Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Sunday, July 23, 2017

மனைவிக்கு ஏற்படும் இழப்பு - பிருகத் ஜாதகா – 170


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்


பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  இருபத்து மூன்று

தீமை தரும் யோகங்கள்.. தொடர்ச்சி


2.         ஒருவர் பிறக்கும் நேரத்தில், மூன்று அசுபக்கோள்கள்(1) சுக்கிரனிலிருந்து 4வது மற்றும் 8வது வீட்டில் இருந்தால், அல்லது இரண்டு அசுபக் கோள்கள் சுக்கிரனுக்கு இருபுறமும் இருந்தால்(2), அல்லது சுக்கிரனுடன் சுபக் கோள்கள் இல்லாமல் அல்லது சுபக்கோள்களின் பார்வை படாமல் இருந்தால், அந்த மனிதரின் மனைவி, தீயினால் அல்லது கீழே விழுந்து அல்லது கயிறால் இறக்க நேரிடும்.


குறிப்பு:
(1)    சூரியன், செவ்வாய் மற்றும் சனி

(2)    ஒரே வீட்டில் சுக்கிரனுடன் அல்லது முன்னும் பின்னுமாக அடுத்த வீட்டில்.

இருப்பினும், முதல் யோகத்தின்படி, அதே வேளையில் சுக்கிரன் அக்னி திரேக்காணத்தில், இரண்டாவது யோகத்தின்படி நிபாத திரேக்காணத்தில், மூன்றாவது யோகத்தின்படி பாச திரேக்காணத்தில் இருக்க வேண்டும் – [பகுதி-27 திரேக்காண பலன்கள்].


3.         ஒருவர் பிறக்கும் நேரத்தில் இலக்கினத்திலிருந்து 12வது அல்லது 6வது ஆகிய இருவீடுகளில் ஒன்றில் சூரியனும் மற்றொன்றில் சந்திரனும் இருந்தால், அந்த மனிதர் மற்றும் அவர்தம் மனைவி ஆகிய இருவரும் ஒற்றைக் கண் உடையவர்களாக இருப்பர். மேலும், சுக்கிரன் மற்றும் சூரியன்(1) ஆகியவை, இலக்கினத்திலிருந்து 7வது, 9வது, 5வது ஆகிய மூன்று வீடுகளில் ஏதேனும் ஒன்றில் இருந்தால், அந்த மனிதரின் மனைவி உடல் குறைபாட்டுடன் இருப்பார்.


குறிப்பு:
(1)    சுக்கிரன் அல்லது சூரியன்வேறு சிலரின் கருத்துப்படி. இது காரகரின் கருத்திற்கு ஏற்புடையது அல்ல என்று உரையாசிரியர் கூறுகிறார்.


தீமை தரும் யோகங்கள்.. தொடரும்


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17



Friday, July 21, 2017

5, 7 வீடுகளில் தீமை தரும் பலன்கள் -பிருகத் ஜாதகா – 169



வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்

பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  இருபத்து மூன்று

தீமை தரும் யோகங்கள்

1. ஒருவர் பிறக்கும்போது, இலக்கினத்திலிருந்து அல்லது சந்திரனிலிருந்து 5வது, 7வது வீடுகளில் சுபக் கோள்கள் அல்லது அதன் அதிபதிகள் இருந்தாலோ அல்லது பார்த்தாலோ அந்த மனிதருக்கு, குழந்தைகள்(1), மனைவி அமையப் பெறுவர், இல்லையெனில்(2) மேற்கூறியவற்றில் ஒன்று அல்லது மற்றொன்று இல்லாமல் போகும். கன்னியானது உதய இலக்கினமாக இருந்து, அதில் சூரியன் இருந்தால், அத்துடன் சனியானது மீனத்தில் இருந்தால் அவர் தமது மனைவியை இழப்பார், அல்லது செவ்வாய் மகரத்தில் இருந்தால் குழந்தைகளை இழப்பார்.

குறிப்பு:

(1)  12 வகையான குழந்தைகளில் ஒன்று, (1) ஒரசா (2) க்ஷேத்ரஜா, (3) தத்தா, (4) க்ரிட்ரிமா, (5) ஆத்மப்ரபவா, (6) குதோத்பன்னா, (7) அபவித்தி (8)புணர்பவா (9)காணீனா (10) சகோதா, (11) க்ரீடா, (12) தாசிப்ரபவா.

