Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Sunday, June 4, 2017

சூரியனின் பாவக பலன்கள் - பிருகத் ஜாதகா – 153


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்



பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  இருபது

பாவங்களில் கோள்களின் பலன்கள்


1. ஒருவர் பிறக்கும் நேரத்தில், சூரியன் இலக்கினத்தில் இருந்தால், அந்த மனிதர் சண்டை இடுவதில் விருப்பம் கொண்டிருப்பார், மெதுவாக வேலை செய்பராக இருப்பார், பார்வையற்றவராக, கருணையற்றவராக இருப்பார்; ஆனால், மேசம் இலக்கினமாக இருந்து அதில் சூரியன் இருந்தால், அந்த மனிதர் செல்வந்தராகவும், கண் நோய் உடையவராகவும் இருப்பார்; சிம்மம் இலக்கினமாக இருந்து அதில் சூரியன் இருந்தால், அவருக்கு மாலைக் கண் நோய் இருக்கும்; துலாம் இலக்கினமாக இருந்து அதில் சூரியன் இருந்தால் அந்த மனிதர் குருடராகவும் ஏழையாகவும் இருப்பார்; கடகம் இலக்கினமாக இருந்து அதில் சூரியன் இருந்தால், அவருக்கு கண்ணில் கரும்புள்ளி இருக்கும். இலக்கினத்திலிருந்து 2வது வீட்டுல் சூரியன் இருந்தால், அந்த மனிதர் பெரும் பணக்காரராகவும், அரசரால் சொத்துக்களை இழப்பவராகவும், முகத்தில் வியாதி உடையவராகவும் இருப்பார்.


2.  பிறக்கும் நேரத்தில், சூரியன் இலக்கினத்திலிருந்து 3வது வீட்டில் இருந்தால் அந்த மனிதர் புத்திசாலியாகவும், வலிமை மிக்கவராகவும் இருப்பார்; அது நான்காவது வீட்டில் இருந்தால் அவர் துன்பத்தில் உழல்பவராகவும், மனக் குழப்பம் மிக்கவராகவும் இருப்பார்; அது 5வது வீட்டில் இருந்தால், அவருக்கு குழந்தைகள் இருக்காது என்பதுடன் ஏழையாகவும் இருப்பார்; 6வது வீட்டில் இருந்தால் அவர் வலிமை மிக்கவராகவும் எதிரிகளை வசப்படுத்தப்படுபவராகவும் இருப்பார்(1)

குறிப்பு (1) : வேறு நூலின்படி, சூரியனானது இலக்கினத்திலிருந்து 6வது வீட்டில் இருந்தால், அந்த மனிதரின் எதிரிகள் அழிவினைச் சந்திப்பர். சத்தியாச்சாரியாரின் கருத்துப்படி, அத்தகைய மனிதர் எதிரிகள், நோய்கள், துன்பங்கள் இல்லாமல் இருப்பார்; ஆனால் யவனாச்சாரியார் மற்றும் சுஜிதவஜா அவர்களின் கருத்திற்கு இந்த உரையானது வலிமை சேர்க்கிறது.

பாவங்களில் கோள்கள்.. தொடரும்


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17


Wednesday, May 31, 2017

நவாம்ச சந்திரனின் பலன்கள்(5) -பிருகத் ஜாதகா – 152


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்



பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  பத்தொன்பது

கோள்களின் பார்வை பலன்கள் தொடர்ச்சி…


9. சந்திரன் வர்க்கோத்தம நிலையில் இருந்து, அதன் சொந்த நவாம்சத்திலோ அல்லது வேறு நவாம்சத்திலோ இருந்தால், சந்திரனானது பல்வேறு நவாம்சத்தில் இருந்து பல்வேறு கோள்களால் பார்க்கபடுவதால் ஏற்படும் நற்பலன்கள் என்பது அவைகளுக்கு ஏற்ப முழுமையாக, அல்லது முற்றிலும் இல்லாமல் அல்லது குறைவாக இருக்கும்; அதுபோல் தீய பலன்கள் என்பது குறைவாக அல்லது முற்றிலும் இல்லாமல் அல்லது முழுமையாக இருக்கும்(1). நவாம்ச அதிபதி வலிமை மிக்கதாக இருந்தால், நவாம்சத்தினைக் கோள்கள் பார்க்கப்படுவதால்(2) ஏற்படும் பலன்கள் மட்டுமே கிடைக்கும், சந்திரன் இருந்து கோள்கள் பார்ப்பதால் கிடைக்கக்கூடிய பலன்கள் கிடைக்காது.


குறிப்பு:

(1)  இதே குறிப்புகள் உதய இராசிக்கும் மற்றும் சூரியன் குறிப்பிட்ட நவாம்சத்தில் இருந்து பல்வேறு கோள்களால் பார்க்கப்படுவதால் ஏற்படும் பலன்களுக்கும் பொருந்தும்.

(2)  சந்திரன் இருக்கும் நவாம்சங்கள் அல்லது உதய நவாம்சம் மற்றும் கோள்களால் பார்க்கப்படுதல்.


கோள்களின் பார்வைகளின் பலன்கள் – முற்றும்


 அடுத்து - பகுதி-20 -  பாவங்களில் கோள்கள்


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17



Tuesday, May 30, 2017

நவாம்ச சந்திரனின் பலன்கள்(4) - பிருகத் ஜாதகா – 151


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்



பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  பத்தொன்பது

கோள்களின் பார்வை பலன்கள் தொடர்ச்சி…


8. பிறக்கும் நேரத்தில், சந்திரனானது சனியின் நவாம்சத்தில் இருந்து, அது சூரியனால் பார்க்கப்பட்டால், அந்த மனிதர் குறைவான குழந்தைகளைக் கொண்டிருப்பார்; செவ்வாயால் பார்க்கப்பட்டால், செல்வத்தின் மூலம் மகிழ்ச்சியை இழந்தவராக இருப்பார்; புதனால் பார்க்கப்பட்டால் கர்வம் மிக்கவராக இருப்பார்; வியாழனால் பார்க்கப்பட்டால் அவரது நிலைக்கு ஏற்ப உரிய வேலைகளைச் செய்வார்; வெள்ளியால் பார்க்கப்பட்டால் தாழ்நிலைப் பெண்களின் மீது மோகம் கொண்டிருப்பார்; சனியால் பார்க்கப்பட்டால் அவர் கருமியாக இருப்பார்(1). மேலே குறிப்பிட்டவை அனைத்தும் சந்திரன் ஒரு குறிப்பிட்ட நவாம்சத்தில் இருந்து அது பல்வேறு கோள்களினால் பார்க்கப்படுவதால் ஏற்படும் பலன்கள் என்பது சூரியனுக்கும் பொருந்தும் – அதாவது சூரியனால் பார்க்கப்படுவது என்பது சந்திரனால் பார்க்கப்படுவது எனும் விதிவிலக்கினைத் தவிர.

குறிப்பு:
(1)  இதே குறிப்புகள் உதய நவாம்சத்திற்கும், சந்திரனுக்கு இருப்பதுபோலவே பொருந்தும் – ஆனால் சந்திரன் உதய இராசியைப் பார்க்குமானால், அது கடகத்தினைத் தவிர பிற இராசியாக இருந்தால், அந்த பலனானது தீமையாக இருக்கும்.
நவாம்ச சந்திரனின் பலன்கள்.. தொடரும்


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17