இதுவரையில் பொது விதிகளைப் பார்த்தோம். இனி அந்தப் பொது விதிகள் சூரியன் இருக்கும் வீடுகளில் எவ்வாறு இருக்கிறது என்பதைப் பார்ப்ப்போம்.
ஆட்சி:
கோள்களுக்கான இட ஒதுக்கீடு எனும் தலைப்பில் கோள்களுக்கான இட
ஒதுக்கீடு வானியல் அடிப்படையில் 12 இராசிகளில் எவ்வாறு அளிக்கப்பட்டிருக்கிறது என்பதை
ஏற்கனவே பதிவு செய்து விட்டோம். [அப்பதிவுகளைப் படிக்காதவர்கள் அதனை ஒரு முறை படித்துவிட்டு
தொடரவும்]. அதன்படி, சூரியனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வீடு சிம்மம் ஆகும். அதாவது
இராசி மண்டலத்தில் 121 பாகை முதல் 150 பாகைவரை உள்ள பகுதியாகும். எனவே, சூரியனின் ஆட்சி
வீடு சிம்மம் ஆகும்.
மூலத்திரிகோணம்:
மூலத் திரிகோணத்தைத் தீர்மானிக்க கீழ்வரும் தகுதிகள் இருக்க
வேண்டும்.
1. அக் கோளிற்கு
சொந்த வீடாக இருக்க வேண்டும்
2. அந்த
வீட்டில் ஏதேனும் ஒரு கோள் உச்சம் பெற்றிருக்க வேண்டும்
3. அந்த
வீட்டிற்கு முன்னும் பின்னும் உள்ள வீடுகள் அக்கோளிற்கு நட்பு அல்லது சமம் எனும் நிலையில்
இருக்க வேண்டும்.
4. அந்த
வீட்டிற்கு முன்னும் பின்னும் உள்ள வீடுகள் அக்கோளிற்கு பகை எனும் நிலையில் இருக்கக்
கூடாது
5. ஐந்து
மற்றும் ஒன்பதாவது வீடுகள் நட்பு அல்லது சமம் எனும் நிலையில் இருக்க வேண்டும்.
இதன்படி, சூரியனுக்கு சொந்த வீடு சிம்மம் மட்டுமே. ஏனைய கோள்களுக்கு இரண்டு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள
நிலையில், சூரியனுக்கும் சந்திரனுக்கும் ஒரு வீடுதான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, சிம்மத்தையே கணக்கில் கொள்ள வேண்டும். அடுத்து
இரண்டாவது தகுதியான அந்த வீட்டில் ஏதேனும் ஒரு கோள் உச்சம் பெற்றிருக்க வேண்டும் என்பது
இங்கு பொருந்தவில்லை. காரணம், ஒரு வீடு மட்டுமே உள்ள நிலையில் சூரியன் உள்ளதால் இதனை
விதிவிலக்காகக் கொள்ள வேண்டியுள்ளது. இருப்பினும் அந்த விதி விலக்கும் உச்ச வீடாக மேசம்
இருப்பதால் அதுவும் முழுமை அடையும். (ஒன்பதாவது கோண வீடு). மூன்று மற்றும் நான்காவது
தகுதியாக, அந்த வீட்டிற்கு முன்னும் பின்னும் உள்ள வீடுகள் நட்பு அல்லது சமம் எனும்
நிலையில் இருக்க வேண்டும். பகையாக இருக்கக் கூடாது. இங்கு கடகம் (சந்திரன்) மற்றும்
கன்னி (புதன்) ஆகிய இரு வீடுகளும் நட்பு எனும் நிலையில் இருக்கின்றன. பகை எனும் நிலை
இல்லை.(விரிவாக கீழே பார்ப்போம்). எனவே மூன்று மற்றும் நான்காவது தகுதி முழுமை அடைந்துள்ளது.
அடுத்து, இரண்டு மற்றும் மூன்றாவது கோணங்கள், அதாவது ஐந்தாவது மற்றும் ஒன்பதாவது வீடுகள்
நட்பு அல்லது சமம் எனும் நிலையில் இருக்க வேண்டும். சிம்மத்திற்கு ஐந்தாவது வீடானது
தனுசு ஆகும். அதுபோல், ஒன்பதாவது வீடானது மேசமாகும். தனுசு நட்பு வீடாக உள்ள நிலையில்
ஒன்பதாவது வீடான மேசத்தில் சூரியன் உச்சம் நிலையில் இருக்கிறது. உச்சம் என்பது நட்பு
எனும் நிலையைவிட மிக உயர்வானது. எனவே, சூரியனுக்கு மூலத் திரிகோண வீடு என்பது சிம்மம்
ஆகும். மூலத்திரிகோணம் என்பது எத்தனை பாகையில் இருக்கிறது எனும் கணக்கும் இருக்கிறது.
அதாவது, ஒரு வீட்டின் 30 பாகையும் மூலத்திரிகோண நிலையில் இருப்பதில்லை. பொதுவாக இருபது
பாகை வரையில் மூலத்திரிகோண நிலையில் கோள்கள் இருக்கும். சூரியனைப் பொருத்தவரையில் சிம்மத்தில்
0-பாகை முதல் 20-பாகைவரை அதாவது (120.01-140.00 பாகைவரை) மூலத்திரிகோண நிலையில் இருக்கும்.
உச்சம்:
உச்ச நிலையில் ஒரு கோள் முழு வலிமையுடன், அதாவது அக்கோள் அதிகபட்சத்
திறனோடு இருக்கும் என பார்த்தோம். பொதுவாக, சூரியனின் மிக வெப்ப நாட்கள் எனப்படுவது
கத்திரி எனப்படும் மிகைக் கோடைகாலமாகும். அதுபோலவே, சித்திரை மாதம் என்பது வெயில் மிகு
மாதம் ஆகும். இராசி மண்டலத்தில் உள்ள 12 இராசிகளில் முதல் இராசியான மேசம், சித்திரையில்
தொடங்குகிறது. அதாவது சூரியன் மேசத்தில் இருக்கும் மாதமே சித்திரை ஆகும். மேசம் தொடங்கி
ஒவ்வொரு மாதமாக, 12வது மாதம் பங்குனியானது மீனத்தில் முடிவடைகிறது. சித்திரை என்பது
வெயில் மிகு மாதமாக இருப்பதால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதாவது, சூரியனின்
முழு கதிர்வீச்சின் தன்மை அந்த மாதத்தில்தான் பூமியின்மீது தாக்குதலை ஏற்படுத்தும்.
உச்சம் என்பது மிகை எனும் நிலை என்பதால், சூரியன் மேசத்தில் இருக்கும் நிலையினையே உச்ச
நிலை என சோதிட நூல்கள் கூறுகின்றன. எனவே சூரியன் மேசத்தில் உச்சம் அடைகிறது என வரையறை
செய்யப்பட்டுள்ளது. அதே வேளையில், மேசத்தின் 30 பாகையிலும் சூரியன் உச்ச நிலையில் இருப்பதில்லை. குறிப்பாக 10வது பாகையில் மிக உச்ச நிலையில் இருக்கிறது.
