வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி - இருபத்து மூன்று
பெண்களின் சாதகம்
15. ஒரு பெண் பிறக்கும் நேரத்தில், சனியானது வலிமை
மிக்கதாகவே அல்லது வலிமைகுறைவு ஆகிய இரண்டு நிலையிலும் இல்லாமல் இருக்க, சந்திரன்,
சுக்கிரன் மற்றும் புதனானது வலிமை குறைந்து இருக்க, சூரியன், செவ்வாய், வியாழன் ஆகியவை
வலிமை மிக்கதாகவும், உதய இராசியானது ஒற்றைப்படை இராசியாகவும் இருந்தால், அந்த பெண்,
ஆணின் குணாதிசயம் கொண்டவராக இருப்பார்(1)
ஒரு பெண்
பிறக்கும் நேரத்தில், வியாழன், செவ்வாய், சுக்கிரன், புதன் ஆகியவை வலிமை மிக்கவையாக
இருக்க, உதய இராசியானது இரட்டைப்படை இராசியாக இருந்தால், அந்த பெண் பெறும் புகழ்பெற்றவராக
இருப்பதுடன், பெறும் படிப்பாளியாகவும், ஆன்மீக அறிவியலில் கரைதேர்ந்தவராகவும் இருப்பார்.
குறிப்பு:
(1) வேறு சிலரின் கருத்துப்படி, அந்த பெண் நிறைய ஆண்களிடம் மகிழ்ச்சி அடைவார்.
16. ஒரு பெண் பிறக்கும் நேரத்தில், உதய வீட்டிலிருந்து
7வது வீட்டில், ஒரு அசுபக் கோள் இருக்க, 9வது வீட்டில் சில கோள்கள் இருக்க, அந்த பெண்,
சந்தேகம் இல்லாமல், 9வது வீட்டில் இருக்கும் கோளின் தன்மைக்கேற்ப, நிச்சயம் சன்னியாசி
ஆவார்(1).
இந்த
பகுதியில் கூறப்பட்டவை அனைத்தும், கோள்களின் நிலையினைப் பொருத்து, அப்பெண்ணின் திருமணக்
கொடையாக கணக்கிடப்படுவதுடன், அத்தகைய திருமணக் கொடையானது(2) கேள்வி கேட்கப்படும் நேரத்திற்கேற்ப
தீர்மானிக்கப்பட வேண்டும்.
குறிப்பு:
(1) மேலும்,
7வது இடத்தில் இருக்கும் கோள்களுக்காக ஏற்கனவே கூறப்பட்ட இதர பலன்கள் கிடைக்காது.
(2) இருப்பினும்
அத்தகைய பலன்கள், பிருகத் சம்கிதையில் திருமணம் பற்றிய பகுதி 100 மற்றும் 103-ல் குறிப்பிடப்பட்ட
பலன்களுக்கு முரண்படக்கூடாது.
பெண்களின்
சாதகம் முற்றும்
அடுத்து
.. பகுதி 25 - இறப்பு
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment