வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி - இருபத்து மூன்று
தீமை தரும் யோகங்கள்.. தொடர்ச்சி
2. ஒருவர் பிறக்கும் நேரத்தில், மூன்று அசுபக்கோள்கள்(1) சுக்கிரனிலிருந்து 4வது மற்றும் 8வது வீட்டில் இருந்தால், அல்லது இரண்டு அசுபக் கோள்கள் சுக்கிரனுக்கு இருபுறமும் இருந்தால்(2), அல்லது சுக்கிரனுடன் சுபக் கோள்கள் இல்லாமல் அல்லது சுபக்கோள்களின் பார்வை படாமல் இருந்தால், அந்த மனிதரின் மனைவி, தீயினால் அல்லது கீழே விழுந்து அல்லது கயிறால் இறக்க நேரிடும்.
குறிப்பு:
(1)
சூரியன், செவ்வாய் மற்றும் சனி
(2)
ஒரே வீட்டில் சுக்கிரனுடன் அல்லது முன்னும் பின்னுமாக அடுத்த வீட்டில்.
இருப்பினும், முதல் யோகத்தின்படி, அதே வேளையில் சுக்கிரன் அக்னி திரேக்காணத்தில், இரண்டாவது யோகத்தின்படி நிபாத திரேக்காணத்தில், மூன்றாவது யோகத்தின்படி பாச திரேக்காணத்தில் இருக்க வேண்டும் – [பகுதி-27 திரேக்காண பலன்கள்].
3. ஒருவர் பிறக்கும் நேரத்தில் இலக்கினத்திலிருந்து 12வது அல்லது 6வது ஆகிய இருவீடுகளில் ஒன்றில் சூரியனும் மற்றொன்றில் சந்திரனும் இருந்தால், அந்த மனிதர் மற்றும் அவர்தம் மனைவி ஆகிய இருவரும் ஒற்றைக் கண் உடையவர்களாக இருப்பர். மேலும், சுக்கிரன் மற்றும் சூரியன்(1) ஆகியவை, இலக்கினத்திலிருந்து 7வது, 9வது, 5வது ஆகிய மூன்று வீடுகளில் ஏதேனும் ஒன்றில் இருந்தால், அந்த மனிதரின் மனைவி உடல் குறைபாட்டுடன் இருப்பார்.
குறிப்பு:
(1)
சுக்கிரன் அல்லது சூரியன் – வேறு சிலரின் கருத்துப்படி. இது காரகரின் கருத்திற்கு ஏற்புடையது அல்ல என்று உரையாசிரியர் கூறுகிறார்.
தீமை தரும் யோகங்கள்.. தொடரும்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment