வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பகுதி - ஒன்று (தொடர்ச்சி)
வரையறையும் அடிப்படைக் கொள்கைகளும்
[இராசி மண்டலம்]
15. உதய இராசியிலிருந்து (இலக்கினத்திலிருந்து) தொடங்கும் 12 இராசிகளின் முக்கியத்துவங்கள் முறையே (சாதகரின்) உடல், குடும்பம், சகோதரர்கள், உறவுகள், குழந்தைகள், எதிரிகள், மனைவி, இறப்பு, தலைவிதிப்பலன்கள், சொந்தவாழ்க்கை, இலாபம், நட்டம் ஆகியவை ஆகும்1. இலக்கினத்திலிருந்து 3வது, 6வது, 10வது, 11வது வீடுகள் உபச்சயா (முன்னேற்றம்) இராசிகள், ஆனால் பிறர் சொல்வதுபோல் அல்ல2.
குறிப்புகள்
(சிதம்பரம் அய்யர்)
1. இராசிசக்கரத்தில் இலக்கினத்திலிருந்து கூறப்படும் பல்வேறு வீடுகளின் முக்கியத்துவம் கீழ்வருமாறு:
இலக்கினம் அல்லது 1வது வீடு
|
உடல், புகழ், மூட்டுகள்
|
2வது வீடு
|
குடும்பம், சொத்து, கண்கள், பேச்சு, உண்மை
|
3வது வீடு
|
சகோதரர்கள், தைரியம், உணவு
|
4வது வீடு
|
உறவுகள், கல்வி, தாய், பசுக்கள், வசிப்பிடம், வாகனம், வசதி
|
5வது வீடு
|
குழந்தைகள், அறிவுத்திறன், முந்தைய வினைப்பயன்
|
6வது வீடு
|
எதிரிகள், சம்பந்திகள், நோய்கள்
|
7வது வீடு
|
மனைவி, சகிப்புத்தன்மை, மரியாதை
|
8வது வீடு
|
மரணம், ஆயுள்
|
9வது வீடு
|
தலைவிதிப்பயன், தந்தை, மருத்துவம்
|
10வது வீடு
|
சொந்தவாழ்க்கை, அறிவு, உடைகள்
|
11வது வீடு
|
இலாபம், பலனடைதல்
|
12வது வீடு
|
நட்டம், தீயவினை, பயணங்கள்
|
2. காரக்கர் மற்றும் அவர்தம் சோதிட மாணாக்கர்கள் கருத்துப்படி, 3வது, 6வது, 10வது, 11வது வீடுகள் உபச்சய வீடுகளாக இருக்கும், அதாவது, அந்த 4 வீடுகளின் அதிபதிகளுக்கு பகைக் கோள்களாகவோ அல்லது அசுபக் கோள்களாகவோ இருக்கும் போது மட்டும். ஆனால், ஆசிரியர், காரக்கரின் கூற்றினை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதுடன், அவர் சத்தியாச்சார்யர் மற்றும் யவனேஸ்வரரின் கருத்துக்களையே துணைக் கொள்கிறார்.
16. இராசி சக்கரத்தில் இலக்கினத்தில் இருந்து தொடங்கும் பன்னிரெண்டு இராசிகளும் நுட்பமாகக் குறிப்பிடுவது (1) கல்பம்(சக்தி)(Kalpa),
(2) ஸ்வா(சொத்து)(Sva),(3) விக்ரமம்(வலிமை)(Vikrama), (4) கிரகம் (வசிப்பிடம்)(Graha), (5) ப்ரதிபா (அறிவு)(Pratibha), (6) க்ஷட (காயம்)(Kshata), (7) மன்மதன்(ஆசை)(Manmatha), (8) ரந்த்ரம்(துளை)(Randhra), (9) குரு (தந்தை அல்லதுஆசான்)(Guru), (10) மானம் (மரியாதை)(Mana), (11) பாவம் (கைக்கொளல்)(Bhava), (12) வியாயம்(இழப்பு)(Vyaya) ஆகியவை. 4வது மற்றும் 8வது வீடுகள் சதுரஸ்ர இராசிகள் ஆகும். 7வது வீடு டையுனா, 10வது வீடு அக்னா எனப்படும்.
குறிப்புகள்
(சிதம்பரம் அய்யர்)
பல்வேறு சோதிட பதங்கள் இப்பத்தியில் வரையறுக்கப்பட்டுள்ளது.
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505 - 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-15
|
No comments:
Post a Comment