யான்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள்
சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான்பற்றப்
பற்றத் தலைப்படுந்
தானே.
-
திருமூலர்.
பதிவை மீண்டும் தொடங்குவதற்கு சிறிது காலம் எடுத்துக் கொண்டேன். காரணம், நான் முன்பே கூறியவாறு, என்னை ஓரளவாவது தகுதி படுத்திக்கொண்டு, பின்னர் தான் சோதிடம் பற்றி எழுதவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டதுதான் காரணம். அது தற்போது, நிறைவேறிவிட்டது. ஆம், நான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில், சோதிடவியலில், முதுகலைப்பட்டத்தை முதல் வகுப்பில் பெற்றுள்ளேன் என்பதனை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். சென்ற வாரம்தான் முடிவுகள் வெளியாயிற்று. இனி பதிவுகள் தொடரும்.
இனி சோதிடம் பற்றி, நான் அறிந்ததையும், படித்ததையும், பிறர் கூறக் கேட்டதையும் தொகுத்து, நிமித்திகனில் எழுதமுடியும் என்கின்ற நம்பிக்கை மிகுதியாகவே உள்ளது.
இதுவரையில் நாம் வானியலில் நம் சூரிய மண்டலத்தில் உள்ள கோள்கள் பற்றி தெரிந்து கொண்டோம். ஆனால் சோதிடத்தில் கோள்கள் என்பதன் பொருள் வேறாகவே உள்ளது.
உண்மையில், இரவில் வானில் காணப்படும் அனைத்தும் கோள்களும் அல்ல அனைத்தும் வின்மீன்களும் அல்ல. சுருங்கச் சொன்னால், அவற்றை நாம் உற்று நோக்கும்போது, அவை மின்னும் தன்மைக் கொண்டிருந்தால், அவை நிச்சய்ம் வின்மீன்கள். மின்னாமல், நிலையான ஒளியைத் தந்தால் கோள்கள்.
அதாவது, வின்மீன்கள் இயற்கையில் ஒளியை உமிழ்பவை. கோள்கள், வின்மீன்களிடமிருந்து ஒளியை வாங்கி, பிரதிபலிப்பவை.
ஆனால், சோதிடத்தில் கோள்களின் இலக்கணமே வேறு. அவற்றை ஒரு அட்டவனையில் காண்போம்.
வானியல் – சோதிடம் – கோள்கள் - ஒப்பு நோக்கில்
பெயர்
|
வானியலில்
|
சோதிடத்தில்
|
குறிப்பு
|
சூரியன்
|
வின்மீன்
|
கோள்
|
வானியலில்
சூரியன்
மையம்
|
புதன்
|
கோள்
|
கோள்
|
|
வெள்ளி
|
கோள்
|
கோள்
|
|
பூமி
|
கோள்
|
-
|
சோதிடத்தில் பூமிதான் மையம்
|
சந்திரன்
|
பூமியின் துணைக்
கோள்
|
கோள்
|
|
செவ்வாய்
|
கோள்
|
கோள்
|
|
வியாழன்
|
கோள்
|
கோள்
|
|
சனி
|
கோள்
|
கோள்
|
|
யுரோனஸ்
|
கோள்
|
-
|
மேலைநாட்டு சோதிடத்தில் கோள்
|
நெப்டியூன்
|
கோள்
|
-
|
மேலைநாட்டு சோதிடத்தில்
கோள்
|
புளோட்டோ
|
கோள்
தகுதி
பறிக்கப்பட்டது
|
-
|
மேலைநாட்டு சோதிடத்தில்
கோள்
|
இராகு
|
-
|
நிழற்கோள்
|
நமது
சோதிடத்தில் நிழற்கோள்
|
கேது
|
-
|
நிழற்கோள்
|
நமது
சோதிடத்தில் நிழற்கோள்
|
ஆக, வானியலிற்கும் சோதிடத்திற்கும் கோள்களை வரையறைப் படுத்துதலில் நிச்சயம் வேறுபாடுகள் நிலவுகின்றன.
அது ஏன் என்பதையும், வானியல், சோதிடத்தில் எவ்வாறு மாற்றிக் கணக்கிடப்படுகிறது என்பதையும் இனி வரும் பதிவுகளில் விரிவாகக் காண்போம்.
2 comments:
அருமை.
நன்றி.
மிக்க நன்றி, உங்களைப் போன்ற பெரியவர்களின் ஆசி எப்பொழுதும் எனக்கு வேண்டும்.
Post a Comment