Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Monday, July 17, 2017

வர்க்கோத்தம பலன்கள் - பிருகத் ஜாதகா – 167


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்




பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  இருபத்து இரண்டு

பல்வேறு யோகங்கள்

4.         ஒருவர் பிறக்கும்போது உதய நவாம்சம் வர்க்கோத்தமம் இருந்தால் அல்லது சந்திரன் வர்க்கோத்தம நிலையில் இருந்தால், அவர் மகிழ்சியாகவும் வளமுடனும் இருப்பார். ஒருவர் பிறக்கும்போது சூரியனிலிருந்து இரண்டாவது வீட்டில் சுபக் கோள்கள் இருந்தால்(1) அல்லது கேந்திரத்தில் எவ்வித கோள்களும்(2) இல்லாது இருந்தாலும் மேற்கூறிய பலன்கள் கிடைக்கும். மேலும் ஒருவர் பிறக்கும்போது, காரகக் கோள்கள் இராசி சக்கரத்தில் அவைகளின் வீடுகளில் இருந்தால், அவர் மகிழ்ச்சியுடனும் வளமுடனும் வாழ்வார்.


குறிப்பு:

(1)  புதன், வியாழன் அல்லது சுக்கிரன் – உரையாசிரியரின் கருத்துப்படி.
(2)  ஏதேனும் ஒரு கேந்திரத்தில் இருந்தால், அந்த மனிதர் மகிழ்ச்சியுடன் இருப்பார்; இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கேந்திரங்களில் இருந்தால் மிக்க மகிழ்ச்சியுடனும், மேலும் அதில் உள்ள கோள்கள் சுபக்கோள்களாக இருந்தால், அளவுக்கு அதிகமான மகிழ்ச்சியுடனும் வளமுடனும் வாழ்வார்.


குறிப்பு (நிமித்திகன்):அல்லது கேந்திரத்தில் எவ்வித கோள்களும்(2) இல்லாது இருந்தாலும்” (or the Kendra houses may happen to be occupied by no planets at all)  என வரையறை செய்யப்பட்டுள்ளது. ஆனால், திரு சிதம்பரம் அவர்களின் குறிப்பு(2)-ல் கேந்திரத்தில் கோள்கள் இருந்தால் மகிழ்ச்சியாக இருப்பர் என எழுதியுள்ளார். அறிந்தவர்கள் விளக்கவும்.



பல்வேறு யோகங்கள்.. தொடரும்




முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17



No comments: