வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி - பதினெட்டு
இராசிகளில் பிறக் கோள்கள் தொடர்ச்சி…
10. சிம்மத்தில் புதன் இருக்கும்போது பிறந்த ஒருவர் பெண்களால் வெறுக்கப்படுபவராக இருப்பார்; ஏழையாக இருப்பார்; வசதியற்றவராகவோ அல்லது குழந்தைகள் இன்றியோ இருப்பார்; இடம் விட்டு இடம் செல்பவராக இருப்பார்; வெகுளியாக இருப்பார்; பெண்களின்மீது ஆசை கொண்டவராக இருப்பார்; அவமதிப்புக்கு உள்ளாவார்.
கன்னியில் புதன் இருக்கும்போது பிறந்த ஒருவர் தானம் வழங்குவதில் தாராளமானவராக இருப்பார்; கற்றறிந்தவராக இருப்பார்; பல நற்குணங்களைக் கொண்டிருப்பார்; வசதியானவராக இருப்பார்; அமைதியான குணம் கொண்டவராக இருப்பார்; தனித்துவமானவராகவும் பயமற்றவராகவும் இருப்பார்.
11. மகரத்தில் அல்லது கும்பத்தில் புதன் இருக்கும்போது பிறந்த ஒருவர் பிறருக்காக உழைப்பவராக இருப்பார்; ஏழையாக இருப்பார்; சிற்பியாக இருப்பார்; கடனில் வாழ்பவராக இருப்பார், ஊதியம் இல்லாமல் பணியாற்றுபவராக இருப்பார்.
தனுசுவில் புதன் இருக்கும்போது பிறந்த ஒருவர் அரசர்களால் மதிக்கப்படுபவராக இருப்பார்; அறிவியலும் சட்டமும் பயின்றவராக இருப்பார்.
மீனத்தில் புதன் இருக்கும்போது பிறந்த ஒருவர் பிறரை நண்பராக்கிக் கொள்வதில் திறமையானவராக இருப்பார்; பிறரின் எண்ண ஓட்டத்தை எளிதில் அறிந்து கொள்ளக்கூடியவராக இருப்பார்; தாழ்குல மக்களின் கைத்தொழிலினை, அதாவது செருப்புத் தைத்தல் போன்றவை, கற்றறிந்தவராக இருப்பார்.
இராசிகளில் பிறக் கோள்கள் தொடரும்…
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment