வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பகுதி - பன்னிரெண்டு
நபாச யோகங்கள்..தொடர்ச்சி
அக்ரிதி யோகங்கள்
5. சுபக் கோள்கள் இலக்கினத்திலும் 7வது வீட்டிலும் இருக்க, அசுபக் கோள்கள் 4வது மற்றும் 10வது வீட்டில் இருந்தால், அது வஜ்ர யோகம் என அழைக்கப்படும்; அதுவே, தலைகீழாக இருந்தால்(1) அது யவ யோகம் எனப்படும். மேலும், அனைத்து கோள்களும் நான்கு கேந்திரங்களில் இருந்தால், அந்த யோகமானது கமல யோகம்(அப்ஜா யோகம்) எனப்படும், அவை நான்கு பணபர(2) வீடுகளில் அல்லது நான்கு ஆபோக்லிம(3) வீடுகளில் இருந்தால், அந்த யோகமானது வாபி யோகம் எனப்படும்.
குறிப்புகள்:
இந்த பத்தியில் நான்கு அக்ரிதி யோகங்கள் வரையறை செய்யப்பட்டுள்ளன.
(1)
அதாவது, அசுபக் கோள்கள் இலக்கினத்திலும் 7வது வீட்டிலும், சுபக் கோள்கள் 4வது மற்றும் 10வது வீடுகளில்.
(2)
அதாவது, 2வது, 5வது, 8வது மற்றும் 11வது வீடுகளில்.
(3)
அதாவது, 3வது, 6வது, 9வது மற்றும் 12வது வீடுகளில்.
6. நான் இங்கு வஜ்ர(1) மற்றும் இதர யோகங்களை, நமக்கு முந்தைய ஆசிரியர்களின்(2) கருத்திற்கேற்ப, வரையறை செய்திருக்கிறேன். சூரியனிலிருந்து(4) புதனும் சுக்கிரனும் எவ்வாறு 4வது வீடுகளில்(3) இருக்க முடியும்?
குறிப்புகள்:
(1)
அதாவது யவ யோகம் மற்றும் இராஜ யோக பகுதியில் 20வது பத்தியிலிருந்து குறிப்பிடப்படும் யோகங்கள்.
(2)
மாயா, யவனர், காரகர் மற்றும் ஏனையோர்.
(3)
இரண்டு பக்கங்களிலும்: அதாவது சூரியனிலிருந்து 4வது அல்லது 10வது வீடு.
(4)
திருவடி பிரம்ம ஸ்ரீ சுந்தரேஸ்வர ஸ்ருதி அவர்களின் கருத்துப்படி, வஜ்ர, யவ யோகங்களானது கோள்கள் இருக்கும்பாவசக்கரத்தின்படி பார்க்கப்பட வேண்டுமே அல்லாது வராகமிகரரின் கூற்றுப்படி கோள்கள் இருக்கும் இராசி சக்கரத்தின்படி பார்க்கப்படக் கூடாது. ஆகவே, அவரது கருத்துப்படி, காரகர் மற்றும் பிற ஆசிரியர்கள், இந்த யோகங்களை வரையறை செய்ததில் எவ்வித தவறும் செய்யவில்லை என்பதுடன் அவ்வாறு இருக்கக் கூடிய ஒன்றே.
குறிப்பு (நிமித்திகன்):
இதன் தொடர்ச்சியாக, சிதம்பரம் அவர்கள் இது எவ்வாறு சாத்தியப்படக்கூடும் என்பதனை விளக்குவதுடன், பாவச் சக்கரம் என்றால் என்ன என்பது பற்றியும், அது எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என்பதையும், பாவச்சக்கரத்திற்கும் இராசி சக்கரத்திற்கும் உள்ள துள்ளியமான வேறுபாடுகள் ஆகியவற்றையும் விரிவாக விளக்குகிறார். அது நீண்டதொரு கட்டுரையாக இருப்பதால், அதன் மொழிபெயர்ப்பினை இங்கு தவிர்த்து இருக்கிறேன். பாவச்சக்கரம் – இராசிச்சக்கரம் ஆகியவை பற்றி விரிவானதொரு கட்டுரையினை நிமித்திகனில் எழுத இருக்கிறேன், அப்போது பார்க்கலாம்.
நபாச யோகங்கள் .. தொடரும்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment