My Very Educated Mother Just Showed Us Nine Planets. இது குழந்தைகளுக்கு ஒன்பது கோள்களையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள
சொல்லித் தரப்படும் ஒரு வாக்கியம். முதல் எழுத்துக்கள் அந்தந்தக் கோள்களின் ஆரம்ப எழுத்துக்கள்.
நேற்றையக்
கருத்து இன்று பொய்த்துப் போகலாம், இன்றையக் கருத்து நாளை பொய்த்துப் போகலாம் எனும்
கருத்துப்படி, 1930-ல் அறியப்பட்ட ஒரு கோள் 2006-ல் நீக்கப்பட்டு, இன்று எட்டு முதன்மைக்
கோள்களும், பல துணைக்கோள்களும், குறுங்கோள்களும், தலைமைப் பொறுப்பில் இருக்கும் நமது
சூரிய விண்மீனைச் சுற்றி வருகின்றன. விண்மீன்களுக்கும் கோள்களுக்கும் உள்ள ஒரு முக்கிய
வேறுபாடு – விண்மீன்கள் ஒளியை உமிழும் – கோள்கள் ஒளியைப் பிரதிபலிக்கும்
சூரியன்
இது ஒரு
விண்மீன். மனிதன் முதன் முதலில் கண்டு பயந்த நெருப்புப் பந்து. இந்த நெருப்புப் பந்தைத்தான்
சூரியக் குடும்பத்தின் கோள்கள் அனைத்தும் கடிகார எதிர் சுற்றில் சுற்றி வருகின்றன.
சூரியன்
மிகப் பெரிய விண்மீன். ஏறக்குறைய 1.40 மில்லியன் கிலோமீட்டர் விரிவும், அதன் மேற்பரப்பில்
109 பூமிகளை பரப்பக்கூடிய அளவும், அது ஒரு வெற்றிடப் பந்தாக இருந்தால் ஒரு மில்லியனுக்கும்
அதிகமான பூமிகளை நிரப்பக் கூடிய ஒரு பெரிய பந்தாகவும் உள்ளது.
இந்த நெருப்புப்
பந்து வெளிப்புறத்தில் 10,000 ஃபாரன்ஹீட்டாகவும், உட்கருவில் 2,80,00,000 ஃபாரன்ஹீட்டாகவும்
வெப்பத்தை கொண்டிருக்கிறது.
ஏனிந்த வெப்பம்.
கொஞ்சம் வேதியியல். அணுக்களில் பிளவு ஏற்படும்போதும் (fission), அணுக்களில் சேர்க்கை
ஏற்படும்போதும் (fusion) அளப்பறிய வெப்பம் உண்டாகும். அந்த அடிப்படையில்தான் அணு உலைகள்
செயல்படுகின்றன. இதை அணுக்கரு இயற்பியலில் (Nuclear Physics) விரிவாக படிப்பார்கள்.
சூரியனின்
உட்கருவானது, ஏராளமான ஹைட்ரஜன் அணுக்களைக் கொண்டுள்ளது. அவை அணுக்கரு இணைவு விளைவில்
ஒன்றிணைந்து ஹீலியம் அணுக்களாக மாற்றம் பெறுகின்றன. (ஹைட்ரஜனின் அணு எண் ஒன்று – ஹீலியத்தின்
அணு எண் இரண்டு). அவ்வாறு இணையும்போது ஏற்படும் வெப்பம்தான் எரிசக்தியையும் உற்பத்தி
செய்கிறது. ஒளித்துகள்கள் எனும் போட்டான்கள் அந்த சக்தியை உள்ளிருந்து சூரியனின் மேற்பரப்பிற்கு
கொண்டுவருகின்றன. அந்த வெப்பம்தான் பூமிக்கும் கடத்தப்படுகின்றது.
சூரியன் - சில
குறிப்புகள்:
- Ø நமது பால்வீதியில் 100 பில்லியன்களுக்கும் மேலான சூரியன்கள் உள்ளன. அதில் நமது சூரியனும் ஒன்று.
- Ø சூரியனின் விட்டம் : 13,90,000 கி.மீ.
- Ø நிறை: 1.989e30 கி.கி.
- Ø சூரியக் குடும்பத்தில் 99.80% நிறையை சூரியன் மட்டுமே கொண்டுள்ளது.
- Ø மற்றக் கிரகங்களும் துணைக்கோள்களும் 0.20% அளவே உள்ளன.
- Ø 70% ஹைட்ரஜனும், 28% ஹீலியமும் 2% மற்ற தனிமங்களும் கொண்டது.
- Ø அணு இணைவு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. பல மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு, சூரியனில் ஹட்ரஜனே இருக்காது. ஹீலியத்தை மட்டுமே கொண்டிருக்கும்.
- Ø சூரியனும் தன்னைத்தானே சுற்றிக் கொள்கிறது. (25 – 36 நாட்கள்)
- Ø சூரியனின் மையக்கருவின் தின்மம் நீரைவிட 150 மடங்கு அதிகம்.
- Ø சூரியன் 386 பில்லியன் மெகாவாட் சக்தியை உற்பத்தி செய்கிறது.
- Ø கதிரியக்கம் மற்றும் காமா கதிர்களை வெளியிடுகிறது.
- Ø இதன் காந்தப் புலம் மிகவும் சக்தி வாய்ந்தது. புளூட்டோவையும் தாண்டி செல்கிறது.
- Ø வெப்பம் மற்றும் வெளிச்சம் மட்டுமின்றி குறைந்த அடர்த்திக் கொண்ட (எலக்ட்ரான் மற்றும் புரோட்டான்களைக் கொண்ட) சூரியக் காற்றினையும் வீசுகிறது.
- Ø சூரியன் தோன்றி 4.50 பில்லியன் ஆண்டுகள் ஆகிறது. இன்னும் 5.00 பில்லியன் ஆண்டுகளுக்கு கவலையில்லை.
அடுத்து… புத்திக்காரகன் புதன்….
(நன்றி: பல்வேறு இணைய தளங்கள்)
அவன் - இவன்
|
|
அவன் :
|
கொர்……….கொர்…………….கொர்………….
|
இவன்
:
|
எழுந்திரு அவனே எழுந்திரு…. வகுப்பு முடிஞ்சிடுச்சு…
|
No comments:
Post a Comment