வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி - பத்தொன்பது
கோள்களின் பார்வை பலன்கள் தொடர்ச்சி…
8. பிறக்கும்
நேரத்தில், சந்திரனானது சனியின் நவாம்சத்தில் இருந்து, அது சூரியனால் பார்க்கப்பட்டால்,
அந்த மனிதர் குறைவான குழந்தைகளைக் கொண்டிருப்பார்; செவ்வாயால் பார்க்கப்பட்டால், செல்வத்தின்
மூலம் மகிழ்ச்சியை இழந்தவராக இருப்பார்; புதனால் பார்க்கப்பட்டால் கர்வம் மிக்கவராக
இருப்பார்; வியாழனால் பார்க்கப்பட்டால் அவரது நிலைக்கு ஏற்ப உரிய வேலைகளைச் செய்வார்;
வெள்ளியால் பார்க்கப்பட்டால் தாழ்நிலைப் பெண்களின் மீது மோகம் கொண்டிருப்பார்; சனியால்
பார்க்கப்பட்டால் அவர் கருமியாக இருப்பார்(1). மேலே குறிப்பிட்டவை அனைத்தும் சந்திரன்
ஒரு குறிப்பிட்ட நவாம்சத்தில் இருந்து அது பல்வேறு கோள்களினால் பார்க்கப்படுவதால் ஏற்படும்
பலன்கள் என்பது சூரியனுக்கும் பொருந்தும் – அதாவது சூரியனால் பார்க்கப்படுவது என்பது
சந்திரனால் பார்க்கப்படுவது எனும் விதிவிலக்கினைத் தவிர.
குறிப்பு:
(1) இதே குறிப்புகள்
உதய நவாம்சத்திற்கும், சந்திரனுக்கு இருப்பதுபோலவே பொருந்தும் – ஆனால் சந்திரன் உதய
இராசியைப் பார்க்குமானால், அது கடகத்தினைத் தவிர பிற இராசியாக இருந்தால், அந்த பலனானது
தீமையாக இருக்கும்.
நவாம்ச சந்திரனின் பலன்கள்.. தொடரும்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment