தெற்கு
வடக்குக் கிழக்குமேற் குச்சியில்
அற்புத மானதோர் அஞ்சு
முகத்திலும்
ஒப்பில்பே ரின்பத் துபய உபயத்துள்
தற்பரன் நின்று தனிநடஞ்ச்
செய்யுமே
-திருமூலர்
![]() |
பண்டையக் கால சோதிடக் குறிப்புகள் |
தமிழ்க் காப்பியங்களில் தலையாயது சிலப்பதிகாரம்.
ஏன் எனில் மற்ற காப்பியங்கள் எல்லாம், ஒன்று வடமொழி இலக்கியங்களை மறுவடிவு செய்தவை
அல்லது கடவுள்களையும் அரசர்களையும் காப்பியத் தலைவர்களாகக் கொண்டு எழுதப்பட்டவை. ஆனால் முற்றிலும் ஒரு புதியக்
களத்தில் ஒரு எளிய வணிகனின் வாழ்வியலை, எளிய நடையில், அரசியல் பிழை, கற்புடை பெண்டிர்
வாழ்வு, ஊழ்வினை ஆகிய மூன்று கருத்துக்களை மையப்படுத்தி எழுதப்பட்டது சிலப்பதிகாரம்.
இதற்கும் சோதிடத்திற்கும் என்ன தொடர்பு? சேர
மன்னனின் இரு புதல்வர்களில், இளையோனைக் கண்ட ஒரு நிமித்திகன், இவன் மன்னன் ஆவான் என்று
நிமித்திகம் (சோதிடம் என்பதன் தூய தமிழ்ச் சொல்) சொல்ல, மூத்தவனின் முகம் போன போக்கைக்
காண முடியாமல், இளையவன் வெகுண்டெழுந்து, ‘நிமித்திகனின் வாக்கைப் பொய்யாக்குவேன்’ என
சபதமிட்டு, உடன் சமன முனிவர்களின் உடையனிந்து, துறவியானன். நிமித்திகன் அல்லது சோதிடனின்
வாக்கை முதல் அடியிலேயே துவைத்து எடுத்துவன் பெயர்தான் இளங்கோ என்பது நம் அனைவருக்கும்
தெரியும்.
இதில் சோதிடம் பொய்த்துப் போனது ஏன் என்பதைவிட,
அன்றைய வாழ்வியலோடு சோதிடம் என்பது பின்னிப் பினைந்திருந்தது அறியவருகிறது. அதனினும்
குறிப்பிடத்தக்கக் குறிப்பு என்னவெனில், இளங்கோ அடிகள் சமன மதத்தைச் சார்ந்தவர். எனவே
மத வேறுபாடின்றி, அனைத்து மதத்தினரின் வாழ்வோடும் சோதிடம் இரண்டறக்கலந்து இருந்திருக்கிறது.
சோதிடத்தின் வரலாறு என்பது புவியியல் சார்ந்தும்,
அதாவது விரிந்து பரந்து இந்த புவனம் முழுதும் பதியப்பட்டிருக்கிறது. மத வேறுபாடுகளையும்
கடந்து சோதிடம் பயன்பாட்டில் இருந்துவந்துள்ளது.
மிகச் சுருக்கமாக சிலவற்றைப் பதிவிடுகிறேன். தேவை ஏற்படும்போது, அதன் விரிவினைப் பின்னர் காண்போம்.

















ஆக
சோதிடம் என்பது காலந்தொட்டே இருந்து வந்துள்ளது. அதன் நம்பகத்தன்மை மட்டுமே, காலந்தோறும்
விமர்சனத்திற்கு உள்ளாகி வந்துள்ளது.
No comments:
Post a Comment