Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Friday, June 30, 2017

சந்திரனின் 7-12 பாவக பலன்கள் - பிருகத் ஜாதகா – 155

வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்


பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  இருபது

பாவங்களில் கோள்களின் பலன்கள்.. தொடர்ச்சி


5.         பிறக்கும்போது, இலக்கினத்திலிருந்து 7வது வீட்டில் சந்திரன் இருந்தால், அந்த மனிதர் பிறரின் நலனைப் பார்த்து பொறாமைப் படுபவராகவும், காமம் மிக்கவராகவும் இருப்பார். அது 8வது வீட்டில் இருந்தால், அந்த மனிதர் நிலையற்ற மனம் கொண்டவராகவும், நோய்களால் பாதிக்கப்படுபவராகவும் இருப்பார். அது 9வது வீட்டில் இருந்தால், அவர் எல்லோராலும் விரும்பப்படுபவராகவும், குழந்தைகள், நண்பர்கள், உறவினர்கள், சொத்துக்கள் கொண்டவராகவும் இருப்பார். அது 10வது வீட்டில் இருந்தால், எல்லா இடங்களிலும் வெற்றிபெறுபவராகவும், நல்லொழுக்கம் மிக்கவராகவும், சொத்துக்கள் உடையவராகவும், புத்திகூர்மையாளராகவும், வீரமிக்கவராகவும் இருப்பார். அது 11வது வீட்டில் இருந்தால், அவர் புகழ்மிக்கவராகவும், சொத்துக்கள் போன்றவைகளை அடைபவராகவும் இருப்பார். அது இலக்கினத்திலிருந்து12வது வீட்டில் இருந்தால் அந்த மனிதர் தீயவராகவும் உடலுறுப்பு குறைபாடு உடையவராகவும் இருப்பார்.


6.         ஒருவர் பிறக்கும்போது செவ்வாயானது இலக்கினத்தில் இருந்தால், அந்த மனிதரின் உடலில் தழும்புகள் ஏற்படும்; அது 2வது வீட்டில் இருந்தால், அவர் குறைவான உணவினை உட்கொள்வார்; அது 9வது வீட்டில் இருந்தால் அவர் பாவியாக இருப்பார்; அது பிற வீடுகளில் இருந்தால்(1) சூரியன் அந்த வீடுகளில் இருந்தால் கொடுக்கும் பலனையே அது கொடுக்கும்.


            மேலும், ஒருவர் பிறக்கும்போது, புதன் இலக்கினத்தில் இருந்தால், அவர் கற்றறிந்தவராக இருப்பார். அது 2வது வீட்டில் இருந்தால், அவர் வளமுடன் இருப்பார். அது 3வது வீட்டில் இருந்தால், அவர் மிகவும் கொடியவராக இருப்பார். அது 4வது வீட்டில் இருந்தால், அவர் கற்றறிந்தவராக இருப்பார். அது 5வது வீட்டில் இருந்தால், அவர் அரசரின் கீழ் அமைச்சராக இருப்பார்; அது 6வது வீட்டில் இருந்தால், அவருக்கு எதிரிகள் இருக்க மாட்டார்கள். அது 7வது வீட்டில் இருந்தால் அவர் சட்டம் படித்தவராக இருப்பார். அது 8வது வீட்டில் இருந்தால் அவரது திறமையால் புகழ்பெறுவார். அது 9வது, 10வது, 11வது, 12வது  வீட்டில் இருந்தால், அத்தகைய வீட்டில் சூரியன் இருந்தால் கொடுக்கும் பலனையே இதுவும் கொடுக்கும்.


குறிப்பு:(1): அதாவது, 3வது, 4வது, 5வது, 6வது, 7வது, 8வது, 10வது, 11வது, 12வது வீடுகள்.

பாவங்களில் கோள்கள்.. தொடரும்


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17


Thursday, June 29, 2017

சூரியனின் 7-12 பாவக பலன்கள் - பிருகத் ஜாதகா – 154

வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்



பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  இருபது


பாவங்களில் கோள்களின் பலன்கள்.. தொடர்ச்சி


3.         ஒருவர் பிறக்கும் நேரத்தில், இலக்கினத்திலிருந்து 7வது வீட்டில் சூரியன் இருந்தால், அந்த மனிதர் பெண்களால் அவமானப் படுத்தப்படுவார்; அது 8வது வீட்டில் இருந்தால், அவர் குறைவான குழந்தைகள் கொண்டிருப்பதுடன், பார்வை இழப்பினையும் சந்திப்பார்; அது 9வது வீட்டில் இருந்தால், அந்த மனிதருக்கு குழந்தைகளும், சொத்துக்களும், வசதியுடனும் வாழ்வாவ்(1); அது 10வது வீட்டில் இருந்தால், வசதியான வாழ்க்கையுடனும், அதிகாரமிக்கவராகவும் இருப்பார்; அது 11வது வீட்டில் இருந்தால், அந்த மனிதர் பெரும் செல்வந்தராக இருப்பார்; அது 12வது வீட்டில் இருந்தால் அவர் நம்பிக்கை துரோகம் செய்பவராகவும் இருப்பார்.


குறிப்பு: வேறொருவரின் கருத்துப்படிஒன்பதாவது வீட்டில் சூரியன் இருக்க பிறந்த ஒருவருக்கும் குழந்தைகளும் இருக்காது சொத்துக்களும் இருக்காது. அதன்படி  சத்தியாச்சாரியரின் கூற்றானாது, அத்தகைய மனிதர் தீய செயல்கள் செய்பவராகவும், நோய்வாய் பட்டவராகவும், மிகவும் தாழ்நிலை மனிதராகவும் இருப்பார்.


4.         ஒருவர் பிறக்கும்போது, சந்திரன் இலக்கினத்தில் இருந்தால் அத்தகைய மனிதர் ஊமையாக அல்லது மனநிலை பிறழ்ந்தவராக அல்லது முட்டாளாக அல்லது குருடராக அல்லது செவிடராக இருப்பார்; அவர் சராசரியான வேலைகளைச் செய்பவராக அல்லது அடிமையாக இருப்பார்; உதய இராசியானது கடகமாக அல்லது மேசமாக அல்லது ரிசபமாக இருந்து அதில் சந்திரன் இருந்தால் அந்த மனிதர், முறையே செல்வந்தராகவும், நிறைய குழந்தைகள் கொண்டவராகவும் அல்லது சொத்துக்கள் கொண்டவராகவும் இருப்பார். இலக்கினத்திலிருந்து சந்திரன் 2வது வீட்டில் இருந்தால், அவர் பெரும் குடும்பத்தில் வாழ்பவராக இருப்பார். அது 3வது வீட்டில் இருந்தால், அவர் விலங்குகளைத் துன்புறுத்துபவராக இருப்பார். அது 4வது அல்லது 5வது வீட்டில் இருந்தால், அந்த வீடுகள் கொடுக்கக்கூடிய பயன்கள் அனைத்தையும் முழுமையாகப் பெறுவார்(1). அது 6வது வீட்டில் இருந்தால், அந்த மனிதர் நிறைய எதிரிகளையும், மென்மையான தேகத்தினையும், பசிக்கும் தன்மை குறைபாடு உடையவராகவும், பாலியல் பங்கீட்டாளராகவும் வேலையில் மெத்தனமாகவும் இருப்பார்.


குறிப்பு:(1) அதாவது, இலக்கினத்திலிருந்து சந்திரன் 4வது வீட்டில் இருந்தால், அவர் மகிழ்ச்சியானவராகவும், உறவினர்களும்  வீடுகளும் கொண்டவராகவும், கற்றறிந்தவராகவும் இருப்பார்; அது 5வது வீட்டில் இருந்தால், அந்த மனிதர் புத்திகூர்மையாளராகவும், குழந்தைகள் வாய்க்கப்பெற்றவராகவும் மற்றும் இது போன்று.

பாவங்களில் கோள்கள்.. தொடரும்


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17