வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி - இருபத்து மூன்று
தீமை தரும் யோகங்கள்
1. ஒருவர்
பிறக்கும்போது, இலக்கினத்திலிருந்து அல்லது சந்திரனிலிருந்து 5வது, 7வது வீடுகளில்
சுபக் கோள்கள் அல்லது அதன் அதிபதிகள் இருந்தாலோ அல்லது பார்த்தாலோ அந்த மனிதருக்கு,
குழந்தைகள்(1), மனைவி அமையப் பெறுவர், இல்லையெனில்(2) மேற்கூறியவற்றில் ஒன்று அல்லது
மற்றொன்று இல்லாமல் போகும். கன்னியானது உதய இலக்கினமாக இருந்து, அதில் சூரியன் இருந்தால்,
அத்துடன் சனியானது மீனத்தில் இருந்தால் அவர் தமது மனைவியை இழப்பார், அல்லது
செவ்வாய் மகரத்தில் இருந்தால் குழந்தைகளை இழப்பார்.
குறிப்பு:
(1) 12 வகையான
குழந்தைகளில் ஒன்று, (1) ஒரசா (2) க்ஷேத்ரஜா, (3) தத்தா, (4) க்ரிட்ரிமா, (5) ஆத்மப்ரபவா,
(6) குதோத்பன்னா, (7) அபவித்தி (8)புணர்பவா (9)காணீனா (10) சகோதா, (11) க்ரீடா,
(12) தாசிப்ரபவா.
(2) அதாவது
இலக்கினத்திலிருந்து அல்லது சந்திரனிலிருந்து 5வது, 7வது வீடுகளில் சுபக் கோள்கள் அல்லது
அதன் அதிபதிகள் இல்லாமல் இருந்தாலோ அல்லது பார்க்கபடாமல் இருந்தாலோ.
7வது
வீட்டில் சனியும் சந்திரனும் இருந்தால், அந்த மனிதரின் மனைவி அவரை விட்டு விலகி வேறு
ஒருவரை திருமணம் செய்து வாழ்வார்.
7வது
வீடானது சனியாலும் சந்திரானாலும் பார்க்கப்பட்டால், ஒருவருக்கு அமையும் மனைவியின் எண்ணிக்கையானது,
நவாம்சத்தில் 7வது வீட்டின் அதிபதி இருக்கும் வீட்டினை, நவாம்ச மேசத்திலிருந்து எண்ணிவர
வரும் எண்ணிக்கையாகும்.
வியாழன்
அல்லது சந்திரன் அல்லது சுக்கிரன் 7வது வீட்டில் இருப்பதுடன், சூரியன் அல்லது செவ்வாயின்
நவாம்சத்தில் இருந்தால், அந்த மனிதருக்கு ஒரே மனைவி அமையும்; ஆனால் 7வது வீடானது சந்திரன்
மற்றும் சுக்கிரனால் பார்க்கப்பட்டால், அந்த மனிதருக்கு நிறைய மனைவிகள் அமையக்கூடும்.
தீமை தரும் யோகங்கள்.. தொடரும்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment