வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி - இருபத்து இரண்டு
பல்வேறு யோகங்கள்.. தொடர்ச்சி
5. ஒருவர் பிறக்கும் நேரத்தில், வியாழன் அல்லது சந்திரன் இருக்கும் இராசியின் அதிபதியோ அல்லது இலக்கினாதிபதியோ ஒரு கேந்திரத்தில் இருந்தால், அந்த மனிதர் தமது வாலிபப் பருவத்தில் மகிழ்ச்சியாக இருப்பார். மேலும், தசாக் காலத்தின் தொடக்கத்தில், அத்தகைய தசாக்காலத்தின் அதிபதி, பிருஷ்டோதய இராசியில் இருந்தால் அவர் மகிழ்ச்சியாக இருப்பதுடன், அந்த அதிபதி அதன் பலன்களை(1) தசையின் கடைசியில் வழங்குவார். அந்த அதிபதி சிரோதய இராசியில் இருந்தால், தனது பலன்களை அந்த தசையின் தொடக்கத்தில் வழங்குவார். மேலும் அது சிர-பிருஷ்டோயத இராசியில் இருந்தால், பலனானது தசையில் நடுவில் கிடைக்கும்.
குறிப்பு: (1) நல்ல அல்லது தீய பலன்கள்.
தசா காலம் மூன்று சம பாகங்களாகப் பிரிக்கப்படும்; சிரோதயா, பிருஷ்டோதயா, சிர-பிருஷ்டோதயா வீடுகள் பற்றி, பகுதி-1, பத்தி-10ல் விளக்கப்பட்டுள்ளது.
6. சூரியனும் செவ்வாயும் அதன் பலன்களை(1) ஒரு வீட்டில் நுழைந்தவுடன் வழங்குவர்; வியாழனும் சுக்கிரனும் ஒரு வீட்டின் நடுப்பகுதியில் வரும்போது வழங்குவர்; சனியும் சந்திரன் அந்த வீட்டினை விட்டு வெளிவருவதற்கு முன்பு வழங்குவர்; புதன் அந்த இராசியில் இருக்கும்வரையில் வழங்கும்.
குறிப்பு: (1) நல்ல மற்றும் தீய பலன்கள் ஆகிய இரண்டும்.
இராசியானது 10பாகை எனும் அளவில் மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட வேண்டும்.
குறிப்பு: (நிமித்திகன்) – இங்கே கூறப்பட்டுள்ள தசாக் கால அளவீடு என்பது தற்போது நடைமுறையில் உள்ள விம்சோத்திரி தசா முறையிலிருந்து மாறுபட்டது. வராக மிகிரரின் தசா முறை என்பது வேறு.
பகுதி-22 முற்றும்
அடுத்து – பகுதி-23 – தீமை தரும் யோகங்கள்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment