வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பகுதி - பதினான்கு
இரட்டைக் கோள்களின் யோகங்கள்… தொடர்ச்சி
5. பிறக்கும் பொழுது, இராசியில் உள்ள ஒரு வீட்டில் இரட்டைக் கோள்களாக வெள்ளியும் சனியும் ஒன்றாக இருந்தால் அந்த மனிதர் கிட்டப்பார்வை உடையவராகவும், ஒரு இளம் பெண்ணின் நட்பின் மூலமாக தனது செல்வத்தை உயர்த்திக் கொள்பவராகவும், எழுத்து மற்றும் ஓவியங்களில் திறமை மிக்கவராகவும் இருப்பார். மற்ற கோள்களின் யோகங்களைப் (1) பொருத்தமட்டில், இங்கே குறிப்பிடப்பட்ட பலன்களின்படி தீர்மானித்து, முடிவு செய்ய வேண்டும்.
குறிப்புகள்:
(1)
அதாவது, பிறக்கும்போது, மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட கோள்கள் இராசியில் ஒரே வீட்டில் இருந்தால், அந்த யோகமானது முதலில் இரட்டைக் கோள்களாகப் பிரிக்கப்பட்டு, இந்த பகுதியில் குறிப்பிடப்பட்டவாறு அவைகளின் பலன்களை தீர்மானித்து பின்பு ஒட்டு மொத்தமாகத் தீர்மானிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, ஒருவேளை சூரியன், சந்திரன், செவ்வாய், புதன் ஆகியவை ஒன்றாக ஒரு இராசியில் இருப்பதாகக் கொள்வோம். இந்த யோகமானது ஆறு இரட்டை யோகங்களாக, முறையே: (1) சூரியன் சந்திரன், (2) சூரியன் செவ்வாய், (3) சூரியன் புதன், (4) சந்திரன் செவ்வாய், (5) சந்திரன் புதன், (6) செவ்வாய் புதன் என பிரிக்க வேண்டும். ஒவ்வொன்றின் பலனையும் தீர்மானித்து பின்பு முழுமையாக முடிவு செய்ய வேண்டும்.
குறிப்புகள் (நிமித்திகன்):
திரு சிதம்பரம் அவர்கள், இதன்படி பல்வேறு இரட்டை யோகங்களின் தொகுப்பினையும், இரண்டிற்கும் மேற்பட்ட கோள்கள் ஒரே இராசியில் இருந்தால் ஏற்படும் பலன்களையும், ஜாதக பாரிசாதம் எனும் நூலின் அடிப்படையில் வரையறை செய்கிறார். யோகங்கள் பற்றிய ஆய்வுப் பதிவினை நிமித்திகனில் பதிவிடும்போது அவைகளைப் பற்றி விரிவாகக் காண்போம்.
இரட்டைக் கோள்களின் யோகங்கள் – முற்றும்
... அடுத்து துறவறம் (சன்னியாசி) யோகம்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment