வான் மத்தியக் கோட்டிற்கும், புவி மத்தியக் கோட்டிற்கும் சிறிது கோண வித்தியாசம் இருப்பதாகப் பார்த்தோம். வான் மண்டலத்தில் சூரியக் குடும்பமானது, சூரியனின் தலைமையில், தத்தமது பாதையில் நீள்வட்டத்தில் சுற்றி வருகின்றன. சூரியனின் சுற்றுப்பாதை, வான் மத்தியக் கோட்டிற்கு (celestial equator) இணையாக அதாவது 1800 கோணத்தில் சுற்றிவரவில்லை. சற்று சாய்வாகவே சுற்றி வருகிறது.
எனவே, சூரிய சுற்றுப் பாதைக்கு அருகில் இருக்கும் விண்மீன் கூட்டங்களின் தொகுப்பிற்கும், வான்மத்திய கோட்டிற்கு அருகில் இருக்கும் விண்மீன் கூட்டங்களின் தொகுப்பிற்கும் எண்ணிக்கை மாறுபடுகிறது. வான் மத்தியக் கோட்டின் கணக்கின்படி 15 கூட்டங்கள்(மொத்தம் 88 கூட்டங்களின் சுருக்கம்) என்றாலும், சூரிய சுற்றுப்பாதையின்படி 13 கூட்டங்கள் உள்ளன. அதனை இராசி மண்டலம் (Zodiac) 12 மற்றும் உச்சி மண்டலம் (Ophiuchus) ஒன்று எனக் கூறுகின்றனர். அவை முறையே:
Capricornus
|
|||||
இது பொதுவாக வானியல் ஆய்வாளர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட கணக்கீடு ஆகும். ஆனால் நமது இந்திய மற்றும் இலத்தின், கிரேக்க வானியல் அறிஞர்கள், சூரியனின் சாய்கோண சுற்றுப் பாதையின் மையப்புள்ளியில் இருந்து மேலும் கீழழுமாக 90 பாகை விரிவில் அடங்கியுள்ள விண்மீன் கூட்டங்களை எடுத்துக் கொண்டு வான் மண்டலத்தின் எல்லையினை வரையறை செய்துள்ளனர்.
அவ்வாறு வரையறை செய்யும்போது, அதில் அடங்கியுள்ள வின்மீண் கூட்டங்களின் எண்னிக்கையையும் வகைப்படுத்தி, அவைகளை பன்னிரெண்டு இராசி மண்டலங்களுக்குள் (Zodiac), தொகுத்துள்ளனர்.
பன்னிரெண்டு ராசி மண்டலங்கள் என்பன, சூரிய வான்மண்டலத்தினை, மொத்த கோண அளவான 3600 பாகையினை 300
பாகை கோண அளவில், மொத்தம் பன்னிரெண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டதாகும். அவற்றிற்கு அந்த விண்மீன் தொகுதிக் கூட்டங்களின் பெயரினையே வைத்துள்ளனர்.
பொதுவாக இராசி மண்டலம் என அழைக்கப்பட்டாலும் அவை விண்மீன் தொகுதிகளே ஆகும்.
இதுபற்றி மேலும் இனிவரும் பதிவுகளில் பார்ப்போம்.
No comments:
Post a Comment