![]() |
பெரியது என்பதால் பெரிய வியாழன் |
வண்ணக் குழம்புகளை வாரிக் கொட்டி, உருட்டி, திரட்டி, ஒரு கோளமாக வானில்
எரிந்தால், எப்படித் தோன்றுமோ அப்படி வானில் மிதப்பதுதான் மிகப்பெரிய, மதிப்பு மிக்க,
சூரியக் குடுபத்தின் ஐந்தாவது கோள், வியாழன்.
தொலை நோக்கியின்றி இரவில் காணக்கூடியக் கோள்களில் இதுவும் ஒன்று. சூரியக் குடும்பக்
கோள்களை வரிசைப்படுத்தினால், ஐந்தாவது கோள். முதல் நான்கு கோள்களும் திடனிலைக் கோள்கள்
எனும் நிலையில் இது வாயு நிலையில் உள்ள கோள். வாயு நிலை என்ற போதிலும், பாறைகளும் மிதக்கும்.
அதாவது திட-திரவ ஹட்ரஜன் பாறைகள் அதிகம்.
வியாழனில் 90% ஹைட்ரஜனும், மீதி 10% ஹீலியம் பெருமளவிலும், மீத்தேன்,
அம்மோனியா, நீராவி, பாறைகள் எனக் கலவையும் கொண்டது. அதே நேரத்தில் வளிமண்டலம் 75% ஹட்ரஜன்
25% ஹீலியம் என சூழ்ந்துள்ளது. ஹைட்ரஜன், மீத்தேன், அம்மோனியா, கரியமிலம்,
ஈதேன், ஹைட்ரஜன் சல்பேட், நியான், ஆக்சிஜன், பாஸ்பின், கந்தகம், பென்சீன், ஹைட்ரோகார்பன்,
போன்ற பிறவாயுக்கள் கொண்டது. ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் ஆகியவற்றின் அளவு மற்றும் அழுத்தம், சூரியனின் நெபுலா
போல் உள்ளது.
சூரியக் குழம்பில் முதலில் தோன்றியது வியாழன் எனும் கருத்தும் உண்டு.
திடக் கோள்களைக் காட்டிலும் வாயுக்கோள்கள்
உயர்வேக காற்றழுத்தம் கொண்டவை என்பதில் வியாழன் முதலில் உள்ளது.
வியாழனின் நிறையைப் பொருத்தவரையில், சூரியனின் நிறையில் ஆயிரத்தில்
ஒரு பங்கும், பிறக் கோள்களைப் பொருத்தவரையில், அவைகள் அனைத்தின் நிறையில் இரண்டரை மடங்கும்
கொண்ட மிகப்பெரிய வாயுக்கோள்.
வியாழன், அது சூரியனிலிருந்து பெறும் ஆற்றலைக் காட்டிலும் அதிக ஆற்றலை
விண்ணில் கதிரியக்கம் செய்கிறது. வியாழனின் உட்கருவானது 20,000K எனும் வெப்ப நிலையில்
உள்ளது. பூமியைக் காட்டிலும், அதிக அளவிலான காந்தப் புலம் கொண்டது. அதன் வீச்சு அளவு
650 மில்லியன் கி.மீ.க்கு அப்பால் செல்லும் எனும் அளவில் உள்ளது.
சனிக் கோள் கொண்டுள்ளதுபோல், வியாழனும் (மிக மெல்லிய) வளையங்களைக் கொண்டுள்ளது.
மெல்லிய வளையம் சிறு பாறைத் துகள்களால் ஆனது. வளிமண்டலம் மற்றும் காந்தப் புலத்தில்
அவை சிக்குவதால், அந்தப் பாறைகள் வளையத்தில் நிலைத்து நிற்பதில்லை.
வியாழனுக்கு ஏகப்பட்ட சந்திரன்கள் உள்ளன. வானியலாளர்கள் அறிந்த வரையில்
67 சந்திரன்கள் வியாழனைச் சுற்றி வருகின்றன. அதில் ஒன்று, புதனைக் காட்டிலும் அளவில்
பெரியது.
வியாழன், பூமியைப்போல் அளவில் 11 மடங்கு பெரியதாக இருந்தாலும், அடர்த்தியில்
பூமியைக் காட்டிலும் மிகக் குறைவு. தன்னைத்தானே சுற்றிக்கொள்ள மிகவும் குறைவான நேரமே
எடுத்துக் கொள்கிறது. அதாவது ஒருநாள் என்பது வியாழனுக்கு 10 மணி நேரத்திற்கும் குறைவே.
வியாழனின் வெப்பம் மற்றும் அழுத்தம் அதன் உட்கருவிலிருந்து உருவாகின்றது.
உட்கருவிலிருக்கும் ஹைட்ரஜன் அதன் நிலைக்குமீறி வெப்பபடைவதால் உலோகமாவதாகவும் அது
10,000கே எனும் அளவில் வெப்பம் அடைவதாகவும் கூறப்படுகிறது.
