வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பகுதி - பன்னிரெண்டு
நபாச யோகங்கள்..தொடர்ச்சி
17. அர்த்த சந்திர யோகத்தில் பிறந்த ஒருவர் பொது நலத்தில் அக்கறை கொண்டவராகவும், எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக்கூடியவராகவும், அனைவராலும் மதிக்கப்படுபவராகவும் இருப்பார். சமுத்ர யோகத்தில் பிறந்த ஒருவர் மன்னரைப் போல் வளமாகவும் வசதியாகவும் வாழ்வார். சக்ர யோகத்தில் பிறந்த ஒருவரின் கால்களை அரசனின் மணிமுடியில் இருக்கும் இரத்தினங்கள் பணிவுடனும் மரியாதையுடனும் நெடுஞ்சான்கிடையாக விழுந்து வணங்கி ஒளிபெறச் செய்யும்(1). வல்லகி யோகத்தில் பிறந்த ஒருவர் புத்திக்கூர்மையும், இசை மற்றும் நடனத்தில் ஈடுபாடு கொண்டிருப்பார்.
குறிப்புகள்:
இந்த பத்தியில் ஆசிரியர் மேலும் மூன்று அக்ரிதி யோகங்களையும் சங்க்ய யோகத்தின் முதல் யோகத்தினையும் வரையறை செய்கிறார்.
(1)
அதாவது, உரையாசிரியரின் கருத்துப்படி, அவர் தமது தெய்வீக அறிவாற்றலின் காரணமாக பேரரசர் ஆவார் அல்லது அரசருக்கு அரசர் ஆவார்.
18. தாமினி யோகத்தில் பிறந்த ஒருவர் கொடையாளியாகவும், மற்றவர்களுக்கு உதவி செய்பவராகவும் இருப்பதுடன் நிறைய பசுக்கள் வைத்திருப்பார். பாச யோகத்தில் பிறந்த ஒருவர் தனது வேலையாட்கள் மற்றும் உறவினர்களின் மூலம் உரிய வழியில் சொத்துக்களை சம்பாதிப்பார். கேதார யோகத்தில் பிறந்த ஒருவர் நிலங்கள் வைத்திருப்பதுடன், பலபேருக்கு உதவியாக நல்ல செயல்களைச் செய்வார். சூல யோகத்தில் பிறந்த ஒருவர் சண்டையிடுவதில் பலசாலியாக இருப்பதுடன் விழுப்புண் பெறுவார், பணத்தின்(1) மீது ஆசை கொண்டிருந்தாலும் ஏழ்மையில் வாழ்வார்.
குறிப்புகள்:
இந்த பத்தியில், ஆசிரியர் மேலும் நான்கு சங்க்ய யோகங்களைக் குறிப்பிடுகிறார்.
(1)
வேறு சில நூல்களின் படி, “சித்திரவதை செய்வதில் விருப்பம் உடையவர்”.
19. யுக யோகத்தில் பிறந்த ஒருவர் ஏழையாய் இருப்பதுடன் வேத விதிமுறைகளுக்கு முரணாக இருப்பார். கோள யோகத்தில் பிறந்த ஒருவர், ஏழையாகவும், அழுக்காகவும், வெகுளியாகவும், தாழ்ந்த செயல்களுக்கு அடிமையாகவும், வேலையில் திறமையற்றவராகவும், எப்போதும் இடம் விட்டு இடம் அலைபவராகவும் இருப்பார்(1). இவ்வாறு, பல்வேறு நபாச யோகங்களும் அவற்றின் பலனும் வரையசெய்யப்பட்டுள்ளன. இந்த பலன்கள் ஒரு மனிதனின் வாழ்நாள் முழுமைக்கும் நீடிக்கும்.
குறிப்புகள்:
இந்த பத்தியில், சங்க்ய யோகத்தின் மீதமுள்ள இரண்டு யோகங்களை வரையறை செய்துள்ளார்.
(1)
உரையாசிரியரின் கருத்துப்படி – வெற்று பிழைப்பிற்காக.
(2)
(பத்தி-14-ல் குறிப்பிட்ட) வஜ்ர மற்றும் இதர யோகங்களைத் தவிர, இவற்றின் பலன்கள் ஒரு மனிதனின் குறிப்பிட்ட அந்தர தசைக் காலத்தில் நடைபெறும். இதன்படி, எங்கெல்லாம் கால அளவு குறிப்பிடப்பட வில்லையோ, அங்கு பலன்கள் வாழ்நாள் முழுமைக்கும் உணரப்படும் (பகுதி-8, பத்தி-20 –ன்படி.).
நபாச யோகங்கள் முற்றும்
……..அடுத்து பகுதி -13 - சந்திர யோகங்கள்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment