இது சூரியக் குடும்பத்தின் எட்டாவது கோள். இது 1846-ல் கண்டுபிடிக்கப்பட்ட கோள். இந்தக் கோளைப் பொருத்தவரையில் இது தொலை நோக்கியால் கண்டுபிடிக்கப்படுமுன் கணித சமன் பாடுகளின் படி உறுதி செய்யப்பட்டக் கோள். இது கலிலியோவால் 1613 வாக்கில், ஒரு விண்மீன் என கருதப்பட்டது.
·
இது சூரியனிலிருந்து 450.40 கோடி கி.மீ தொலைவில் உள்ளது.
·
இதன் விட்டம் 49532 கி.மீ.
·
இதன் சுற்றுப்பாதை நியூட்டனின் விதிப்படி இல்லை என வானியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்
·
இது ஒருமுறை சூரியனைச் சுற்றிவர எடுத்துக்கொள்ளும் கால அளவு 164.79 ஆண்டுகள்.
·
இது பனிப்பாறைகளால் ஆன வாயுக் கோள்.
·
இதின் சூழல் ஹைட்ரஜன் மற்றும் கொஞ்சம் ஹீலியம் , மீத்தேன் கொண்டது.
·
நெப்டியூன் நீல வண்ணம் கொண்டது. இதில் உள்ள மீத்தேன் சிவப்புக் கதிர்களை உறிஞ்சுக் கொள்வதாலும், அதன் அறிந்துகொள்ள முடியாத நிற மண்டலம் வெளியிடும் கதிர்களாலும் நீலமாக காட்சி அளிக்கிறது.
·
நெப்டியூனின் காற்றானது மணிக்கு 2400 கி.மீ. வேகத்தில் வீசிக் கொண்டிருக்கிறது. இதுதான் சூரியக் குடும்பத்தில் உள்ளக் கோள்களிலேயே அதிக காற்று வேகம் கொண்டது.
·
இதன் உட்புற வெப்ப மூலகங்களால், இது சூரியனிடமிருந்து பெரும் கதிர் வீச்சினைவிட இருமடங்கு வெளிப்படுத்துகிறது.
·
இதற்கும் கரும்புள்ளி இருக்கிறது. அது பூமியின் விட்டம் அளவில் இருக்கிறது.
·
நெப்டியூனுக்கும் வளையங்கள் உள்ளன.
·
நெப்டியூனுக்கும் நிலவுகள் உள்ளன.
·
சனி மற்றும் வியாழனில் உள்ளது போலவே, இதிலும் ஹட்ரஜன், ஹீலியம், ஹைட்ரோகார்பன், நைட்ரஜன், உள்ளதோடு, அமோனியா மற்றும் மீத்தேனும் உள்ளன.
·
யுரோனசில் உள்ளது போல் நெப்டியூ.னுக்கும் காந்தப்புலம் இருக்கிறது. அது அதன் உட்கூறில் உள்ள பொருட்களால் ஏற்படுகிறது. பூமியின் காந்தப் புலத்தைப் போல் 27 மடங்கு அதிகம்.
(நன்றி: பல்வேறு
இணைய தளங்கள்)
அடுத்து … புளூட்டோ
No comments:
Post a Comment