வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி - இருபத்து மூன்று
பெண்களின் சாதகம்
13. ஓரு பெண் பிறக்கும் நேரத்தில், உதய இராசியில் சந்திரன்
மற்றும் சுக்கிரன் இருந்தால், அந்த பெண் பிறர் நலனைக் கண்டு பொறாமைப் படுபவராகவும்,
தமது வசதியைப் பற்றிய தற்சிந்தனை மட்டுமே உடையவராகவும் இருப்பார்; உதய இராசியில் சந்திரன்
மற்றும் புதன் இருந்தால், அந்த பெண் நுண்கலைப் பயின்றவராகவும், வசதியை அனுபவிப்பவராகவும்,
நல்ல குணாதிசயங்கள் கொண்டவராகவும் இருப்பார்; உதய இராசியில் சுக்கிரன் மற்றும் புதன்
இருந்தால் அந்த பெண் அழகியாகவும், அவரது கணவரால் பெரிதும் விரும்பப் படுபவராகவும், பாடகியாகவும் இசைக் கருவிகளைப் பயன்படுத்துபவராகவும்
இருப்பார்; உதய வீட்டில் சந்திரன், புதன், சுக்கிரன் ஆகியவை இருந்தால், மிக்க செல்வந்தராகவும்,
வசதியான வாழ்க்கை உடையவராகவும், நற்குணங்கள் கொண்டவராகவும் இருப்பார். உதய இராசியில்
புதன், வியாழன், சுக்கிரன் இருந்தாலும், மேற்கூறிய பலன்களே இருக்கும்.
14. ஓரு பெண் பிறக்கும் நேரத்தில், இலக்கினத்திலிருன்து
8வது வீட்டில் அசுபக்கோள்கள் இருக்க, அந்த பெண் விதவையாவார், அந்த விதவை நிலையானது(1)
8வது வீட்டின் அதிபதி நவாம்சத்தில் இருக்கும் வீட்டின் அதிபதியின் அந்திரத்தில் நடைபெறும்.
8வது வீட்டில் அசுபக்கோள்கள் இருக்க, 2வது வீட்டில் சுபக்கோள் இருந்தால், அந்த பெண்,
தனது கணவருக்கு முன்பாகவே இறப்பார், மேலும் சந்திரனானது கன்னி, விருச்சிகல், ரிசபம்
அல்லது சிம்மத்தில் இருந்தால், அவருக்குக் குறைவான குழந்தைகளே இருக்கும்.
குறிப்பு
(1): உரையாசிரியரின் கருத்துப்படி, திருமணத்திற்கு பிறகு.
குறிப்பு(நிமித்திகன்):
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள அந்திர திசை என்பது, வராகமிகிரரின் கணக்கீட்டின்படி வரும்
தசாக்கால முறையாகும். தற்போது நடைமுறையில் உள்ள விம்சோத்திரி முறையினை அவர் குறிப்பிடவில்லை.
….பெண்களின்
சாதகம்.. தொடரும்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment