின்
நிறம்(மிதுனம்), பாடலி நிறம் (ஊதுகுழல் மலர்), கருப்பு-வெள்ளை (சிம்மம்), பல்வேறு வண்ணம்
(கன்னி), கருப்பு (துலாம்), பொன்னிறம் (விருச்சிகம்), நெல் உமியின் நிறம் (தனுசு),
வெண்-சிவப்பு (மகரம்), கீரிப்பிள்ளையின் நிறம் (கும்பம்), மீனின் நிறம் (மீனம்). ப்ளவா
(Plava)1 எனப்படும் இந்த இராசிகள் அந்தந்த இராசி அதிபதிகளின் திசைகளைக்
குறிக்கும். இரண்டாம் வீடு சூரியனால் இருக்குமானால், அது வேசி (Vesi) எனப்படும்.
குறிப்புகள் (சிதம்பரம் அய்யர்)
1. இது பகுதி ஐந்து பத்தி 21-ல் பயன்படுகிறது.
முதல் பகுதி முற்றிற்று.
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505 - 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-15
|
No comments:
Post a Comment