அதாவது 0-பாகை முதல் 10-வது பாகை வரையில் உச்ச நிலையில் இருக்கிறது. அதாவது சித்திரையின்
முதல் 10 நாட்கள் உச்ச நிலையில் இருக்கிறது. இதனை வேறொரு கோணத்தில் ஆராய்ந்தால் இது
முரணான தகவலாக இருக்கிறது. அதாவது ‘கத்திரி’ எனப்படும் ‘அக்னி வெயில்’ காலம்தான் வெயிலின்
கதிர்வீச்சு அதிகம் உள்ள காலம். மேச இராசியானது, அசுவினி(4), பரணி(4), கார்த்திகை(1)
ஆகிய நட்சத்திரங்களைக் கொண்டிருக்கிறது. அக்னி
வெயிலானது பரணியின் 3-வது பாகத்தில் தொடங்கி கார்த்திகை முழுதும் நீடிக்கும். நட்சத்திர
அதிபதிகளின்படி, பரணி-சுக்கிரன், கார்த்திகை-சூரியன் ஆகும். கார்த்திகையானது முதல்
பாகம் மேசத்திலும், மற்ற மூன்று பாகங்கள் ரிசபத்தில் இருக்கும். எனவே அக்னி ஆரம்பிக்கும்
பரணி 3வது பாகத்தின் தொடக்கமான 20-பாகையில் தொடங்கி, கார்த்திகை முழுதும் சூரியன் உச்சமாக
இருப்பதுதான் முறை. ஆனால் மேசத்தின் 10வது பாகையிலேயே சூரியன் முழு உச்சம் அடைந்து
விடுகிறது. இது தவறு போன்று தோன்றினாலும், நான் முன்பொருமுறை பதிவு செய்ததை நினைவில்
கொள்ள வேண்டுகிறேன். சூரியனின் தாக்கம் என்பது, நேரடித் தாக்கம் என்பதைக் காட்டிலும்
அதன் கதிர்வீச்சின் தாக்கம் (radiation) முக்கியமானது என்றும், கதிர்வீச்சின் தாக்கத்தினைக்
கொண்டுதான், வெயில் மின் தகடுவழி மின்சாரம் (solar radiation panel electricity) தயாரிக்கப்படுகிறது
என்றும் பதிவு செய்துள்ளேன். எனவே, நேரடியான சூரிய வெப்பத்தைக் காட்டிலும் கதிர்வீச்சு
அதிகமுள்ள காலத்தையே கணக்கில் கொள்ள வேண்டும். அதன்படி, சித்திரையின் முதல் 10 நாட்கள்
சூரியனின் கதிர்வீச்சு அதிகமாக இருக்கலாம். எனவே அந்த கால அளவினையே உச்சம் என்று தீர்மானித்திருக்க
வேண்டும். எனவே, சூரியன் மேசத்தில் 0-10 பாகை வரையில் மிகை உச்சத்திலும், மேசம் முழுமையும்
உச்சத்திலும் இருப்பதாகக் கொள்ளலாம்.
நீச்சம்:
நீச்சம் என்பது, தனது முழு வலிமையைச் செலுத்த முடியாத நிலையில்
இருப்பது. அதாவது மிகை உச்சத்தில் இருக்கும் கோள், அதற்கு நேர் எதிரான, 180 பாகையில்
வலிமை இழந்து இருக்கும். அதன்படி, உச்ச நிலைக்கு நேர் எதிரான துலாம் வீடானது, சூரியனுக்கு
நீச்ச வீடாக இருக்கும். பாகை அளவு என்பது, உச்ச நிலைக் கணக்கின்படியே, 0-முதல் 10-பாகை
வரையில் இருக்கும்.
நட்பு,
சமம், பகை:
ஒரு கோள் எந்த இராசியில் நட்பாகவும், சமமாகவும், பகையாகவும்
இருக்கிறது என்பதைத் தீர்மானிக்க, முன்பே கூறியவாறு, அக்கோளிற்கு மூலத் திரிகோண வீட்டிலிருந்து,
2, 4, 5, 8, 9, 12 ஆகிய வீடுகளில் நட்பாகவும், பிற வீடுகளில் பகையாகவும் இருக்கும்
என்பதைக் கணக்கில் கொள்ள வேண்டும். இங்கு, சூரியன், சிம்மத்தில் மூலத் திரிகோணம் அடைவதால்,
2-கன்னி(புதன்), 4-விருச்சிகம்(செவ்வாய்), 5-தனுசு(வியாழன்), 8-மீனம்(வியாழன்), 9-மேசம்(செவ்வாய்),
12-கடகம்(சந்திரன்) ஆகிய வீடுகளில் நட்பு நிலையில் இருக்க வேண்டும். இதில் 9-மேசம்
உச்ச நிலையில் இருப்பதால் அதனை நீக்கிவிட்டால், மற்றவை நட்பு எனக் கொள்ள வேண்டும்.
பகை நிலை எனும்போது 3-துலாம்(வெள்ளி), 6-மகரம்(சனி), 7-கும்பம்(சனி), 10-ரிசபம்(வெள்ளி),
11-மிதுனம்(புதன்) ஆகியவை பகை நிலையில் இருக்கும். இரண்டிற்கு உரிய கன்னி(புதன்) நட்பு
எனும் நிலையில் இருப்பதால், 11-மிதுனம்(புதன்) என்பதை பகையாகக் கொள்ள முடியாது. எனவே
அதனை சமம் எனக் கொள்ளவது முறை. அதேபோல், 3-துலாம்(வெள்ளி) என்பது சூரியனுக்கு நீச்ச
நிலை என்பதால், அதனையும் பகையிலிருந்து விலக்கு செய்யலாம். ஆக, சூரியனுக்கு – நட்பு வீடுகள்: கன்னி, விருச்சிகம்,
தனுசு, மீனம், கடகம்; சமம் வீடு: மிதுனம்; பகைவீடுகள்: மகரம், கும்பம், ரிசபம் ஆகும்.
நட்பு, பகை பற்றி பல்வேறு நூல்கள் சிற்சில மாற்றங்களைக் கொண்டிருந்தாலும், இதுவே பொதுவில்
ஏற்றுக் கொள்ளப்படத்தக்க முறையாகும்.
இங்கு வரயறை செய்த வகையில் இராசிகளில் சூரியனின் வலிமை அல்லது
நிலை
கோள்களின் நிலை அல்லது வலிமை பற்றி கூறும்போது, கோள்களுக்கிடையே
உள்ள உறவு நிலைகள் பற்றியும் கூற வேண்டியுள்ளது.
கோள்களுக்கிடையேயான உறவுகள்:
கோள்களுக்கான உறவுகள் பற்றியும் பல்வேறு நூல்கள் சிற்சில முரணைக்
கொண்டிருந்தாலும், வீடுகளின் நட்பு, பகை அடிப்படையிலேயே கோள்களின் நிலையைத் தீர்மானித்தல்
முறையாக உள்ளது. அதன்படி, உச்சம் மற்றும் நட்பு வீட்டில் உள்ள கோள்கள், நட்புக் கோள்கள்
எனவும், நட்பு+சமம் எனும் வீட்டில் உள்ள கோள்கள் சமம் எனவும், பகை வீட்டில் உள்ள கோள்கள்
பகை எனவும் கொள்வது முறையாக உள்ளது. அதன்படி, சூரியனுக்கு - சந்திரன், செவ்வாய், வியாழன்
ஆகியவை – நட்புக்கோள்கள்; சுக்கிரன், சனி ஆகியவை – பகைக் கோள்கள்; புதன்-சமம் எனும்
நிலையில் உள்ளன.
மேல் கூறியவற்றின் அடிப்படையில் சூரியனின் வலிமை அல்லது நிலை
பற்றிய தொகுப்பினைக் கீழே காண்போம்.
மேசம்
|
உச்சம்
(0-10)
|
துலாம்
|
நீச்சம்
(0-10)
|
ரிசபம்
|
பகை
|
விருச்சிகம்
|
நட்பு
|
மிதுனம்
|
சமம்
|
தனுசு
|
நட்பு
|
கடகம்
|
நட்பு
|
மகரம்
|
பகை
|
சிம்மம்
|
ஆட்சி
– மூலத்திரிகோணம் (0-20)
|
கும்பம்
|
பகை
|
கன்னி
|
நட்பு
|
மீனம்
|
நட்பு
|
கோள்களுடன் உறவு நிலை
நட்பு
|
சமம்
|
பகை
|
சந்திரன்
செவ்வாய்
வியாழன்
|
புதன்
|
சனி
சுக்கிரன்
|
அடுத்து
.. சந்திரனின் நிலை
No comments:
Post a Comment