வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பகுதி - பதின்மூன்று
இரட்டைக் கோள்களின் யோகங்கள்… தொடர்ச்சி
3. பிறக்கும் பொழுது, இராசியில் உள்ள ஒரு வீட்டில் இரட்டைக் கோள்களாக செவ்வாயும் புதனும் ஒன்றாக இருந்தால் அந்த மனிதர் கிழங்குகள் மற்றும் அதுபோன்றவை(1), எண்ணெய், கலை வேலைப்பாடுகள், ஆட்டங்கள் ஆகியவற்றில் ஈடுபடுவார்; செவ்வாயும் வியாழனும் ஒரு வீட்டில் ஒன்றாக இருந்தால் அந்த மனிதர் ஒரு நகரத்தின் தலைமை அதிகாரியாகவோ அல்லது அரசராகவோ அல்லது வசதிமிக்க வேதியராகவோ(2) இருப்பார்; செவ்வாயும் வெள்ளியும் ஒரு வீட்டில் ஒன்றாக இருந்தால் அந்த மனிதர் பசுக்களை பாதுகாப்பவராகவும், ஆட்டங்களில் ஈடுபாடுகொண்டவராகவும், வேலையில் திறமை மிக்கவராகவும், பிற ஆடவரின் மனைவியருடன் உறவு கொள்பவராகவும், சூதாடியாகவும் இருப்பார்; செவ்வாயும் சனியும் ஒன்றாக ஒரு வீட்டில் இருந்தால் அந்த மனிதர் வறுமையால் பார்க்கப்படுபவராகவும், பொய்யராகவும், பிறரால் வெறுத்து ஒதுக்கப்பட்டவராகவும் இருப்பார்.
குறிப்புகள்:
(1)
பழங்கள், பூக்கள், பட்டைகள், சாறுகள் போன்றவை
(2)
அல்லது கற்றறிந்தவர் – வேறு நூலின் படி.
4. பிறக்கும் பொழுது, இராசியில் உள்ள ஒரு வீட்டில் இரட்டைக் கோள்களாக புதனும் வியாழனும் ஒன்றாக இருந்தால் அந்த மனிதர் ஆட்டத்திறன் கொண்டவராகவும், இசையில் ஆர்வம் உடையவராகவும், நடனங்களைத் கற்றுத் தேர்ந்தவராகவும் இருப்பார்; புதனும் வெள்ளியும் ஒரு வீட்டில் ஒன்றாக இருந்தால் அந்த மனிதர் ஒரு நல்ல பேச்சாளராகவும், நாடுகளையும் மக்களையும் ஆள்பவராக இருப்பார்; புதனும் சனியும் ஒன்றாக இருந்தால் அந்த மனிதர் மற்றவர்களை ஏமாற்றி பிழைப்பவராகவும், மூத்தோர்களின் அறிவுரையை ஏற்காதவராகவும் இருப்பார். வியாழனும் வெள்ளியும் ஒன்றாக இருந்தால், ஒரு குறிப்பிட்ட துறையில் கற்றறிந்த அறிஞராக இருப்பதுடன், செல்வமும், மனைவியும், நல்லொழுக்கமும் கொண்டவராக இருப்பார்; வியாழனும் சனியும் ஒன்றாக இருந்தால், அந்த மனிதர் நாவிதராகவோ அல்லது படகோட்டியாகவோ அல்லது சமையற்காரராகவோ இருப்பார்.
இரட்டைக் கோள்களின் யோகங்கள்… தொடரும்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment