வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
அறிமுகம்…(தொடர்ச்சி)
இரண்டாம் நிலையின்படி – ஒரு மனிதனின் தலையெழுத்தின்படி
அவனது எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது என்றால், நம்மால் எவ்வாறு அவனது தனித்துவம்
பாதிக்கப்படுவதையும், சில நேரங்களில் அவன் அனுபவிக்கும் பலன்களையும் கணக்கிட முடிகிறது,
அதாவது முன்னவன் எந்தவித பலன்களையும் அனுபவிக்க முடியாதபோது, பின்னவன் தண்டனைகளிலிருந்து
தப்பிக்க முடிகிறது. ஏற்றுக் கொள்ளக் கூடிய விளக்கம் யாதெனில், முன்னவர் முந்தைய கர்மாவின்
விளைவினையும் பின்னவர் விதிப்பயனாக தமது அடுத்த பிறவியில் அதற்குறிய நன்மையையும் தீமையையும்
அனுபவிப்பார். ஒரு மனிதனின் முழு வாழ்க்கையையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், நமது
சொந்தக் கருத்தின்படி – மனிதனானவன் முந்தைய விதியின் விளைவாக அனுபவித்தலும், தன்னுடைய
புதிய செயலின் காரணமாக அதன் பலன்களையும் – அதாவது எந்த விதத்திலும் முந்தைய கர்மாவிற்கு,
தடைகள், செயலற்றதாக்குதல், மாற்றுதல் ஆகியவற்றை ஏற்படுத்தாவண்ணம், அனுபவிக்கின்றான்.
அதே நேரத்தில், தற்போதைய செயல்பாட்டினை நோக்கி செல்லும்போது, அவனால் எளிதாகவும் தடையின்றியும்
செல்ல முடிகிறது. இது மூன்று காரணிகளால் ஏற்படுகிறது.. (1) எவ்வளவு திட்டமிட்டு நல்லவிதமாக
செயல்பட்டாலும் தொடர்ந்து ஏற்படும் தோல்விகள் (2) அதிக முயற்சி இல்லாமல் எளிதில் கிடைக்கக்
கூடிய வெற்றிகள் (3) உழைப்பின் பலனிற்கு ஏற்ப கிடைக்கும் வெற்றிகள். முதல் நிலையினைப்
பொருத்தவரையில் அவனது முயற்சியானது தற்போதைய விதியின் போக்கிற்கு எதிராகச் செயல்படுகிறது;
மற்றொன்று தற்போதைய போக்கிற்கு உட்பட்டு செயல்படுகிறது; மூன்றாவது தண்ணீரின் மீது செல்வது
போன்றது, அதாவது எங்கெங்கெல்லாம் மனிதனின் செயல்பாடு செல்லுபடியாகின்றதோ அங்கெல்லாம்
செல்வது.
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505 - 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014
|
[ நிமித்திகன் வலைப்பூ தொடங்கி ஓராண்டு நிறைவு .. ஆதரவிற்கு நன்றி]
No comments:
Post a Comment