புதன்
சூரியக் குடும்பத்தின் மிகச்சிறிய
குட்டிக் கோள். சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் கோளும் இதுதான். தற்போதைய
கணக்கின்படி உள்ள எட்டுக் கோள்களில் நான்கு கோள்கள் திட நிலையில் உள்ளவை.
செவ்வாய், புதன், வெள்ளி மற்றும் நமது பூமி ஆகிய நான்கும் திட நிலையில் உள்ளவை.
இது சூரியனுக்கு மிக அருகில் இருப்பதால்
மற்றக் கோள்களைவிட வெப்பம் அதிகம். மெர்குரி எனும் ஆங்கிலச் சொல்லுக்கு பாதரசம்
என்பது பொருள் திரவ நிலையில் உள்ள உலோகம் பாதரசம். ஆனால் நமது புதனோ ஒரு இரும்புப்
பந்துபோல் திட நிலையில் உள்ளது.
பூமி தன்னைத்தானே சுற்றிக் கொள்ள 24 மணி
நேரம் எடுத்துக் கொள்கிறது. புதனோ தன்னைச் சுற்றிக் கொள்ள 59 நாட்கள் எடுத்துக்
கொள்கிறது. அவ்வளவு பொறுமை. அதனால், ஒரு புறம் வெகு வெப்பமாகவும் மறுபுறம் வெகு
குளிராகவும் உள்ளது. அதாவது 30 நாட்கள் பகலாகவும் 30 நாட்கள் இரவாகவும் உள்ளது.
அதன் சூழலில் உயிர்வாயும், சோடியமும், ஹைட்ரஜனும், ஹீலியமும், பொட்டாசியமும் நிரவி
உள்ளன. உயிர்வாயுவான ஆக்சிஜன் இருந்தாலும் அங்கு எதுவும் உயிர் வாழ்வதற்கான
சாத்தியக் கூறு இல்லை. காரணம் அதிக வெப்பம் அதிக குளிர்.
புதனின்
மேற்பரப்பு
சில குறிப்புகள்:
- · புதன் சூரியனுக்கு அருகில் உள்ள கோள்.
- · மிகச்சிறிய கோள். சந்திரனை விட சற்றே பெரியது.
- · சூரியனிலிருந்து 58 மில்லியன் கி.மீ. தொலைவில் உள்ளது.
- · அதன் ஆரம் 2439 கி.மீ (ஏறக்குறைய சென்னை – தில்லி தூரம்)
- · அதன் நிறை 3.30e23 கி.கி.
- · தன்னைத்தானே சுற்றிக் கொள்ள 59 நாட்கள்
- · சூரியனைச் சுற்றிவர 88 நாட்கள்
- · அதன் சூழல் சூரியக் காற்றாலும், நுண்ணலைக் கதிர்களாலும் எப்போதும் தாக்குதலுக்குள்ளாகி சூழப்பட்டுள்ளது
- · இதற்கு துணைக் கோள்கள் எதுவும் கிடையாது
- · பகல் நேர வெப்பம் 430 செல்சியஸ்; இரவு வெப்பம் (-180) செல்சியஸ்
- · உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் எதுவும் இல்லை.
- · புதனிலிருந்து சூரியனைப் பார்த்தால், பூமியிலிருந்து பார்ப்பதைப்போல் மூன்று மடங்கு பெரிதாக இருக்கும்.
- · புதனிலும் காந்தப் புலம் உண்டு
- · புதன் கற்பாறைகளும் இரும்புப் பாறைகளும் சேர்ந்த ஒரு உலோகப் பந்தாய் சுற்றி வருகிறது. பாறை 30 சதமும், பெரும்பகுதி இரும்புடன் சேர்ந்த உலோகக் கலவையாக 70 சதவீதமாகவும் உள்ளது.
- · மற்ற திடக் கோள்களில் இது நேர்மாறாக இருப்பதால், இதன் தோற்றம் பற்றி மாற்றுக் கருத்துக்களும் உள்ளன.
- · புதன் வேறு ஒரு கேலக்சியில் உருவாகி, பின்னர் வான் மண்டலத்தில் மிதந்து, தற்போது உள்ள இடத்திற்கு வந்திருக்கலாம் எனவும் ஒரு சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
- · சூரியனின் கோணத்தில் 28.3 டிகிரியில் புதன் இருப்பதால், சூரியனின் வெளிச்சம் காரணமாக இதனை பெரும்பாலும் பூமியிலிருந்து பார்க்க முடிவதில்லை.
…….அடுத்து சுக்கிரன் எனும் வெள்ளிக் கோள்
(நன்றி: பல்வேறு
இணைய தளங்கள்)
அவன் - இவன்
|
|
அவன் :
|
புதனைப் பார்க்க முடியாமல் போவது இருக்கட்டும், இவரையே பத்து நாளா
பார்க்க முடியலயே.
|
இவன்
:
|
எங்கயோ வெளியூர் போயிருக்கிறாராம். இதைக் கூட வெளியூரிலிருந்துதான்
பதிவு செஞ்சாராம்.
|
No comments:
Post a Comment