இராயல் வானியல் சங்கம், இலண்டன் (Royal Astronomical Society, London), வான் மண்டலத்தில் உள்ள இராசி மண்டலத்தின் விண்மீன் கூட்டத்தை (zodiac) மறு ஆய்வு செய்து 13 மண்டலங்களாகப் பிரித்துள்ளது. அதில் புதிதாக சேர்க்கப்பட்ட பிரிவானது ophiuchus எனும் உச்சிமண்டலம் ஆகும். பொதுவாக 12 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்ட இராசி மண்டலம் என்பது வானியல் அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும். இந்த இராசி மண்டலத்தை வானியல் அறிஞர்களும் சோதிட அறிஞர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இராசி மண்டலத்தை வைத்து சோதிடம் சொல்லாமா என்பதில்தான் கருத்துவேறுபாடு உள்ளதே தவிர, இராசி மண்டலத்தை யாவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
அதே நேரத்தில், இந்த பன்னிரெண்டு பிரிவுகள் கொண்ட இராசி மண்டலத்தை பன்னெடுங்காலத்திற்கு முன்பே, நமது வானியல் அறிஞர்களும், சோதிட அறிஞர்களும் அறிந்து வைத்து கணிதம் செய்துள்ளனர். அதே போல், யவணர்களும், பாபிலோனியர்களும் நமக்கு ஈடாகவே அறிந்து வைத்திருந்தனர். இதனைத் திரு சிதம்பரம் ஐயர் அவர்கள் தமது “பிருகத் ஜாதகா” ஆங்கில மொழிபெயர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார். அதனால்தான், நமது இராசி மண்டல அமைப்பும், மேலை நாட்டு அமைப்பும் ஒன்றாகவே உள்ளன. அதாவது, சூரியனின் ஓராண்டு கால நிகழ்வினை, பூமி மையக் கொள்கை அடிப்படையில், கணக்கிட்டு காலவகை செய்துள்ளனர்.
![]() |
சூரியனின் பயணம் |
இராசி மண்டலத்தில் உள்ள பன்னிரெண்டு இராசிகளும் விண்மீன்களின் தொகுப்பாக இருந்தபோதிலும், அந்த விண்மீன் தொகுப்புகளை மேலும் பிரித்து, 27 விண்மீன் தொகுப்புகளாக வகைப்படுத்தி வான்கணிதம் செய்திருந்தனர் நம் அறிஞர் பெருமக்கள். அவை முறையே அசுவனி, பரணி எனத் தொடங்கும் நிலையில், அவற்றின் வடமொழிப் பதங்களும், மேலை நாட்டுப் பதங்களும் இணையாக உள்ளதைக் காணும்போது வியப்பு உண்டாகிறது. அவற்றின் பதங்களை “பிருகத் ஜாதகா” ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து பதிவிடுகிறேன்.
எனவே வான்மண்டலக் கணிதம் என்பது, வானியல் மற்றும் சோதிடவியல் ஆகிய இரண்டிற்கும் பொதுவானதாகவே இருந்திருக்கிறது.
இனி இராசி மண்டலமானது சோதிடக் கணிதத்தில் இராசிச் சக்கரம் ஆனதைப் பின்வரும் பதிவுகளில் காண்போம்.
No comments:
Post a Comment