(2)  அதாவது இலக்கினத்திலிருந்து அல்லது சந்திரனிலிருந்து 5வது, 7வது வீடுகளில் சுபக் கோள்கள் அல்லது அதன் அதிபதிகள் இல்லாமல் இருந்தாலோ அல்லது பார்க்கபடாமல் இருந்தாலோ.

7வது வீட்டில் சனியும் சந்திரனும் இருந்தால், அந்த மனிதரின் மனைவி அவரை விட்டு விலகி வேறு ஒருவரை திருமணம் செய்து வாழ்வார்.

7வது வீடானது சனியாலும் சந்திரானாலும் பார்க்கப்பட்டால், ஒருவருக்கு அமையும் மனைவியின் எண்ணிக்கையானது, நவாம்சத்தில் 7வது வீட்டின் அதிபதி இருக்கும் வீட்டினை, நவாம்ச மேசத்திலிருந்து எண்ணிவர வரும் எண்ணிக்கையாகும்.

வியாழன் அல்லது சந்திரன் அல்லது சுக்கிரன் 7வது வீட்டில் இருப்பதுடன், சூரியன் அல்லது செவ்வாயின் நவாம்சத்தில் இருந்தால், அந்த மனிதருக்கு ஒரே மனைவி அமையும்; ஆனால் 7வது வீடானது சந்திரன் மற்றும் சுக்கிரனால் பார்க்கப்பட்டால், அந்த மனிதருக்கு நிறைய மனைவிகள் அமையக்கூடும்.

தீமை தரும் யோகங்கள்.. தொடரும்


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17





Tuesday, July 18, 2017

தசாக்கால பலன்கள் - பிருகத் ஜாதகா – 168


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்




பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  இருபத்து இரண்டு

பல்வேறு யோகங்கள்.. தொடர்ச்சி


5.         ஒருவர் பிறக்கும் நேரத்தில், வியாழன் அல்லது சந்திரன் இருக்கும் இராசியின் அதிபதியோ அல்லது இலக்கினாதிபதியோ ஒரு கேந்திரத்தில் இருந்தால், அந்த மனிதர் தமது வாலிபப் பருவத்தில் மகிழ்ச்சியாக இருப்பார். மேலும், தசாக் காலத்தின் தொடக்கத்தில், அத்தகைய தசாக்காலத்தின் அதிபதி, பிருஷ்டோதய இராசியில் இருந்தால் அவர் மகிழ்ச்சியாக இருப்பதுடன், அந்த அதிபதி அதன் பலன்களை(1) தசையின் கடைசியில் வழங்குவார். அந்த அதிபதி சிரோதய இராசியில் இருந்தால், தனது பலன்களை அந்த தசையின் தொடக்கத்தில் வழங்குவார். மேலும் அது சிர-பிருஷ்டோயத இராசியில் இருந்தால்,  பலனானது தசையில் நடுவில் கிடைக்கும்.


குறிப்பு: (1) நல்ல அல்லது தீய பலன்கள்.
தசா காலம் மூன்று சம பாகங்களாகப் பிரிக்கப்படும்; சிரோதயா, பிருஷ்டோதயா, சிர-பிருஷ்டோதயா வீடுகள் பற்றி, பகுதி-1, பத்தி-10ல் விளக்கப்பட்டுள்ளது.



6.         சூரியனும் செவ்வாயும் அதன் பலன்களை(1) ஒரு வீட்டில் நுழைந்தவுடன் வழங்குவர்; வியாழனும் சுக்கிரனும் ஒரு வீட்டின் நடுப்பகுதியில் வரும்போது வழங்குவர்; சனியும் சந்திரன் அந்த வீட்டினை விட்டு வெளிவருவதற்கு முன்பு வழங்குவர்; புதன் அந்த இராசியில் இருக்கும்வரையில் வழங்கும்.



குறிப்பு: (1) நல்ல மற்றும் தீய பலன்கள் ஆகிய இரண்டும்.
இராசியானது 10பாகை எனும் அளவில் மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட வேண்டும்.



குறிப்பு: (நிமித்திகன்)இங்கே கூறப்பட்டுள்ள தசாக் கால அளவீடு என்பது தற்போது நடைமுறையில் உள்ள விம்சோத்திரி தசா முறையிலிருந்து மாறுபட்டது. வராக மிகிரரின் தசா முறை என்பது வேறு.

பகுதி-22 முற்றும்

அடுத்துபகுதி-23 – தீமை தரும் யோகங்கள்


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17