(1)
பிரபஞ்ச அடிப்படை அல்லது ஐம்பூத அடிப்படை:
முன்
பதிவில் கூறிய ஒன்பது பிரிவுகளில் முதன்மையானது, பிரபஞ்ச அடைப்படை அல்லது ஐம்பூத அடிப்படையாகும்.
இந்த பிரபஞ்சமானது ஐம்பூதத் தத்துவத்தில் இயங்குவதாக சொல்லப்படுகிறது. அவை முறையே – நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகும். இது அறிவியல் உண்மையாய் இருந்தாலும், பெரும்பாலன மதங்களும் இதனை ஏற்றுக் கொண்டுள்ளன.
இந்தத் தத்துவத்தை, இராசிகளை வகைப்படுத்துதலிலும் சோதிட அறிஞர்கள் பின்பற்றியுள்ளனர். அதாவது, இராசிகளை ஐம்பூதங்களின் (பஞ்சபூதத்தத்துவம்) அடிப்படையில் பிரித்துள்ளனர். ஒவ்வொரு இராசியும் ஏதேனும் ஒரு தத்துவத்தைச் சார்ந்து இருப்பதாக வகைப்படுத்தியுள்ளனர். அவை முறையே-
அதாவது, பன்னிரெண்டு இராசிகளும், தலா மூன்று இராசிகளாக, நான்கு பிரிவுகளுக்குள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. பஞ்ச பூதம் என்பது ஐந்து பிரிவுகள் கொண்டது. ஆனால் இங்கு ஐந்தாவது பிரிவான ஆகாயம் வகைப்படுத்தப்படவில்லை.
இதற்கு ஏற்புடைய விளக்கம் என்னவெனில், இந்த பிரபஞ்சம் அல்லது இந்த பூமியானது ஐந்து பூதங்களால் ஆனதாக இருந்தாலும், ஆகாயத்திற்குள்ளேதான் அனைத்தும் அடங்கி இருக்கிறது. இராசி மண்டலமும் அண்ட வெளிக்கு உள்ளேயே, அதாவது ஆகாயத்தில் அடங்கி இருப்பதால், அனைத்து இராசிகளும் அதற்குள்ளேயே அடங்கி விடுகிறது. எனவே, தனியாக ஆகாயத்திற்கென்று இராசிகளை வகைப்படுத்தாமல், மீதமுள்ள நான்கு நிலைகளிலேயே இராசி மண்டலம் பிரிக்கப்பட்டுள்ளது. இது ஏற்புடைய விளக்கமே.
அதே நேரத்தில், வேறொரு பார்வையில், கணக்கீட்டிற்காக ஆகாய நிலை விடுபட்டிருக்கலாம் எனும் கருத்தும் தோன்றுகிறது. ஏனெனில், 28 விண்மீன்கள் தொகுப்புகள் கொண்ட வான் மண்டலம், பன்னிரெண்டு இராசிகளுக்கும் சமமாகப் பிரித்து அளிக்கப்பட வேண்டியக் கட்டாயத்தில், அபிசித்து எனும் விண்மீன் தொகுப்பினை மற்ற விண்மீன் தொகுப்புகளுடன் இணைத்து, 27 விண்மீன் தொகுப்புகளாகக் குறைத்துக் கணக்கெடுத்து, ஒரு இராசிக்கு இரண்டேகால் விண்மீன்கள் என கணக்கிட்டதை நாம் ஏற்கனவே பதிவு செய்துள்ளோம். அது போலவே, ஐந்து பூதங்களைப் பன்னிரெண்டு இராசிகளுக்குச் சமமாகப் பிரிக்க முடியாது என்பதால், ஆகாயத்தைத் தவிர்த்தும் இருக்கலாம்.
இனி, எந்த அடிப்படையில் இவை நிலம், நீர், நெருப்பு, காற்று என பிரிக்கப்பட்டுள்ளன என்பதை அடுத்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
No comments:
Post a Comment