வியாழனின் மேகங்கள் அமோனியா
படிகங்களாக உள்ளது. மேகங்கள் 50 கி.மீ. உயரம் உடையதாகவும் இரண்டு அடுக்குகள் கொண்டதாகவும்
உள்ளன. அதனால் பூமியில் ஏற்படுவதுபோல் மின்னலும் இடியும் ஏற்படுகின்றன.அவை ஏற்படுத்தும்
மின்னோட்டமானது, பூமியில் ஏற்படும் மின்னோட்டத்தைப்போல் ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்தவை.
சூரியனின் புற ஊதாக் கதிர்கள் அந்த மேகங்களில் ஊடுருவும்போது, அவை வண்ணமயமாக, ஆரஞ்சு
மற்றும் பழுப்பு நிறப் பிரிகைகளை உண்டாக்குகின்றன.
வியாழனில் காணப்படுகின்ற பெருஞ்சிவப்பு புள்ளி பூமியின் சுற்றளவிற்கு
சமம். நீள்வட்ட பெருஞ்சிவப்பு புள்ளி வியாழனின் தென் துருவப்பகுதியில் காணப்படுகிறது.
அது புள்ளி என்று சொன்னாலும், அந்தப் புள்ளி அப்படியே பூமியை உள்ளிழுத்து விழுங்கிவிடும்.
ஒரு பெரும் புயலின் சீற்றம் அது.
வியாழனின் அகன்ற காந்தப் புலமானது, பூமியின் காந்தப் புலத்தைக் காட்டிலும்
14 மடங்கு அடர்வு கொண்டது. திட-திரவ ஹட்ரஜன் குழம்பால் ஆன உட்கரு சுழல் நிலையில் உள்ள
உலோகங்களின் சுழற்சியில் உந்தப்பட்டு காந்தப்புலத்தை உண்டாக்குகிறது. காந்தப்புலம்
என்று சொல்லுவதைவிட காந்த அடுக்கினை உண்டாக்குகின்றன என்பதே உண்மை.
சில குறிப்புகள்
- சூரியக் குடும்பக் கோள்களில், மற்ற எல்லாக் கோள்களைக் காட்டிலும் மிகப்பெரியக் கோள்.
- மிகவும் வெப்பமானக் கோள்.
- சூரியனிலிருந்து 778 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
- சூரியனைச் சுற்றிவர எடுத்துக்கொள்ளும் கால அளவு 11.86 ஆண்டுகள் ஆகும். [பூமி மையக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டே ஆர்யபட்டர் 1500 ஆண்டுகளுக்கு முன்பே வியாழனின் கால அளவை 4332.2722 நாட்கள் அதாவது 11.86 ஆண்டுகள் என்று கணித்துள்ளார் – இது பற்றி பின்னர் விவாதிப்போம்]
- தனது அச்சில் 3.13 பாகை மட்டுமே சாய்வில் உள்ளதால், பருவ மாற்றங்கள் எதுவும் ஏற்படுவதில்லை.
- வியாழனுக்கும் வளையங்கள் உண்டு.
- அப்பாடா என சொல்லும்படி 67 சந்திரன்களைக் கொண்டுள்ளது.
- வியாழனின் ஈர்ப்பு சக்தி அதீதமானது. பூமியைப் போல் மூன்று மடங்கு வலிமையான ஈர்ப்பு சக்தி. அந்த சக்தி தான் பிற விண் பொருட்கள் சூரியக் குடும்பக் கோள்களைத் தாக்காமல் தன்னகத்தே இழுத்து காக்கின்றது.
- ஒன்பது மணி 55 வினாடிகளில் தன்னைத்தானே சுற்றிக் கொள்ளும். அதாவது வேகம்… வேகம்.
- மற்ற கிரகங்கள் சூரியனின் கதிரயக்கத்தை வாங்கி வெளியிடுகையில், வியாழன் தானே கதிரியக்கத்தை வெளிப்படுத்துகிறது. (சனியும் அந்தக் கணக்கில் வரும்).
- இது இரவுச் சூரியன் – வெறுங்கண்ணால் காண முடியும்.
- பூமியைக்காட்டிலும் 14 மடங்கு அதிகமான காந்தப்புலம் கொண்டது.
சில பல தன்மைகள் கொண்டிருந்தாலும்,
வியாழனால் ஒரு கோளாக மட்டுமே ஆட்சி செய்ய முடியும். விண்மீனாக மாறமுடியாது என பெரும்பாலான
வானியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
….. அடுத்து
கெடுப்பாரும் …கொடுப்பாரும்… ஈடில்லா – சனி
(நன்றி: பல்வேறு
இணைய தளங்கள்)
அவன் - இவன்
|
|
அவன் :
|
வியாழன் பெரிய
கோள் தான். அதுக்காக இவ்வளவு நாளா ?
|
இவன் :
|
நடுவில் ஒரு பதிவு பிருகத் ஜாதகா – தமிழாக்கம் வந்ததே அது தெரியாதா உனக்கு ?.
|
No comments:
Post a Comment