நான்
உங்களை மிகப் பெரிய வான் அறிவியல் பள்ளிக்கு அழைத்துச் செல்ல விரும்பவில்லை. நான் அத்தகைய
அறிவியலாளனும் இல்லை. ஆனால் இந்தப் பிரபஞ்சம் என்பது என்ன? விண்மீன் தொகுதி என்பது
என்ன? நமது சூரியக் குடும்பம் எப்படி வந்தது? அதில் நமது பூமி எங்குள்ளது? என்பது போன்ற
அடிப்படைத் தகவல்களை – இந்த உலகம் பொதுவாக ஏற்றுக் கொண்ட கருத்துக்களை இங்கு பகிர்ந்து
கொள்ள விழைகிறேன். அது இந்த வலைப்பூவின் நோக்கத்தை செம்மைப் படுத்தும்.
அண்டம்
அல்லது பிரபஞ்சம் விரிய ஆரம்பித்தவுடன், எண்ணற்ற விண்மீன் தொகுதிக் கூட்டங்கள் உருவாகி
உள்ளன. அவற்றை கேலக்ஸி என விண் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஒவ்வொரு கேலக்ஸியிலும் எண்ணற்ற
விண்மீன்கள், கோள்கள், குறுங்கோள்கள், தூசுகள் என விரவிக் கிடக்கின்றன.
நமது
கேலக்ஸியை, MILKY WAY அதாவது பால் வீதி எனும் பெயரால் அழக்கின்றனர். நாமும் அப்படியேதான்
அழைகின்றோம். நமது பால் வீதியில் விண்மீன் கூட்டங்களின் தொகுதி, கம்பிவலைச் சுருள்
போல் உள்ளன. பால் வீதி ஒரு நீள் வட்டமாக இருக்க, அதன் விட்டம் ஏறக்குறைய ஒரு இலட்சத்து
இருபதாயிரம் ஒளியாண்டு இருக்கக் கூடும் என இயற்பியலாளர்கள் கூறுகின்றனர். அதில்
10000 முதல் 40000 கோடி (100-400 பில்லியன்கள்) விண்மீன்கள் இருக்கக் கூடும் என்றும்,
அவற்றிற்கு உறுதுணையாக எண்ணிலடங்கா கோள்களும் இருக்கக் கூடும் என்றும் கூறுகின்றனர்.
ஒவ்வொரு
விண்மீனும் தத்தமது கோள்களுடன் கோலோட்சி வருவகின்றன, நமது சூரியக் குடும்பமும் அதில்
ஒன்று. நமது பால்வீதியில், நம் சூரியக்குடும்பம், பால்வீதியின் மையத்திலிருந்து ஏறக்குறைய
27,000 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது.
இந்தக்
காணொளிக் காட்சியைப் பாருங்கள். நமது பால் வீதியும் சூரியக் குடும்பமும் எவ்வளவு அற்புதம்.
.....அடுத்த பதிவில், சூரியக் குடும்பமும் நமது பூமியும்.
அவன் - இவன்
|
|
அவன் :
|
அப்பாடா, ஒரு வழியாய் பால் வீதி முடிச்சிட்டார்
|
இவன்
:
|
அவரசப்படாதே, சோதிடப் பாடம் எப்ப ஆரம்பிப்பார்னு
பார்ப்போம்.
|
No comments:
Post a Comment